பச்சிளம் பாலகியின் பரவசமான பரத நாட்டிய அரங்கேற்றம்! – வீரகேசரி மூர்த்தி

abissha-1cஒன்பது வயதுச் சிறுமியான செல்வி அபிஷா செல்வமோகனின் பரத நாட்டிய அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு அண்மையிலே கிடைத்தது. பத்தோடு பதினோராவது அரங்கேற்றமாக இருக்குமென எண்ணிக் கொண்டு சென்ற எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனக்கு மாத்திரமல்ல ஏனைய அனைவருக்குமே ஆச்சரியமாகத் தான் இருந்தது என்பதனை அவர்களது பலத்த கரகோஷங்களின் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அபிஷா செல்வமோகனின் பரநாட்டிய நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை இங்கே காணலாம்

abi-1ஆடற் செல்வி அபிஷா செல்வமோகனின் முழுமையான கலையாற்றலைக் காண்போம் வாரீர்! -ஆர்.என். லோகேந்திரலிங்கம்

வடமொழியானது தனது செல்வாக்கை இந்த அற்புதக் கலை வடிவத்தின் மீது செலுத்திய வண்ணம் இருக்க, தமிழ்நாட்டிற்குரிய ஒருகலை வடிவமாகத் திகழ்ந்த பரதநாட்டியம் தற்போது உலகெங்கும் பரந்து விரிந்து தன் பாதங்களைப் பதித்தவண்ணம் அழகுமங்கையர்க்கு மேலும் அழகூட்டிவருகின்றது. ஆற்றல்  நிறைந்தவரை அணைத்து தொடர்ந்து அழைத்துச் செல்லுகின்றது.இவ்வாறான அற்புதக் கலையை பயிலும் ஒரு நடனமங்கை அல்லது ஒரு ஆடவன் தனது பாதங்களை அடித்தளமாகக் கொண்டு ஒரு நடனத்தை பார்வையாளர்களுக்கு சமர்ப்பித்தாலும், தனது உடல் உறுப்புக்கள் மற்றும் உணர்வுகள்  போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆடுதலே இந்த பரதநாட்டியத்தின் சிறப்பு என்று சொல்லலாம்.

 

கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய வருடாந்ததேர் திருவிழா! -2015

Iyappan Ther-2015-1aகனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று 01-08-2015 சனிக்கிழமை தேர் திருவிழா ஆயிரக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் புடைசூழ இனிதே நடந்தேறியது. அதிகாலை அபிசேகத்துடன் பூசைகள் ஆரம்பமாகி வசந்தமண்டப பூசையை தொடர்ந்து ஐயப்பன் வினாயகப்பெருமான் சுப்பிரமணியப்பெருமான் சகிதம் உள்வீதி வலம் வந்து காலை 09.30 மணிக்கு தேரில் ஆரோகணித்தார். அதனைத்தொடர்ந்து முத்தேர் பவனி இடம்பெற்று தேர் இருப்பிடத்தை அடைந்ததும் அர்ச்சனைகள் இடம்பெற்று தொடர்ந்து பச்சை சாற்றி தேரில் இருந்து இறங்கும் நிகழ்வும் தொடர்ந்து நவசக்தி அர்ச்சனையும் பிராய்ச்சித்த அபிசேகமும் தேர் திருவிழா இனிதே நிறைவுற்றது.

“குமரி முதல் சென்னை வரை” ( பயணக் கதை )“கற்றபின் நிற்க….” (உரைகளின் தொகுப்பு) ஆகிய நூல்களின் அறிமுக விழா

Book Release1aகிழக்கிலங்கையில் பிரபல எழுத்தாளர் “நவம் எழுதிய “ குமரி முதல் சென்னை வரை“ (பயணக் கதை) மற்றும் தமிழ்நாட்டு எழுத்தாளர் திருவள்ளுவர் சேதுராமன் எழுதிய “கற்றபின் நிற்க..“ (உரைகளின் தொகுப்பு )ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா 31.07.2015 அன்று மாலை 7.00 மணிக்கு Golden Cultural Event Center, 3001 Markham Road, Unit 10 இல் தமிழ்க் கல்லூரி தலைவர் திரு.வி. தரைராஜா அவர்களின் தலைமையில் பல இலக்கியவாதிகளின் உரைகளுடன் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

