canada flagஉலகளவில் மதிப்பு மிக்க நாடுகளின் பட்டியலில் கனடாவிற்கு முதல் இடம் 

சர்வதேச அளவில் மக்களால் அதிகம் போற்றி புகழப்படும் மதிப்பு மிக்க நாடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் கனடா நாட்டிற்கு முதல் இடம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Reputation Institute என்ற நிறுவனம் ஒரு நாட்டின் சுற்றுச்சூழல், அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கி மக்களால் அதிக அளவில் புகழப்படும் நாடுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. 

Reputation Institute நடாத்திய 2015 ஆய்வில் கனடா இடத்தை பெற்றுள்ளது.சுற்றுச்சூழல் ,அரசியல் மற்றும் பொருளாதார காரணிகள் போன்ற பல்வேறு அடிப்படையில் கனடா மிகவும் ‘மரியாதைக்குரிய மதிப்புள்ள’ நாடென தரப்படுத்தப்பட்டுள்ளது.நடாத்தப்பட்ட இக்கருத்தாய்வு மதிப்பீட்டில் பல வேறு  பிரிவுகளில் கனடா ஏதோ ஒரு வகையில் நல்லவைகளை வழங்கியுள்ளதென Reputation Institute-ஐ சேர்ந்த பெர்னான்டோ ப்ராடோ கூறியுள்ளார்.

பல விடயங்களில் நாங்கள் அனைவரும் கனடாவை விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக திறமையான அரசாங்கம், ஊழல் இன்மை, நட்பு மற்றும் மக்களை வரவேற்றல், நலன்புரி ஆதரவு வழங்கல் போன்ற துறைகளில் கனடா பாராட்டிற்குரியதெனவும் கூறினார்.2014-ல் இரண்டாவது இடத்தை பெற்றிருந்த கனடா 2015ல் முதலாவது இடத்தை அடைந்துள்ளது.2011 முதல் 2013 வரையிலான மூன்று ஆண்டுகளாக கனடா தொடர்ந்து முதல் இடத்தை வகித்தது.ஒட்டு மொத்தமாக பல்வேறு அம்சங்களில் ஏதாவது ஒரு நன்மையை கொடுக்க கூடிய ஒரு நாடு கனடா என பெர்னான்டோ ப்ராடோ தெரிவித்தார்.

உலகின் செல்வம் நிறைந்த நாடுகள் 55ல் இந்த கணிப்பீடு நடாத்தப்பட்டது.நோர்வே இரண்டாவது இடத்திலும் அதனை தொடர்ந்து சுவீடன், சுவிற்சலாந் மற்றும் ஆவுஸ்ரேலியாவும் வந்துள்ளன. யு.எஸ்.22வது இடத்தை பெற்றுள்ளது.Reputation Institute ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் தங்கள் தாய்நாடு குறித்து தெரிவித்த தகவல்களை அடிப்படையாக கொண்டு நடாத்திய ஒரு தனியான தரவரிசை பட்டியலில் அவுஸ்ரேலியா முதலாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கனடா,   ரஷ்யா, இந்தியா மற்றும் ஜேர்மனியும் யு.எஸ். ஆறாவதாகவும் வந்துள்ளன.