JHC kalaiyarasi-2015- 1aகடந்த வாரத்தில் சனிக்கிழமையும் (10-10-2015), ஞாயிற்றுக்கிழமையும் (10-11-2015) இரண்டு நாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்திய கலை, கலாச்சார நிகழ்வான கலையரசி -2015 மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் சபையோர் பாராட்டும் வகையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

JHC kalaiyarasi-2015- 2சனிக்கிழமை ஸ்காபுரோ சீன கலாச்சார மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்வில் முதலில் கனடா தேசியகீதம், கல்லூரிக் கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றை முறையே இசைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து சங்கத்தின் செயலாளர் மோகன் சுந்தரமோகன்; வரவேற்புரையை வழங்கினார். தொடர்ந்து யாழினி ராஜகுலசிங்கத்தின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினராக கல்லூரியின் இளைப்பாறிய ஆசிரியர் திரு.மு.ஆறுமுகசாமி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.  

JHC kalaiyarasi-2015- 1ஞாயிற்றுக்கிழமை மார்க்கம் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வரவேற்பு நடனத்தை ஸ்ரீமதி செந்தில் செல்வி சுரேஸ்வரனின் மாணவிகள் கல்லூரிக்கு புதிதாக இயற்றப்பட்ட பாடலுக்கும் மிக ஆழகாக வழங்கியிருந்தார்கள். தொடர்ந்து சங்கத்தின் துணைத் தலைவர் தர்மலிங்கம் சிறீதரன்  வரவேற்புரையையும், சங்கத் தலைவர் கதிர் சுப்பிரமணியம் அவர்கள் தலைமையுரையும் வழங்கினார்.  அவர் தம் உரையில், "யாழ். இந்துக்கல்லூரி தமிழர் தலைநிமிர் கழகமாகவும், கலைபயில் கழகமாகவும் தாயகத்தில் தொடர்ந்து திகழ்வதற்குப் பழைய மாணவர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது" எனக் குறிப்பிட்டார். இவ்விழாவின் பிரதம விருந்தினராக 90 அகவையினை நிறைவு செய்து இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் யாழ் இந்துக்கல்லூரியில் பயின்று பின்னர் அக்கல்லூரியில் ஆசிரியராகப் பல காலம் சேவை புரிந்த இளைப்பாறிய ஆசிரியர் திரு.சி.பரமானந்தம் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். 

JHC kalaiyarasi-2015- 3விழாவின் அடுத்த அம்சமாக தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த முனைவர் ஞானசம்பந்தன் அவர்கள் தனது சொற்பொழிவை சபையோரின் பலத்த கரகோஷத்துடன் மிகவும் சுவாரஸ்யமயகவும், சிந்திக்கத் தூண்டும் வகையிலும் நேரம் போவது தெரியாமல் மிக நீண்ட நேரம் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து சுப்பர் சிங்கர் புகழ் திவாகர், சோனியா, மகிஷா கலந்து கொண்ட மெல்லிசை விருந்து ஷியானாஸ் இசைக்குழுவின் நேர்த்தியான இசையுடன் சிறந்த பழைய, புதிய பாடல் தெரிவுகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சபையோர் இவ் இசைமழையில் நனைந்து பரவசம் அடைந்தனர். 

யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவனான பொன்னையா விவேகானந்தனும்,  கனடா ஊஆசு வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்பாளரான ராம் பிரசாத ஆகியோர் சிறப்பாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள்.  

JHC kalaiyarasi-2015- 5இவ் விழாவை சிறப்பாக நடாத்த உதவிய அனைவருக்கும், பார்வையாளருக்கும் நிர்வாக குழு சார்பில் கிருஷ்ணானந்தன் ரட்ணசிங்கம் அவர்கள் நன்றி கூறினார். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

-மோகன் குமாரசாமி
-பழைய மாணவன்- யாழ் இந்துக்கல்லூரி