சுபதா தேவமனோகரனின் Odyssey (Diary of a Dancer)

odyssey-Markham Theatre of Performing Arts மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இளம் நடனத் தாரகை சுபதா தேவமனோகரனின் மிகச் சிறந்த நெறியாள்கையில் முற்றிலும் இளம் கலைஞர்கள் பங்குபற்றிய Odyssey (Diary of a Dancer)  என்னும் நாட்டிய நிகழ்வு மண்டபம் நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

கனடா நாட்டிற்கு ஓர் மணிமகுடம்:

canada flagஉலகளவில் மதிப்பு மிக்க நாடுகளின் பட்டியலில் கனடாவிற்கு முதல் இடம் 

சர்வதேச அளவில் மக்களால் அதிகம் போற்றி புகழப்படும் மதிப்பு மிக்க நாடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் கனடா நாட்டிற்கு முதல் இடம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Reputation Institute என்ற நிறுவனம் ஒரு நாட்டின் சுற்றுச்சூழல், அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கி மக்களால் அதிக அளவில் புகழப்படும் நாடுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. 

நங்கூரி – உண்மைச் சம்பவம் – (குரு அரவிந்தன் – கனடா)

' என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண்    முன்னாலேயே…’

இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. 

அது கொழும்பு துறைமுகம்…

ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன். 1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில் வந்திருந்தது.

“ஆடற் கலையின் சிறந்த நட்சத்திரம் மொனிஷா”

Moni-Bara-1 அரங்கேற்ற விழாவில் வி.எஸ்.துரைராஜா புகழாரம்

“ஆய கலைகள் அறுபத்தி நான்கினில் பரதக் கலையும் ஒன்றாகும். தமிழ் மொழியின் வழக் கொழிந்து போயுள்ள ஆபிரிக்க நாட்டில் கூட பரதக் கலை சிறப்பு பெற்றிருக்கிறது. ஆடற் கலையின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு இக்கலை வளர்க்கப்பட்டு வருகின்றது. உலகெங்கும் மொத்தம் ஏழாயிரத்தி நூற்றி ஐந்து (7105) மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஆறு மொழிகள் மாத்திரம் செம்மொழி என்ற பெருமையினைப் பெற்றுள்ளன. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்றாகும்.

கனடாவில் வெகு விமரிசையாக இடம்பெற்ற மிஸ் தமிழ் கனடா – 2015 விருது வழங்கும் விழா

Miss Tamil Canada -1aகனடாவின் மார்க்கம் நகரில் உள்ள ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் (HILTON SUITES INTERNATIONAL) மண்டபத்தில் மிஸ் தமிழ் கனடா – 2015 (MISS TAMIL CANADA – 2015) விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது. 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் 14 இளம் போட்டியாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள். Toronto Arajen Beauty Centre அழகுக்கலை நிறுவனம் நடத்திய மேற்படி விழாவில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்.

கனடா மொன்றியல் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலய (புதிய) தேர்த்திருவிழா நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு

செவ்வாய்க்கிழமை 06-30-2015 அன்று நடைபெற்ற மொன்றியல் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலய (புதிய) தேர்த்திருவிழா நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை இங்கே காண்கிறீர்கள்

சொப்கா மன்றத்தின் கனடாதின விழா – 2015

SOPCA_1aசொப்கா மன்றத்தின் கனடாதின விழா – 2015

புலம்பெயர்ந்த மண்ணில் பீல் பிரதேச தமிழர்களின் பெருமுயற்சியால் சொப்கா (SOPCA) என்ற பெயரில் பீல்பிரதேச தமிழர்களின் அமைப்பு ஒன்று கடந்த ஆறு வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்த அமைப்பினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (28-06-2015) கனடாதினம் கொண்டாடப்பட்டது.