fuelonகனடாவில் புலம் பெயர்ந்து வாழும் தாயக தமிழர்களின் ரசனையே தனித்துவமானதாகும். என்ன தான் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணின் வாசனை புலம் பெயர்ந்த கனடாவிலும் மணம் வீசிட நுண்கலைகளில் கொண்டுள்ள மிகுந்த ஈடுபாடும், குறிப்பாக இசை, நடனம் மற்றும் வாத்ய கருவிகள் என அவர்களின்கலைப்பற்று அபரிதமாய் வளர்ச்சியுற்று எண்ணற்ற முன்னணிக் கலைஞர்களை உருவாக்கி இன்று தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்து வருவது ஒரு பக்கம் என்றால்,

தமிழ்த்திரையுலகத்தைச் சார்ந்த பிரபல பாடகர்கள், பாடகிகள் மீது கொண்டுள்ள பற்றும், அவர்களின் இதுபோன்ற கலைநிகழ்வுகள் என்றால் அனைவருமே singers2கண்டு ரசித்து இன்புறத் தவறுவதில்லை என்பதே நிதர்சனமாகும். அதிலும் இங்குள்ள பெரும்பாலான நமது குடும்பங்களில் வானொலி, தொலைக்காட்சி, கணணி, ஒலி நாடாக்கள், திரைப்பட சி.டிக்கள் இருந்தும், கோடைகாலம் தொடங்கி விட்டாலே நம்மைச் சுற்றி எண்ணற்ற கலையிரவு நிகழ்ச்சிகள், வர்த்தகக் கண்காட்சிகள், ஆலய வருடாந்த உற்சவங்கள் ஆகியவை தொடர்ந்து இடம் பெறுவதோடு, தமிழகத்திரையுலகத் பின்னணி கலைஞர்கள், இசை அமைப்பாளர்களை வரவழைத்து, அவர்களின் இசை மழையில் நம்மை எல்லாம் மூழ்க வைத்தும், இந்தியக் கலைஞர்களை கௌரவித்து பாராட்டி பெருமை சேர்க்கும் பண்பினால், அவர்களின் இதயத்திலும் இடம் பிடிக்க தவறுவதில்லை.  அத்தகைய ரசனைக்கு உள்ள தனித்துவமான மகத்துவத்தை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. 

அந்த வகையில் Valentine Day & Family Day ஆகிய தினங்களுக்கு பெருமை சேர்த்து இன்புறும் வகையில் அன்று நமக்கெல்லாம் நன்கு அறிந்த Expo Energy & United Tamil Association நிறுவனத்தின் தலைவரான திரு யோகராஜா அவர்கள் 15.2.2015 மாலை ஸ்காபரோ JCs Banquet Hall (1686.Ellesmere Road) கலையரங்கில் தமிழகத்தில் தற்போது மிகப் பிரபலமாய் விளங்கும் தமிழ்த்திரைப்பட பின்னணிப் பாடகளாகளான திரு கௌசிக், திரு.ஹரிஹரசுதன், வந்தனா சீனிவாசன் ஆகியோருடன் நமது கலைஞர்களான பிரபா பாலகிருஷ்ணன், நிர்ஜானி, விதுசாயினி பரமநாதன், சுரபி யோகநாதன் ஆகியோரையும் பங்கேற்க வைத்து பெருமையுறச் செய்துவிட்டார்கள்.

singers1அனைத்துப் பாடகர்களும் பாடிய 25க்கும் அதிகமான புத்தம் புதிய பிரபலத் திரைப்படப்பாடல்களை மிக இனிமையாகப் பாடியதும், அவர்களுக்கு பின்னணி இசை வழங்கிய கனடாவில் மிகப் பிரபல்யமாய் விளங்கும் Super Sons – Fayas Zavahir Orchestra வாத்தியக் கலைஞர்களுடன் தூள் கிளப்பிவிட்டார்கள். 
பின்னணி வாத்ய இசைக்கருவிக் கலைஞர்களாக Fayas Zavahir (Key Board), Jeramy Selvaraja & Anaz Zahahir (Octopad), Jonathan Michael (Drums), Dinsan Vanniyasingam (Tabla & Octopad), Naveenan Tharmasrirajah (Lead Guitar), Watson Christy (Bass Guitar) and sound system by Parthi என அணிசேர் கலைஞர்களின் பங்களிப்பும் மிகப் பொருத்தமாகவும், கச்சிதமாய் எந்த வித தொய்வும் ஏற்படாவண்ணம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஜமாயத்து விட்டார்கள்.

