Thiruvaiyaru in Toronro-தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டு ஒன்றியம் – கனடா
Tamil Cultural Progressive Organization – Canada (TCPO-CAN) 

பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் 2011 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டுஒன்றியம் – கனடா என்ற அமைப்பு ரொறன்ரோவில்,தமிழர் பண்பாட்டு நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பான முறையில் நடத்திக் கொண்டு வருவதை வாசகர் அறிந்திருப்பார்கள். இவ்வமைப்பு ரொறன்ரோவில் முதன் முதலாக திருவையாறு நிகழ்ச்சியை மார்ச். 01, 2014 நடத்திச் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. அதன் தொடச்சியாக இவ்வாண்டும் இரண்டாம் முறையாக ரொறன்ரோவில் திருவையாறு நிகழ்ச்சியை 28.03.2015 ஸ்காபரோவிலுள்ள பெரிய சிவன் ஆலய கலாச்சார மண்டபத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நடத்தினர்.

Thiruvaiyaru in Toronro-7ரொறன்ரொவில் திருவையாறு -2015 விழாவில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்களின் நடனம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின், வீணை ஆகிய கவின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சென்ற ஆண்டிலும் விட மிகக் கூடுதலான ஆசிரியர்கள் இவ்விழாவில் பங்கு கொண்டமை இவ்வமைப்பினரின் சாதனை என்றே கூற வேண்டும். இவ் விழாவிற்கு அழகப்பா பல்கலைக் கழகத் ஸ்தாபகர் மாண்புமிகு அழகப்பாச் செட்டியாரின் பேரன் வருகை தந்து சிறப்பித்தார். இவர் Alagappa Performing Arts Academy யின் ஸ்தாபகரும் இயக்குநருமாவர். இவ்வமைப்பினர் சென்ற ஆண்டிலிருந்து Fine Arts Graded Exams  நடத்தி வருகின்றனர். பரீட்சை எடுத்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை முதன்மை விருந்தினர் வழங்கி மாணவர்களைக் கௌரவித்தார்.
Thiruvaiyaru in Toronro-9இவ்வாண்டு முதலாக அழகப்பா பல்கலைக் கழகத்துடன் இணைந்து Certificate, Diploma, B.A. பட்டப் படிப்பு கற்கையை எமது ஒன்றியத்தினூடாக மேற் கொள்வதற்கு மாணவர் பதிவு செய்துள்ளனர் என்பதையும் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் விழாவின் தலைமையுரையில் குறிப்பிட்டார்.
பேராசிரியர் அவர்கள் தொடர்ந்து தமது தலைமையுரையில்  இவ்வமைப்புடைய நோக்கங்கள் பற்றியும் வருமாறு குறிப்பிட்டார்.

Thiruvaiyaru in Toronro-2கனடாவில் வாழும் அனைத்துக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்,இளைய தலைமுறையினரிடையே கலை–பண்பாட்டு விளிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்,அரங்கேற்றம் செய்த மாணவர்கள் தம் அதி திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தல்,Thiruvaiyaru in Toronro-11அறக்கட்டளை ஒன்னை ஏற்படுத்தி, கனடாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாடு பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவருக்குப் புலமைப் பரிசு வழங்குதல்,கனடாவின் பல்கலாச்சார நிகழ்வுகளில் தமிழ்ப் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் இடம்பெறச் செய்தல்,சிறந்த கலைக் குழுவை உருவாக்கி உலகநாடுகளில் கலைப் பயணத்தை மேற் கொள்ளுதல் என்ற நோக்ககங்களைக் கொண்டதாக இவ்வமைப்பு இயங்கிவருகின்றது. 
Thiruvaiyaru in Toronro-3aகடந்த கால நிகழ்வுகளாக 2011 –‘பொதிகைக் கோலங்கள்’ என்ற தலைப்பில் முத்தமிழ் விழாநடத்தினர். 2012 இல்:  கனடாவில் 20 ஆண்டுகள் கலைப் பணியாற்றிய ஆசிரியர்களும்,அவர்களிடம் அரங்கேற்றம் செய்தமுதல் மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2013; இல் யுவகலாபாரதி மைசூர் சந்தன் குமார் – புல்லாங்குழல் இன்னிசை நிகழ்ச்சி நடத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அந்நிகழ்வின் நிழற்படங்களும், ஒளிப்படங்களும்..

Thiruvaiyaru in Toronro-1Thiruvaiyaru in Toronro-3Thiruvaiyaru in Toronro-5Thiruvaiyaru-in-Toronro-6-Thiruvaiyaru in Toronro-24Thiruvaiyaru in Toronro-31Thiruvaiyaru in Toronro-30Thiruvaiyaru-in-Toronro-27-Thiruvaiyaru in Toronro-23Thiruvaiyaru in Toronro-26Thiruvaiyaru in Toronro-25Thiruvaiyaru in Toronro-29Thiruvaiyaru in Toronro-22Thiruvaiyaru in Toronro-18

Thiruvaiyaru in Toronro-11