Kavaloor- Rasaஇலங்கை முற்போக்கு எழுதத்தாளர் சங்கத்தின் முன்னணி அங்கத்தினராக நீண்ட காலம் இருந்தவர்
காவலூர் ராஜதுரை அவர்கள். யாழப்புhணத்தில் ஊர்காவற்றுறையில் கரம்பொன் என்னும் கிராமத்தில் 1931 ஐப்பசி 13ம் திகதி பிறந்தவர் (13.10.1931). ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்றவர். சிரேஷ்ட தராதரம் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்த பின் இலங்கை மத்திய வங்கி அரச உணவுக்கூட்டுத்தாபனம் இலங்கை ஷெல் கம்பெனியின் பிரச்சாரப் பிரிவின் தமிழ்ப் பகுதி ஆகியவற்றில் எழுதுவினைஞராகப் பணியாற்றியவர்.

50 களில் தொடங்கி அறுபதுகளில் ஈழத்தின் ஒரு தரமான சிறுகதை எழுதத்தாளராகப் பரிணமித்தவர். தினகரன் உருவாக்கிய எழுத்தாளர் காவலூர் ராசதுரை. இவருடைய முதலாவது சிறுகதைத் தொகுதி
குழந்தை ஒரு தெய்வம் 1961ல் சரஸ்வதி வெளியீடாக வெளிவந்தது. 1960ல் டொமினிக் ஜீவா அவர் களின் தண்ணீரும் கண்ணீரும் தொகுதியை வெளியிட்ட சரஸ்வதி பதிப்பகம் அடுத்ததாக வெளியிட்ட
சிறுகதை நூல் காவலூர் ராஜதுரையின் குழந்தை ஒரு தெய்வம். இந்தத் தொகுதியில் ராஜதுரையின் பத்துச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சென்னை சரஸ்வதி வெளியீடாக வந்துள்ளதென்பதும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் முன்னுரையுடன் வந்திருக்கிறது என்பதும் இந்த நூலுக்கும் காவலூருக்கும் கிடைத்த இலக்கிய அடையாளம்.

பிந்திய 50 களிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரையும் கூட அரசியல் மற்றும் இலக்கிய உலகின் உச்சத்தில் இருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கி இயக்கிய எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம் தன்னுடைய ஆறாவது நூலாக 1976ல் வெளியிட்ட காவலூர் ராஜதுரையின் ஒரு வகை உறவு சிறுகதை நூலில் இவர் பற்றிய குறிப்பில் நீண்டகாலமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னணி உறுப்பினராக இருக்கும் திரு காவலூர் ராஜதுரை என்று அதை உறுதிப்படுத்தியும் கொள்கிறது. ஆனாலும் சங்கம் இருக்கும் உச்சத்தை தனக்கான ஒரு ஏணியாகப்
பயன்படுத்தித் தன்னை உயர்த்திக் கொள்ள அவர் முயலவில்லை என்பது ராஜதுரை அவர்களின் தனித்துவம்.

சரஸ்வதி வெளியீடாக குழந்தை ஒரு தெய்வம் வெளிவந்து பதினைந்து ஆண்டுகளின் பின் அவருடைய இரண்டாவது நூல் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வகை உறவு என்னும் காவலூர் ராஜதுரையின் இந்த இரண்டாவது சிறுகதைத் தொகுதியில் 1954 முதல் 1973 வரையிலான காலப்பகுதியில் இவர் எழுதிய 11 சிறுகதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகள் அவ்வப்போது ஈழத்துப் பத்திரிகைகளில் வெளிவந்தவைகள். அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நறுக்குகளாக வீட்டில் சிதறிக் கிடந்த இக்கதைகளை சேகரித்து பேணி ஒழுங்காக வைத்திருந்த என் மகன் நவீனனுக்கும் எனது நன்றிகள் என்று தனது நன்றியுரையில் குறிக்கின்றார் காவலூர் ராஜதுரை.

அறுபதுகளில் அவர் தினகரனில் தொடராக எழுதிய குறுநாவல் வீடு யாருக்கு என்பது அதே தலைப்பில் அதை ஒரு நூலாக வெளியிட்டு;க் கொண்ட காவலூர் ராஜதுரை அவர்கள் அதை ஒரு மேடை சமர்ப்பணம் செய்துள்ளார். இன்னும் ஒரு முற்N;பாக்கு எழுத்தாளரும் முற்N;பாக்கு எழுத்தாளர் சங்கத்தின் நீண்ட கால அங்கத்தவருமான அமரர் அ.ந.கந்தசாமியின் மதமாற்றம் நாடகத்தையும் கொழும்பு லும்பினி அரங்கில் மேடை ஏற்றிய பெருமையும் காவலூர் ராஜதுரை அவர்களையே சார்கிறது.