இந்த சிறப்பு இசையிரவு நிகழ்ச்சிக்கு அணுசரணை வழங்கிய Standard Mortgage Inc.Raj Subrayam, Remax Community Realty Inc. Pirba Nallathamby, Thamizan Vazhikatti Senthy, Motor Vehicle Accident Kalakalappu Theesan, Insurance Broker Guna Chelliah, Easy Buy Home Kiruba Kishanth, New Renganas Rangan போன்ற வர்த்தக வியாபார அதிபர்களின் பங்களிப்பும் அதுபோன்றே இங்கு வெளிவரும் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடகங்களின் ஆதரவும் மிகவும் பாராட்டுதலுக்குரியதாய் அமைந்திருந்தது.

வருகை புரிந்த அனைவரையும் United Tamil Association Team members Vivehi Wigneswaran, Siva, Ragawan, Prima Dance Daya, Rummy Siva, Nathan Siva ஆகியோருடன் audianceதன்னார்வல சேவை ஆற்றிய சூசன் விக்னேஸ்வரன், தர்ஷி விக்னேஸ்வரன், ஜெஸிக்கா விக்னேஸ்வரன் ஆகியோரின் உபசரிப்பும் அந்த மாதிரி அமைந்து கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று, அன்றைய நிகழ்வின் சிறப்பு பற்றி முன்னுரை ஆற்றி, வருகை புரிந்துள்ள இந்தியக் கலைஞர்கள் மற்றும் நமது கலைஞர்களையும், விழா அனுசரனையாளர்களையும்
அறிமுகப்படுத்தி ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ச்சிகளை மிக அருமையாக தொகுத்தளித்த திரு ஆன்டன் அவர்களின் பங்களிப்பும் மிகக் கச்சதமாகவும், பொருத்தமாகவும் அமைந்து ‘பொன்மாலைப் பொழுது’ இசையிரவிற்கு பெருமையும், வெற்றியும் பெறச் செய்துவிட்டது.

அந்த அளவிற்கு ஒவ்வொரு பாடக பாடகியர்களை அறிமுகப்படுத்தியதோடு, தனது வர்ணனையுடன் மிக சுவையாக கொண்டு சென்ற விதம் ரசிகர்களை இன்புறச் செய்து விட்டது. இதற்கும் மேலாக பாடல்கள் பாடிய கலைஞர்களும், இசைக்குழுவும் ஒன்றிணைந்து ஆரம்பம் முதல் இறுதி வரை தேர்ந்து எடுத்த அருமையான பாடல்களைப் பாடி ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்கள்.

groupallகுறிப்பாக இசை அமைப்பாளர் திரு இமான் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கும், தங்களின் மெல்லிசைக்கு வாய்ப்பளித்து, அனைவரின் மத்தியில் அடையாளம் காண வைத்த தமிழகத் தொலைக்காட்சிக்கும் நன்றி கூறியது அவர்களின் அவர்களின் திறன்கள், இசைப்பற்று, இசை ஆர்வம் என அவர்களின் கலைப்பயணம் மற்றும் திரைப்பட ஈடுபாட்டிற்கும் கூடுதல் பெருமை சேர்த்து விட்டது எனலாம். கிட்டதட்ட 5 மணி நேரத்திற்கு மேல் பாடப்பட்ட அத்தனை திரைப்படப் பாடல்களும் படு ஜோர் என்றால், தமிழக கலைஞர்கள் இலங்கைத் தமிழர்களின் உபசரிப்பு, இசை மீது கொண்டுள்ள ஆர்வத்தையும் வெகுவாகப் பாராட்டி, அனைத்து ரசிகர்களையும் உற்சாகப்படுத்திய விதமும் சரி, ரசிகர்களையும் இணைத்து தங்களுடன் ஆட வைத்ததும் உண்மையிலேயே மிகவும் பிரமாதம் என்றே கூற வேண்டும்.

