paraiதமிழ் மரபுத் திங்கள் பூர்த்தி விழா வைபவத்தில் நீதன் சான் வலியுறுத்தல்

“கனடா தமிழ் மரபு சபையின் மூலம் நாம் தமிழர் திருநாளான தைப் பொங்கல் தினத்தை தமிழ் மரபுத்  திங்களாகப் பிரகடனப்படுத்த 2010ம் ஆண்டு முதல் முயற்சி செய்து வந்தோம். திரு.லோகன் கணபதி யின் முயற்சியினால் மார்க்கம் மாநகர சபை முதன் முதலாக 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம்13ம் திகதி தமிழ் மரபுத் திங்களை பிரகடனப்படுத்தியது. அதனை தொடர்ந்து ஏஜக்ஸ், பிராம்டன், வுறொக், கிளாறி ங்டன், ஒட்டாவா,ஒஷாவா,பிக்கெறிங்,ரொறண்டோ,விற்வி ஆகிய நகர சபைகளும் தமிழ் மரபுத் திங்களை பிரகடன்படுத்தின. ஒன்ரihறியோ மாகாண அரசு 2014ம் ஆண்டு மார்ச் மாதம் அதனை அங்கீகரித்தது.

தொடர்ந்து தேசிய அளவில் Tamil Heritage Act  றினை ஒட்டாவா அரசின் மூலம் சட்டமாக்க நாம் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையினை நாம் தற்போ து மேற்கொண்டுள்ளோம். அதற்கான படிவத்தில் தமிழ் மக்களாகிய நீங்கள் அனைவரும் கையெழுத்திட்டு தர வேண்டும்.”

தை மாதத்தின் இறுதி நாளான கடந்த 31ம் திகதி சனிக்கிழமை மாலை மார்க்கம் மிலிக்கன்மிலஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற பூர்த்தி விழாவில் கலந்து duramகொண்டு உரையாற்றிய கனடா தமிழ் மரபு சபையின் தலைவர் திரு.நீதன் சான் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். தமிழ் மரபுத் திங்கள் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டால் பிரிட்டிஸ் கொலம்பியா, நோவஸ்கோஸியா, அல்பேட்டா போன்ற மாகாணங்களில் பரந்து வாழும் தமிழ் மக்களும் இத்தினத்தை கொண்டாடி மகிழ முடியும். இவ்வருடம் தேர்தல் ஆண்டாக இருப்பதனால் நாம் விரைவில் கையெழுத்துக்களை திரட்டி அனுப்ப வேண்டும். இவ் விடயத்தில் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி வரும் 25க்கு மேற்பட்ட பொது அமைப்புக்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என திரு.நீதன் சான் கூறினார்.

வழக்கம் போன்று தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா ஆரம்பமாகியது. செல்வி நிரோஜா அருளானந்தம், திரு.குயின்ரஸ் துரைசிங்கம் ஆகியோர் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாக பணியாற்றினார்கள். முதலில் செல்விகள் லக்சுமி சிவகணேசலிங்கம், அனோஜினி குமாரதாசன் ஆகி யோரது நடன நிகழ்ச்சி இடம்பெற்றது. “தனித் தமிழ் பேசம்மா இனிக்கும்……… உன் தாய் மொழி நிகரம்மா கரும்புக்கும் கனிக்கும்…” என்ற பாடல் உண்மையிலேயே மிக இனிமையாக இருந்தது.

dance1“அகேனம் ஆட்ஸ்”இசைக் குழுவினர் பண்டைய இசைக் கருவியான பறையினை முழங்கி ஆடினார்கள். இசை வாத்தியமாகவும், செய்திகளை அறிவிப்பதற்கும் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பறையானது பிற்காலத்தில் அதனை வாசிப்போர் குறைந்த இனத்தவர்களாக கருதப்பட்டனர் என விளக் கம் அளிக்கப்பட்டது. அத்துடன் உடுக்கு, கஞ்சிரா, ஆரம்பத்தில் மதங்கமாக இருந்து பின்னர் மிருதங்க மாக மாறிய வாத்தியம், உடுக்கு, யாழ், வீணை போன்ற பல்வேறு வாத்தியங்களின் உருவாக்கம் பற்றி எழுத்தாளரும், கலைஞருமான திரு.கந்தசாமி கந்காதரன் விளக்கிக் கூறினார். 

செல்வி லக்ஸ்மி சிவகணேசலிங்கம் “தமிழுக்கு அமிழ்தென்று பேர் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்… என்ற பாடலை மிக அழகாகப் பாடினார். திரு.சண்முகநாதன் ரமணீகரன் பறை, தப்பு ஆகிய வாத்தியங்களை இசைத்துக் காண்பித்தார். திரு.பத்மகுமார் வேலும்மயிலின் மாணவர்கள் சிலம்பாட்டம் ஆடினார்கள். திரு.பொன்னையா விவேகானந்தன் எழுதிய “தமிழராய் தடம் பதிப்போம்” என்ற நாடகத் தில் திரு.கந்தசாமி கங்காதரன், குரும்பசிட்டி இராசரத்தினம், செல்விகள் ஆரணி, தமிழருவி ஆகியோ ரும் நடித்தனர்.
தற்போது நம்மவர்கள் தனித் தமிழில் பேசாது ஆங்கில சொற்களையும் கலந்து பேசி வருவதை மிக அழகா பின்வருமாறு சுட்டிக் காட்டினார்கள்:mohan1

“உருளைக் கிழங்கை boil  பண்ணி, பின்னர் cool பண்ணி,  peel பண்ணி, சின்னன் சின்னனா cut பண்ணி கறி சமைக்க வேணும்” எனக் கூறியமை யதார்த்தமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. இந்நிகழ்ச்சி யில் டுறம் நகரிலுள்ள தமிழ் சங்க உறுப்பினர்களான திரு.திருமதி.ரொம் திரு, திரு.சின்னத்துரை மகேந்திரநாதன் ஆகியோருட்பட மற்றும் மார்க்கம் மாநகர ஆதரவாளர்களான திருவாளர்கள்: அருண் கோபாலபிள்ளை, யோசெப் மோகன் றெமிசியர்,மயூரன் கனகசபாபதி, ருக்ஷான் பரா, திருமதிகள்: இனிதா சுப்பிர மணியம், யுவநிதா நாதன், கீரா ரட்னம், துளசி கிருஷ்ணன் ஆகியோருட்பட மற்றும் பலரும்  கலந்து கொண்டிருந்தனர். 
(வீரகேசரி மூர்த்தி)

நிகழ்வின் ஒளிப்படங்களில் சில..