gnanam book releaseன்று ஞானம் தனது 175 இதழாக வெளியிட்டிருந்த சிறப்பு இதழான 'ஈழத்துப்புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா 'டொராண்டோ'வில் நடைபெற்றது. கனடாத்தமிழ்ச்சங்க ஆதரவில் வைத்திய கலாநிதி லம்போதரனுக்குச்சொந்தமான 'டொராண்டோ' தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில். எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினையும், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் தலைமையுரையினையும் ஆற்ற அறிமுக உரையினைப் பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன் ஆற்றினார். அதன்பின்னர் நூல் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு விற்பனைக்கு விடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையினையும், இறுதியாக நன்றியுரையினை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் ஆற்றினார்கள்.

நிகழ்வில் கலாநிதி சுப்பிரமணியன் அவர்கள் நீண்டதொரு , சிந்தனையைத்தூண்டும் உரையினை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது. அதிலவர் புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் கருப்பொருளாக அமைந்த பொருளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி  விரிவாக  அவற்றைப்பிரிவுகளாக்கி எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் வெளியான படைப்புகள் தாயகமண் பற்றிய கழிவிரக்கமாக அமைந்திருந்தன. அதன் பின்னர் ஈழம் மற்றும் புகலிடச்சூழல்களை உள்வாங்கியவையாக விளங்கின. அதன் பின்னர் புகலிடத்தில் காலூன்றியவர்கள், புகலிடத்தில் தம் தாயகத்தில் நிலவிய பண்பாட்டுச்சூழலை மீண்டும் உருவாக்க முனைவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதே சமயம் பெண்ணியம், சாதியம் போன்றவை புலம்பெயர் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையன என்பதுபற்றியும் அவரது உரை ஆராய்திட முற்பட்டது.

இவ்விதமாகத்தனது நீண்ட உரையினை ஆற்றிய கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் இறுதியில் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றி எழுத்தாளர்களான  தேவகாந்தன் , ஜெயமோகன் ஆகியோர் முறையே 2000ஆம் ஆண்டிலும், 2010இலும் தெரிவித்த கருத்துகளையும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் எஸ்.பொ/ இந்திரா பார்த்தசாரதியால் தொகுத்து வெளியிடப்பட்ட 'பனியும், பனையும்' சிறுகதைத்தொகுப்பு பற்றியும் குறிப்பிட்டார். அத்தொகுப்பில் படைப்புகள் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று அன்றே குறிப்பிடப்பட்டிருந்ததை எடுத்துரைத்து, இன்று மீண்டும் அவ்விதமான பிரிவுகளை நோக்கித்தான் எமது புலம்பெயர் இலக்கியமும் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

நன்றி-பதிவுகள்

 
Gnanam book release-1Gnanam book release-2Gnanam book release-3Gnanam book release-4Gnanam book release-5Gnanam book release-6Gnanam book release-7Gnanam book release-8Gnanam book release-9Gnanam book release-10