lionyபாராட்டு விழாவில் டாக்கடர் போள் ஜோசெப்

“நகைச் சுவை கலந்த பட்டி மன்றங்கள் மூலம் புரட்சிகள் பல செய்து இந்தியாவிலும், இலங்கையிலும் மாத்திரமல்ல அகில உலகெங்கும் புகழ் பெற்றவர் திரு.லியோனி அவர்கள். அதனால் தொலைக் காட்சி, இணையத்தளம், You Tube ஆகிய அனைத்திலும் இன்று அவரது நிகழ்ச்சிகளை பார்வையிடக் கூடியதாக இருக்கிறது. சேலத்தில் நான் பணியாற்றிய போது அங்கே ஐயாயிரம் பேரைக் கொள்ளக் கூடிய “மூவேந்தர் அரங்கம்” என்ற பெரிய மண்டபம் இருந்தது. அதில் 500 படுக்கைகள் போடப்பட்டு நோயாளிகள் தங்கி இருந்தனர். அங்கே அடிக்கடி திரு.லியோனி அவர்களின் பட்டி மன்ற சி.டி.யை போடுவார்கள்.

அவரது பகிடிகளை கேட்டு நோய் குணமாகிய நோயாளிகள் பலர். ஆனால் வயிற்றில் சத்திர சிகிச்சைக்கு உள்ளான ஒரு நோயாளி இவரது பகிடியை கேட்டு வயிறு குலுங்க குலுங்க சிரித்து தையல் கிழிந்து அவதியுற்ற சம்பவமும் நிகழ்ந்தது. சாதாரண ஆசிரியராகப் பணியாற்றி நகைச் சுவையான பட்டி மன்ற நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்ற திரு.லியோனி அவர்கள் இன்று அரசியலில் கால் பதிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். அவருக்கு கனடாவிலிருந்து வெளிவரும் கதிரொளி வாராந்தப் பத்திரிகையும், காலாண்டு சஞ்சிகையான “தளிரும்” இணைந்து பாராட்டு விழா நிகழ்த்துவது பெருமைக்குரிய விடயமாகும். அவர்களின் சார்பில் வரவேற்புரை நிகழ்த்துவதில் நானும் மகிழ்ச்சி அடைகின்றேன்.”

தமிழோசை திரு.ஸ்ரீயின் அழைப்பின் பேரில் கனடாவுக்கு வந்திருந்த திரு.லியோனி அவர்களுக்கும் அவரது பாரியாருக்கும் கதிரொளி பத்திரிகை ஆசிரியர் திரு.போள் ராஜ் பாண்டியனும், தளிர் ஆசிரியர் திரு. மோகனும் திடீரென ஏற்பாடு செய்திருந்த பாராட்டு நிகழ்ச்சி கடந்த inside.picசெவ்வாயன்று இரவு ஸ்காபுறோவிலு ள்ள Queen’s Palace Banquet மண்டபத்தில் நடைபெற்றது. அதில் வரவேற்புரை நிகழ்த்திய டாக்டர் போள் யோசெப் இவ்வாறு கூறினார். பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் திரு.லியோனிக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.

கதிரொளி ஆசிரியர் திரு.போள் ராஜபாண்டியன் உரையாற்றிய போது “திரு.லியோனி அவர்கள் சின்னத் திரையில் மாத்திரமல்ல பெரிய திரையிலும் நடித்து புகழ் பெற்றவர். அவர் சென்னைக்கு வந்தால் அவரது நிகழ்ச்சியைக் கேட்க சிறுவர் முதல் பெரியோர் வரை படையெடுத்து வருவார்கள். அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே ஆசிரியர்களாவார்கள். திரு.லியோனி அவர்கள் அண்மையில் இலங்கைக்கு சென்று நிகழ்ச்சி நடாத்திய போது அதில் வசூலான நிதி அனைத்தையும் அங்குள்ள வறிய மக்களுக்கு அன்பளிப்புச் செய்தமை மனதை உருக்கும் செயலாகும். சிறந்த தமிழ் கலைஞரான அவருக்கும் பாரியாருக்கும் பாராட்டு விழாவினை நடாத்த நானும் திரு.மோகனும் ஏற்பாடு செய்தபோது அதற்கு டாக்டர் போள் யோசெப், பேராசிரியர் பாலசுந்தரம்,அம்பிகா நகை மாட உரிமையாளர் திருமதி ஜெயா அக்கா ஆகியோர் முன்வந்து உதவினார்கள். அதற்காக அவர்களுக்கு நான் எமது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