எழுபதுகளில் இலங்கை ஒலிபரப்;புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இணைந்து கொள்கின்றார் இவர். கிராமவளம் நிகழச்சி இலங்கை வானொலியில் உயிர்ப்புடன் செயற்படக் காரணமாக இருந்தவர் காவலூர். யாழ்ப்பாணப் பகுதியில் பல கிராமங்களுக்கும் வானொலிக் குழுவினருடன் சென்று நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பியதன் மூலம் இவைகளுக்கு உயிரோட்டம் கொடுத்தவர் இவர்.

காவலூர் ராஜதுரையும் சில்லையூர் செல்வராசனும் இணைந்து செயற்பட்ட இலங்கை வானொலிக் காலம் வரலாறு படைதத் காலம.; ஊர் நட்பு, குடும்ப நட்பு, இலக்கிய நட்பு என இணைந்தவர்கள் ஒரு கால கட்ட இலக்கிய இரட்டையர்களாகவே உலா வந்தவர்கள். இலங்கை வானொலியின் வர்த்தக
சேவை கொடிகடடிப் பறந்த காலம்; அது. வர்த்தக சேவையின் உயிர்நாடி விளம்பரம்.
அந்த விளம்பரத்தின் வானொலி ஜாம்பவான்களாக இருந்தவர்கள் இந்த இரட்டையர்கள், சிறுகதை குறுநாவல் போன்ற புனைவுகளுக்கப்பால் அவர் எழுதி வெளியிட்டநூல் விளம்பரத்துறை என்பதாகும்.
விளம்பரத்துறையின் தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம் பற்றியதான இந்த நூலில் விளம்பரத்துறையில் சில்லையூர் என்றும் ஒரு கட்டு;ரை இருக்கிறது. காவலூர் ராஜதுரை தனது மைத்துனருடனிணைந்து தயாரித்த பொன்மணி திரைப்படத்தின் பாடல்கள் கமலினி மற்றும் சில்லையூர் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்திய எழுபதுகளில் இலங்கை வானொலியிலிருநது; விலகிய காவலூர் ராஜதுரை அவர்கள் வசீகரா அட்டவர்டைசிங் என்னும் விளம்பர நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்;தி வந்தார் எல்லா வர்த்கத்துறைகளிலும் போட்டிகள் இருப்பதைப் போலவே போட்டிகள் மலிந்த ஒரு வர்த்தகத்துறை இந்த விளம்பரத்துறை. ஜே.வால்டர் தொம்சன் கிராண்ட் அட்வர்டைசிங் போனற் விளம்பரத்துறை மன்னர்கள் மத்தியில் தன்னுடைய வசீகராவையும் வெற்றியுடனும் தனித்துவத்துடனும் நடாத்திக் காட்டியவர் காவலூர். வசீகரன் என்பது காவலூர் ராஜதுரையின் மகனின் பெயர். காலூர் ராஜதுரை அவர்களின் கலை இலகக்கிய ஆளுமையும் பதத்திரிகை வானொலி தொலைக்காட்சி ஆகியவற்றுடனான அவருடைய நெருங்க்pய தொடர்புகளும் விளம்பரத்துறையில் அவரை காலூன்றி நிற்கச் செய்தன. 

எழுபதுகளில் வீரகேசரியின் துணைப்பத்திரிகையான மிதத்திரனில் அவர் எழுதிய தொடர்கதை பொன்மணி எங்கே போனாள் என்பது. அந்த நாவலை ஒரு நூலாக வெளியிடாமல் தனது மைத்துனரான முத்தையா ராஜசிங்கத்துடன் இணைந்து பொன்மணி என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படமாகத் தயாரித்து வெளியிட்டார் இந்தப் படத்தயாரிப்புக்கான முதல் ராஜசிங்கத்தினுடையது. உழைப்பு ராஜதுரையினுடையது. சிங்களத் திரையுலகில் தரமான இயக்குனர் தர்மசேன பத்திராஜாவும், ஒளிப்பதிவாளர்களும் நடிகர்களாகப் பணியாற்றினர். டொக்டர் நந்தி, சித்திரலேகா, மௌனகுரு என்று வருகிறது நடிக நடிகையர் பட்டியல். வுpளம்பரத்தினூடாக அதிகமாகப் பிரபலய்ப்படுத்தப்பட்ட படம் பொன்மணி. ஆனாலும் ஏனோ ஓடவில்லை. தமிழிலும், சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் கூடுதலாக விமர்சனம் செய்யப்பட்ட படம் காவலூராரின் பொன்மணி. வர்த்தகரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் கலாரீதியாக முத்திரை பதித்த படம் பொன்மணி. தென்னிந்திய தமிழ்ச் சினிமா மோகத்திலிருநது; தமிழ் ரசிகர்களை வெளியில் கொணடு; வரும் முயறச்சியையே காவலூர் ராஜதுரையும், இயக்குனர் தர்மசேன
பத்திரராஜாவும் பொன்மணி திரைப்படத்தினூடாகச் செய்து பார்த்தனர்.

