மேலைக் கரம்பொன் என்ற 
சோலைப் பதியினிலே
வந்தமர்ந்த வேலவனின்
ஆலயத்தின் அருகினிலே
கற்றவரின் முற்றமது
கல்வி உயர்க்கூடமது

அறிவூற்றி நிற்கிறது
ஆலயமாய்த் திகழ்கிறது
பல் கோடி அறிவாளி
பாரெல்லாம் உருவாகி
வித்தகத்தின் விளைச்சலிலே
புத்தகத்தின் கல்வியிலே
கற்றிட்டோர் உயர்ந்திட்டார்
கல்விதனைப் பயின்றிட்டார்
ஆண்டாண்டாய் ஆளுமைகள்
அதனூடே பெற்றிட்டார்
நீண்டு உயரும் பணியிணைத்து
நிறைந்த சேவை செய்கிறது
சுற்றாடல் சூழல் எல்லாம்
அறிவு பெற்று திகழ்கிறது
பார் என்ற பரப்பெல்லாம்
பரவி நாம் வாழ்கின்றோம்
தகைமைகள் கண்டவர்கள்
தகுதியை அறிகிறார்கள்
கற்றிட்ட கூடமதின்
கல்வித் தகைமைகளை
பெற்றிட்ட பெருமைகளை
அறிந்து அகமே மலர்கிறது
வித்திட்ட கூடமே
அறிவு விருத்தியின் முற்றமே
பெற்றோரை உருவாக்கி
எமைப் பேறுபெற வைத்திட்டாய்
அறிவு சார் பெற்றோர்கள்
மொழியின் வலுவோடு
இனத்தின் பற்றோடு
எம்மையும் உருவாக்க
பெருமை சார் கூடமே
பெரிதுன்னை மதிக்கிறேன்
பரம்பரைக்கும் அறிவூட்ட
பெரும்பணி புரிந்திட்டாய்


– திருமதி ஜலஜா ரகுநாதன் (ஜேர்மனியிலிருந்து)