Miss Tamil Canada -1aகனடாவின் மார்க்கம் நகரில் உள்ள ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் (HILTON SUITES INTERNATIONAL) மண்டபத்தில் மிஸ் தமிழ் கனடா – 2015 (MISS TAMIL CANADA – 2015) விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது. 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் 14 இளம் போட்டியாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள். Toronto Arajen Beauty Centre அழகுக்கலை நிறுவனம் நடத்திய மேற்படி விழாவில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்.

குறித்த அழகு ராணிப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் நடுவர்கள் பலவிதமான போட்டிகளையும் நடத்தி, அவர்தம் திறமைகளை கண்டறியும் உத்திகளையும் மேற்கொண்டார்கள்.

இறுதியில் செல்விகள் தீப்தி ஞானேஸ்வரன், விதுசாயினி பரமனாதன், சுரபி யோகநாதன் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்று MISS TAMIL CANADA – 2015 ஆக முடிசூடிக் கொண்டனர். 

Miss Tamil Canada -1

Miss Tamil Canada -2

Miss Tamil Canada -4

Miss Tamil Canada -6Miss Tamil Canada -7

Miss Tamil Canada -9

Miss Tamil Canada -10

Miss Tamil Canada -2a