1978ல் சென்னையில் நடைபெற்ற சர்வதேசதிரைபப்பட விழாவில் பொன்மணி பத்திரிகையாளர்களுக்கும் போட்டுக் காட்டப்பட்டது என்று பதிவு செய்கின்றார் இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை எழுதிய தம்பிஐயா தேவதாஸ் அவர்கள். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் காவலூர் ராஜதுரையின் மைத்துனருமான ராஜசிங்கம் அவர்களுக்N;க 1976ல் வெளியிடப்பட்ட தன்னுடைய ஒரு வகை உறவு நூலை சமர்ப்பணம் செயதிருக்கின்றார் காவலூh.; பொன்மணியின் படப்பிடிப்புக்கான ஆரம்ப விழாவும் 1976ல் தான் நடந்தது. 1977ல் படம் வெளியிடப்பட்டது. ஒரு வாரத்துக்கு மேல் படம் ஓடவில்லை என்றாலும் ஈழத்துத் தமிழ்ப்பட வரலாற்றில் அதற்n;காரு தனி இடம் கிடைதது விட்டது. அந்த உற்சாகத்தில் காவலூர் அதைச் சுருக்கி எடிட் செய்து ரூபவாஹினி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பப் படுவதறக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்;. தொலைக்காட்சியில் முதன் முதல் ஒளிபரப்பப்பட்ட இலங்கைத் தமிழ் படம் பொன்மணி தான் என்பது குறிப்பிடக்கூடியது. 1984ல் ஒரு தடவையும் 85ல் ஒரு தடவையுமாக இரண்டு தடவைகள் ஒளிபரப்பான படம் இது.
 
ஈழத்துக் கலை இலகக்கிய உலகில் அமைதியாகவும், ஆழமாகவும் தடமிட்டிருந்த காவலூர் ராஜதுரையை காலம் புலம்பெயர வைத்தது. எனக்கும் அவருக்குமான இலக்கிய உறவும் நெருக்கமும் அலாதியானது. எனக்கு ஒரு இலக்கிப் பெயரே கிடைத்திராத அறுபதில் சென்னையில் இருந்து சரஸ்வதி வெளியீடாக அவருடைய சிறுகதைத் தொகுதி வெளிவந்திருந்தது. 1963ல் தான்; என்னுடைய
முதல் கதை பாட்டி சொன்ன கதை வீரகேசரியில் வெளிவந்தது. 50 களில் அவரை வளர்த்து விட்டது தினகரன். 60 களில் என்னை வளர்த்து விட்டது வீரகேசரி. 64ல் நான் கொழும்பு வந்து விட்ட பின் பரபரப்பான கொழும்பு வாழ்வுக்கு என்னைப் பழக்கப்படுத்திப் பக்குவப்பட்டதன் பின் இலங்கை வானொலியிலும் இலக்கிய நிகழ்வுகளிலும் அவரை சந்தித்துப் பேசும் பழகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அவருடைய அடக்கமும் ஆரவாரங்களற்ற தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது.

