Annamalaiஅண்ணாமலைக் கனடா வளாகத்தின் பட்டமளிப்பும் 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் 1140; பெல்லாமி ஸ்காபரோ வீதியில் அமைந்துள்ள பெரியசிவன் கோவில்; கலாச்சார மண்டபத்தில் 13.09.2015  காலையும் – மாலையும் இரு நிகழ்வுகளாக, மண்டபம் நிறைந்த சபையோர் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இவ்விழாவின் காலை நிகழ்ச்சிக்கு மருத்துவர் இ. லம்போதரன் அவர்களும் மாலை நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் திருச்சி சங்கரன் அவர்களும் முதன்மை விருந்தினராக வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர். கனடா வாழ் சமூகப் பிரமுகர் சிலரும்; சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.  

அண்ணாமலை கனடா வளாகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் காலை நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்கினார். அவர்; உரையாற்றும்போது டாக்டர் ராஜா சேர். அண்ணாமலைச் செட்டியாரால் நிறுவப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாறு தனித்துவமானது என்றும, இந்தியாவில் நிலவிய ஆங்கில ஆதிக்கம், சுதந்திரப் போராட்டங்கள், நலிந்துகொண்டிருந்த தமிழர் பண்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என்பவற்றின் மத்தியில்  கல்வித்துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் அண்ணாமலைச்செட்டியார்; மேற்கொண்ட அளப்பெரும் பணிகளையும் குறிப்பிட்டு, அவரது அயராத முயற்சியால் சிதம்பரத்திலே 1929 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டமை தமிழ்மொழிக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்;கும் கிடைத்த அரும் பாக்கியமாகும் என்றும்;; குறிப்பிட்டார்.  

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் 2006 ஆம் ஆண்டு ரொறன்ரோவில்; உருவாக்கப்பட்ட அண்ணாமலைக் கனடா வளாகம் தமிழ் – பரதநாட்டியம், சங்கீதம், வயலின், மிருதங்கம், தமிழியல், யோகா முதலான துறைகளில் Diploma, B.A., M.A. Ph.D முதலான கற்கைநெறிகளை மாணவர்களுக்கு அளித்துவருகின்றது. கனடாவில் வாழும் தமிழரின்; மொழி, நுண்கலைகள் ஆகிய துறைகளில் உயர்கல்வியைப் பெறுவதற்குக் களம் அமைத்துக் கொடுக்கும் நல்லதோர் அமைப்பாக இவ்வளாகம் இயங்குவது புலம்பெயர்ந்து வாழும் தமிழருக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும் எனவும் பேராசிரியர் பாலசுந்தரம் வரவேற்புரையிற் குறிப்பிடார். தமிழ் கற்பதில் இளைய தலைமுறையினர் மட்டுமன்றி பெற்றேரும் தம்மை மாணவராகப் பதிந்து பட்டப்படிப்பினை மேற்கொணண்டு வருகின்றனர் என்றும், மாணவரின் வசதிகளுக்கு ஏற்பத் தமிழ் வகுப்புக்கள் வார இறுதி நாட்களிலும் வாரநாட்களில் மாலை நேரங்களிலும் நடத்தப்படுகின்றன என்றும், இக்கல்வி; இங்கு தொழில் வாய்ப்புப் பெறுவதற்கும் உதவியாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். தாயகத்தில் உயர் கல்வியைத் தொடர முடியாமல் இடைநடுவே விட்டுவந்தவர்களும், அங்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்களும் இவ்வளாகத்தில் பதிவுசெய்து தமது உயர்கல்வியைத் தொடர  வசதிகள் அளிக்கப்படுபகின்றன என்றும் கூறினார். 

காலை நிகழ்ச்சியில் நுண்கலைத்துறைகளில் தரஅடிப்படையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை பிரதம விருந்தினர் மருத்துவர்; லம்போதரன் வழங்கினார். அவர் தமது பிரதம விருந்தினர் உரையில் இறையனார் களவியல் சானறுகளுடன் தமிழன் தொன்மை பற்றி அரியதொரு சிறப்பரையாற்றி இவ்வளாகத்தின் பணிகளையும் பாராட்டினரர். சான்றிதழ் பெற்ற மாணவரின் இசை – நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்;றன.

மாலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வளாகத் தமிழ் விரிவுரையாளரும் நிர்வாகப் பொறுப்பாளருமான முனைவர் செல்வநாயகி சிறிதாஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தமதுரையில் இவ்வளாகத்தின் வளர்ச்சி பற்றியும், 2006 ஆம் ஆண்டு தொடக்கம்; நுண்கலைத்துறைகளில் பயிற்சிநெறிகளைக் கற்பிப்பதற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழக நுண்லைத்துறைப் பேராசிரியர்கள் கோடைகால விடுமுறையில் இங்கு வந்து பயிற்சிகளை வழங்கித் தேர்வுகளை நடத்துவது பற்றியும் விளக்கமாகக் குறிப்பிட்டார்.  மேலும் இங்குள்ள  பாடசாலைச் சபைகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது தமிழ் அறிவை வளர்த்துக்கொள்வதற்குரிய வாய்ப்பாக இவ்வளாகம் உள்ளது என்றும், எதிர்காலத்தில் தமிழ் கற்பிப்பதற்குரிய ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் இவ்வளாகம் தமிழ் ஆசிரியர்களை உருவாக்க வாய்ப்பாக உள்ளது என்றும் கூறினார்.  மாலை நிகழ்வின் பிரதம விருந்தினரான பேராசிரியர் திருச்சி சங்கரன் அவர்கள் இவ்வளாகம் மேற்கொண்டுவரும் அரும் பணிகளைப் பாராட்டி இதன் வளர்ச்சிக்கான வாழ்த்துக்களையும் வழங்கினார்.  பட்டம் பெற்ற மாணவரின் நடனம் – இசை – யோகா ஆகிய நிகழ்ச்சிகளும்  இடம்பெற்றன. இந்நிகழ்ச்சிகள்  மாணவரின் திறன்களை வெளிப்படுத்துவதாக அமைந்ததோடு சபையோரின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டன.

இறுதியாக பட்டமளிப்பு நிகழ்வின் அணிவகுப்பு இடம்பெற்றது. பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் முன்னே வர – அவரைத் தொடர்ந்து ஏனைய விரிவுரையாளர்களும் –    M. A., B.A., Diploma சான்றிதழ் பெறும் மாணர்களும் சீருடையுடன் அணிவகுத்து மண்டபத்தில்  வர – சபையோர் எழுந்து நின்று வரவேற்ற காட்சி மிகவும் சிறப்பாக அமைந்தது. விரிவுரையாளர் அனைவரும் மேடையில் நிற்க சான்றிதழ்கள் ஒழுங்கு முறையில் வழங்கப்பட்டன. காலை நிகழ்ச்சியில் வளாக ஆங்;கில விரிவுரையாளர் திரு. சின்னையா சிவநேசன் அவர்களும் – மாலை நிகழ்ச்சியில் வளாகத் தமிழ் விரிவுரையாளர் திரு பொன்னையா விவேகானந்தன் அவர்களும் நன்றியுரை வழங்கி;னார்கள். 

இப்பட்டளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

 

Annamalai-1

Annamalai-2

Annamalai-3

 

 

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 12, 2015