with writer Jeyamohan-1கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு ஜெயமோகன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார். அச்சமயம் அவருடனான ஓர் இலக்கிய கலந்துரையாடலை ரொறன்ரோ தமிழ் சங்கம் நடாத்தியிருந்தது.

நிகழ்வில் திரு ஜெயமோகன் அவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பல இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது ஐயங்களைக் கேட்டு தெரிந்து கொண்டார்கள்.