1992ன் ஆரம்பம் என்று நினைக்கின்றேன். க.சட்டநாதன் அவர்களுடைய உலா சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா ஐந்து லாம்பு சந்தி பழைய நகர சபை மண்டபதத்தில் நடைபெற்றது. காவலூர் ராஜதுரை தலைமை. நான் அறிமுகவுரை. மாலுகடை என்று பிரசித்தம் கொண்ட மீன் மார்க்கட் கட்டிடத் தொகுதியிடம் இறங்கி சிறுநீர் மணம் மூக்கைத் துளைக்கும் சந்திக்குள் நுழைந்து செட்டியார் தெருவைத் தாண்டுகையில் நாலைந்து இளைஞர்கள் முன்னால் நடக்கின்றனர் அவர்களுடைய பேச்சுக்கள் எனது காதையடைந்தபோது சந்தோசப்பட்டேன். காரணம் அவர்களும் அந்த இளைஞர்களும் சட்டநாதன் கூட்டத்துக்குத்தான் செல்கிறார்கள் என்பதை அவர்களுடைய உரையாடல்கள் காட்டின.
யார் இந்த ராஜதுரை!…. சட்டநாதனின் சிறுகதைகள் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்குபவர் என்று ஒரு இளைஞர் சந்தேகக் கேள்வி எழுப்புகின்றார். எண்பதுகளில் பிபல்யம் கொண்ட சட்டநாதனை
அறிந்திருந்தவர்கள் அறுபதுகளில் பிரபல்யம் கொண்டிருந்த காவலூராரை யார் என்று கேட்கின்றார்கள். எண்பதுகளின் பின் காவலூர் ராஜதுரை இலக்கியத்தைப் பொறுதத் வரை ஓயவ் hளரத் hன.; ஆனாலும்
ஈழத்துச் சிறுகதைத் துறை மற்றும் நாடகம் சினிமாத்துறைகளுக்கான அவரது பங்களிப்பு எத்தனை பெரியது. மாரச் pம் கோரக் க் p கூறினார ; எழுத வருபவர்கள் இலக்கிய வரலாறு அறிந்தவர்களாக
இருக்க வேண்டும் என்று. உண்மைதான். ஆனால் எப்படி அறிந்து கொள்வார்கள் என்பதில் தான் பிரச்சினையே இருக்கிறது. நமது இலக்கிய வரலாறு முன்னோடிகள் பற்றிய அறிமுகங்கள் பரவலாக ஒன்றிரண்டு என்றில்லாமல் பரவலாக வெளிவர வேண்டும். வந்திருக்கின்றனவா? செய்திருக்கின்றோமா?

அனi; றய எனது உரையை இரணடு; பகுதியாக எடுத்துக் கொண்டேன். முதல்பகுதி காவலூர் பற்றியது. இரண்டாவது பகுதி சட்டநாதன் கதைகள் பற்றியது. காவலூர் ராஜதுரை அவர்களை நான் இலங்கையில் சந்தித்த இறுதி நிகழ்வு இதுதான். 2009 ஏப்பிரலில் நண்பர் முருகபூபதி அவர்களின் அழைப்பை ஏற்று அவுஸ்திரேலிய தமிழச் சங்க ஆணடு; விழாவில் உரையாற்றச் சென்றிருந்தபோது காவலூர் ராஜதுரை
பற்றி விசாரித்தேன். அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் காவலூ; ராஜதுரை கவிஞர் அம்பிகைபாகன் ஆகியோரை முந்தைய விழாக்களில் கௌரவித்துள்ளதை நண்பர் முருகபூபதி மூலம் ஏற்கனவே அறிந்திருந்தேன். முருக பூபதி இருப்பது மெல்பர்ன் நகர். ராஜதுரை இருப்பது சிட்னி. விமானம் போன்றே சொகுசும் வேகமும் கொண்ட ரயிலில் 12 மணி நேரப் பயணதூரம். காலை எட்டு
மணிக்கு ரயிலேறி இரவு 8 மணிக்கு சிட்னி செனட் றலில ; இறஙக் pனோம.; மறுநாள ; காலை
ஜெயசக்தியின் வீட்டில் தேனீரருந்தி காவலூரைக் காணச் சென்றோம். கதிரையில் அமர்ந்திருந்தபடியே மகிழ்வுடன் தெளிவத்தை என்று கை கூப்பி கைகுலுக்கி வரவேற்றார். 78 வயதின் முதுமை அவரை மிகையாகவே வசப்படுத்தி இருந்தது. எழுத்து இலக்கியம் என்று இயங்கி இருந்ததால் அது அவருடைய முதுமையை வசப்படுத் தியிருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டேன்.ஒரு மகிழ்வுடன் விடைபெற்றுக்கொண்டோம்.

5 வருடங்கள் விரைவாக ஓடி விட்டன. 14.10.2014ல் காவலூர் ராஜதுரை அவர்கள் அவுஸ்திரேலிய சிட்னி நகரில் அமரர் ஆகிவிட்டார் என்னும் செய்தி எனககு; அதிர்ச்சி தரவில்லை. அகம் கொள்ளா சோகத்தையே தந்தது. தருகின்றது. அன்னாரின் இலக்கிய நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் எனது
அனுதாபங்கள் உரித்தாகின்றன.

-தெளிவத்தை ஜோசப்  நன்றி: தாய்வீடு