ஆரம்பப் பாடலாக விஸ்வரூபம் திரைப்படத்தில் உலக நாயகன் musicgroupகமலஹாசன் அவர்கள் அபிநயித்துப் பாடிய கமலஹாசன் ‘உன்னை காணாத நான் இன்று நானில்லையே’ என்ற பாடலை திரு ஹரிஹரன் சுதன் பாட ஆரம்பித்த உடனேயே அரங்கம் எதிரொளிக்க ரசிகர்களின் பலத்த கரகோஷம் பொன்மாலைப் பொழுது இசையிரவின் வெற்றிக்கு கட்டியம் கூறிவிட்டது. தொடர்ந்து வந்தனா சீனிவாசனுடன் சமீபத்தில் மிகவும் பிரபலமான பாடலான ‘கூடை மேல கூட வெச்சு’ என்ற ரம்மி திரைப்பாடலை இணைந்து பாடி இன்னிசை விருந்திற்கு சுவையூட்டி விட்டார்கள் இருவரும். அது போன்றே திரு. கௌசிக் அவர்களும் நமது கலைஞரான நிர்ஜானியுடன் இணைந்து தனது குரல் வளத்துடன் பாடிய ஜில்லா திரைப்படப்பாடலும் படு ஜோர் எனலாம். அதிலும் நிர்ஜானி அவர்கள் பாடிய தாலாட்டுப் பாடலான தாச்சுக்கோ…தாச்சுக்கோ அனைவரையும் தாளம் போட வைத்து விட்டது என்பதோடு வந்தனா சீனிவாசன் அவர்கள் பாடிய கும்கி திரைப்படத்தில் வரும் சொய்…. சொய் பாடலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது என்கிற மாதிரி அமைந்திருந்தது. இவ்வாறு தமிழகக் கலைஞர்களுடன் நமது கலைஞர்களும் பாடிய அனைத்துப் பாடல்களும் அபாரம் என்றாலும்
ஹரிஹர சுதனின் முதல் ஹிட் பாடலான ‘ஊதா கலர் ரிப்பன் ( வருத்தப்படாத வாலிபர் சங்கம்) உள்ளத்தில் நல்ல உள்ளம் (கர்ணன்), பிரபா பாலகிருஷ்ணன் மற்றும் நிர்ஜானி ஆகியோர் இணைந்து பாடிய உன் முகம் பார்த்தேனே’ பாடலும் குறிப்பிட வேண்டிய அருமையானப் பாடல்களாகும்.

ravimohanஇடைவேளைக்கு முன்னர் விழா அனுசரணையாளர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டும், இந்தியக் கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கும் விதத்தில் கனடிய அரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்கள். இந்த இடத்தில் JCs Banquet Hall அதிபர் திரு ஜூட் பிரான்சிஸ் அவர்களின் JC’s Grill House வழங்கிய நாவிற்கினிய இரவு உணவும், திரு ஸ்ரீபவன், கிரிஸ்டியன் ஷோர் (Bar services) பீரீத்தி மற்றும் சகப் பணியாளர்களின் உபசரிப்பும் மிகச் சிறப்பாய் அமைந்திருந்தது. 

இந்தியக் கலைஞர்களுடன் ரசிகர்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு பரஸ்பரமாய் உரையாடி மகிழ்ந்ததும் பொன்மாலைப் பொழுதினை என்றும் அனைவரின் நினைவில் பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுபோன்றே ஆர்கெஸ்டரா – ஒளி- ஒலி ஆகியவை மிகக் கச்சதிமாய் இருந்ததும், கலையரங்க இரு பக்கங்களிலும் அனைத்துப் பார்வையாளர்களும் எளிதாய் நிகழ்ச்சிகளை காணக் கூடிய விதத்தில் பெரிய டி.வி.ஸ்கீரின் அமைத்து ஒளி பரப்பியதும் ஒரு கூடுதல் பிளஸ் பாயிண்ட் எனலாம்.

இவற்றிற்கெல்லாம் மேலாக தமிழகத் திரைப்படப் பாடகர்கள் ramanகனடாவிற்கு முதன் முறை வந்து, இங்குள்ள இலங்கைத் தமிழர்களைப் பற்றிய தங்களது அனுபவபூர்வமான எண்ணங்களை பகிர்ந்து கொண்டு, இலங்கைத் தமிழர்களால் தான் தென்இந்தியத் திரைப்பட வளர்ச்சி என்பது அன்று தொட்டு இன்று வரை விஸ்வருபம் எடுத்து இந்தியத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதை நன்றி படக்கூறியது அனைவரின் மனதை தொட்டு விட்டது எனலாம். இவ்வாறு இந்த ஆண்டு Energy Expo மிக வெற்றிகரமாய் நடத்திய ‘ பொன்மாலைப் பொழுது’ இசையிரவு திரு அன்டன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவடைந்தது.

நன்றி:  -புதுவை இராமன்