inside.picதிரு.லியோனி உரையாற்றிய போது “தவத்திரு குன்றக்குடி அடிகளார் தான் முதன் முதலில் சமுதாயக் கருத்துக்களை முன்வைத்துப் பேசினார். சென் மேரிஸ் கல்லூரியில் முதல் முதலாக ஆசிரியப் பணியினை மேற்கொண்ட நானும் அவரது பாணியில் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் உரையாற்ற ஆரம்பித்தேன். அது தான் எனது புகழுக்குக் காரணம். ஈழத் தமிழ் மிக அழகான தமிழ். தூக்கம், பேசுதல், கதைத்தல் ஆகியன அருமையான தமிழ் சொற்கள். நான் கனடாவுக்கு வந்து தான் ஈழத் தமிழை பழகிக் கொண்டேன். நீங்கள் எவ்வளவு நாள் நிற்பீர்கள்? என்று என்னைக் கேட்டார் கள். எங்களுர் பாஷையில் நிற்பது என்றால் காலில் நிற்பது தான் அர்த்தம். ஆனால் யாழ்ப்பாணத் தமி ழில் நிற்பது என்றால் தங்கி இருப்பது என்பது அர்த்தம். எம்மை எல்லாம் சிறந்த பாடல்களை மனப்பா டம் செய்ய வைத்தது இலங்கை வானொலி தான். அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா மேடைப் பேச்சுக்கு வடிவம் கொடுத்தார். அப்துள் ஹமீத், ராஜகுரு சேனாதிபதி ஆகியோர் சிறந்த தமிழில் வானொலி நிகழ்ச்சிகளை நடாத்தினார்கள். அதனை நாமெல்லோரும் விரும்பிக் கேட்போம். இலங்கைத் தமிழர்கள் இனிய தமிழைப் பேசுவதோடு மாத்திரம் நின்று விடாது தமிழனின் இரத்தத்தில் வீரம் உண்டு என்பதனை நிரூபித்தும் காட்டினார்கள்.

நான் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அதிகளவு மக்கள் திரண்டு வந்திருந்தார்கள். யாழ் வர்த்தக சங்கத் தலைவர் எனக்கு மாலை அணிவித்து எனது காலையும் தொட்டு வணங்கினார். எனக்கு அது பெரும் சங்கடமாக இருந்தது. என்னையா நீங்கள் எனது காலைத் தொட்டு வணங்குகின்றீர்கள் எனக் கேட்டேன். யாழ்ப்பாண மக்கள் வாய் விட்டு சிரித்து பல வருட காலமாகி விட்டது. இன்று நீங்கள் உங்கள் நகைச்சுவைப் பேச்சினால் அவர்களை வாய் விட்டு சிரிக்க வைத்துள்ளீர்கள். அதனால் தான் உங்கள் காலைத் தொட்டு வணங்கினேன் என அவர் கூறி னார்.

inside.pic

கதிரொளி ஆசிரியர் திரு.போள் ராஜூம், தளிர் ஆசிரியர் திரு.மோகனும் திரு.லியோனிக்கு கேடயங்களை வழங்கி கௌரவித்தார்கள். அம்பிகா நகை மாட உரிமையாளர் திருமதி ஜெயா அவர்கள் திருமதி லியோனிக்கு தங்க மோதிரம் அணிவித்துக் கௌரவித்தார்.ஐ.ரிஆர் வானொலி அறிவிப்பாளர் திரு.இளங்கோ, செல்வி சிந்துஜா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். செல்வி பிரியங்கா பரமநாதன் பரதநாட்டியம் ஆடினார். செல்வி விதுஷா பரமநாதன் இனிய பாடல்களைப் பாடினார். இறுதியில் இப்பாராட்டு வைபவத்தினை நடாத்த உதவிய அனை வருக்கும் தளிர் ஆசிரியர் மோகன் நன்றி தெரிவித்து உரையாற்றினார் . இராப் போசன விருந்துபசாரத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
(வீரகேசரி மூர்த்தி)

 

நிகழ்வின் ஒளிப்படங்களில் சில