abissha-1cஒன்பது வயதுச் சிறுமியான செல்வி அபிஷா செல்வமோகனின் பரத நாட்டிய அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு அண்மையிலே கிடைத்தது. பத்தோடு பதினோராவது அரங்கேற்றமாக இருக்குமென எண்ணிக் கொண்டு சென்ற எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனக்கு மாத்திரமல்ல ஏனைய அனைவருக்குமே ஆச்சரியமாகத் தான் இருந்தது என்பதனை அவர்களது பலத்த கரகோஷங்களின் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

abissha-4பச்சிளம் பாலகியான அவர் பரத நாட்டிய மேதை ஆவதற்கென்றே அவதாரம் எடுத்துள்ளாரோ என எண்ணும் அளவிற்கு வெகு இலகுவாக வளைந்து நெளிந்து ஆடவல்ல மெல்லிய உடல் வாகையும், அபிநயங்களை மிக லாவகமாக அபிநயிக்கக் கூடிய அழகான முக எழிலையும் கொண்டு அழகு தேவதை போன்றே காட்சியளித்தார். அவரது பெற்றோர்களான திரு.செல்வமோகனும், திருமதி.விஜயகௌரியும் தமது புதல்வி சிறந்த பரத நாட்டிய மேதையாக வரவேண் டும் என்ற ஆவலில் அவரை ஐந்து வயதிலேயே “அபிநயாலாய நாட்டியாலயம்” ஆசிரியையான ஸ்ரீமதி றஜனி சக்திரூபனிடம் ஒப்படைத்தனர். நாட்டிய ஆசிரியையும் தனது முயற்சியினாலும், திறமையினாலும் செல்வி அபிஷாவை புடம் போட்ட தங்கமாக மெருகூட்டி அன்றைய தினம் மேடையேற்றி சபையோரின் பரம திருப்தியையும், மனம் நிறைந்த பாராட்டினையும் பெறும் அளவிற்கு செல்வி அபிஷாவை பரத நாட்டிய பேரொளியாக்கி விட்டார்.

abissha-2முருகப் பெருமான் வள்ளியை சந்திக்கச் சென்ற காட்சிக்கு நடனமாடிய போது குனிந்து வளை ந்து இரு கரங்களையும் மயிலின் கழுத்தைப் போன்று முற்புறமாக நீட்டி, இரு ஆட்காட்டி விரல்களையும் மயிலின் சொண்டுகளாக நீட்டி அபிநயித்த காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது. அது மாத்திரமன்றி வள்ளி வழங்கிய தேன் கலந்த தினை மாவை தின்னும் போது ஏற்பட்ட விக்கலை அபிநயித்துக் காட்டிய காட்சியும் அப்படியே தத்ரூபமாக இருந்தது. அதனை ரசித்த பார்வையாளர்கள் அனைவரும் கரகோஷம் செய்து தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

பரத நாட்டியத்தின் முக்கிய அம்சங்களான புஷ்பாஞ்சலி, கௌத்தம், ஜதீஸ்வரம், சப்தம்,வர்ணம், காவடி சிந்து, கீர்த்தனம், பதம், தில்லானா ஆகிய அனைத்து உருப்படிகளுக்கும் அணுகளவேனும் அப்பழுக்கின்றி அபிநயித்து ஆடி ஜமாய்த்து விட்டார் செல்வி அபிஷா. அவரது முகத்தில் ஆர்வமும், சுறுசுறுப்பும் பிரதிபலிப்பதை அவதானிக்க முடிந்தது. செல்வி அபிஷாவுக்கு பரதக் கலையில் ஒளிமயமான எதிர்காலம் உண்டு. ஆடுவதோடு மாத்திரம் நின்று விடாது பிறரை ஆட்டு விக்கும் சிறந்த பரத நாட்டிய ஆசிரிiயாகவும் திகழ்வார் என்பதில் அணுகளவேனும் ஐயமில்லை.abissha-10

கனடாவில் பிறந்து வளர்ந்து சங்கீத மேதையாகிய “இசை ஞான இளவரசன்;” றமணன் கிருஷ்ண ராஜ குருக்களின் இன்னிசைப் பாடல்களும், மிருதங்க ஞான வாருதி ஸ்ரீ வாசுதேவன் ராசலிங்கம் அவர்களின் மிருதங்க இசையும், மிதுரன் மனோகரனின் வயலின் இசையும், வி.எஸ்.குருமூர்த்தி அவர்களின் வீணை இசையும் செல்வி அபிஷாவின் அரங்கேற்றத்துக்கு மேலும் மெருகூட்டின என்பது மிகையாகாது.

புலம் பெயர்ந்த நாடான கனடாவில் எமது தமிழ் இசைகளை பேணி வளர்க்க வேண்டும் என்ற வேணவாவில் “தமிழ் இசைக் கலாமன்றத்தினை” நிறுவி அயராது உழைத்து வரும் சட்டத்தரணி தம்பையா ஸ்ரீபதி அவர்கள் அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் உரையில்
abissha-8“பால் குடிப் பராயத்திலே செல்வி அபிஷாவை அவரது பெற்றோர்கள் பரத நாட்டியம் பயில அனு ப்பி விட்டார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. இருந்தாலும் அதனை ஒரு சவாலாக ஏற்று பரத நாட்டியத்தை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்து இன்று மிகச் சிறப்பாக அரங்கேற்றம் செய்துள்ளார் செல்வி அபிஷா செல்வமோகன். அவரது திறமையைப் பாராட்டி இங்கிருக்கும் அனுபவமுள்ள எழுத்தாளர் சிறந்த விமர்சனத்தை பத்திரிகைக்கு எழுத வேண்டும் எனவும் கூறினார். 

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கனடா உதயன் ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் உரையாற்றுகையில் இன்று நடைபெறும் அரங்கேற்றம் கரம்பொனைச் சேர்ந்த குமாரசாமி குடும்பத்தில் நடைபெறும் ஆறாவது அரங்கேற்றமாகும். கடந்த வருடங்களில் நிலாலினி சந்திரமோகன், திவ்யா மற்றும் நர்மதா ஜெகமோகன், சகானா மகேந்திரமோன் ஆகியோர் பரதநாட்டிய அரங்கேற்றங்களையும் ஜனுஷா ரவீந்திரமோகன் ஆர்த்தி விஜயநாதன் ஆகியோர் இசை அரங்கேற்றங்களையும் நிறைவு செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது அபிஷா செல்வமோகனும் ஆறாவதாக இணைந்திருக்கிறார் என்றார்.  Abissha danceநிகழ்வினை தமிழில் திரு பொன்னையா விவேகானந்தனும், ஆங்கிலத்தில் செல்வி சகானா மகேந்திரமோகனும் மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கியிருந்தார்கள்.

சின்னஞ் சிறு மயிலின் சிறப்பான பரத நாட்டிய விருந்தினை முற்று முழுதாக ரசித்து மகிழ்ந்த திருப்தியோடு ரசிகர்கள் கலைந்து சென்றனர்.

abissha-1abissha-2abissha-5abissha-6abissha-7abissha-8abissha-11abissha-10abissha-12abissha-14abissha-15abissha-16abissha-17abissha-28abissha-29abissha-31abissha-32abissha-33abissha-34abissha-35abissha-37abissha-38abissha-36abissha-39

 

abissha-4aabissha-5aabissha-6aabissha-7aabissha-8a

abissha's Bharathanatyam