anpuneri1aசென்ற சனிக்கிழமை  கனடா அன்புநெறி மனிதநேய உதவி அமைப்பு நடத்திய  நாதசங்கமம் 2016 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அரங்கம் நிறைந்ததொன்றாக ரொறன்ரோவில் உள்ள சேர் ஜோன் மக்டொனால்ட் கலையரங்கில் நடைபெற்றது.
பம்பைமடு, வவுனியாவில் அமைந்துள்ள VAROD என்று அழைக்கப்படும் மனநல் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகத்தின் கட்டிட நிதிக்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கலைமாமணி ராஜேஷ் வைத்தியா அவர்களின் வீணை இசைக் கச்சேரி முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெற்றிருந்தது.

rajes-vaithia1aமிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலைமாமணி ராஜேஷ் வைத்தியா அவர்கள் பிரபலமான சில பாடல்களைத் தெரிவு செய்து பார்வையாளர்களை மகிழ்வித்தார். அதுமட்டுமல்ல, பார்வையாளர்களின் விருப்பப் பாடல்களையும் வீணை இசையில் மீட்டி சபையோரைப் பரவசப்படுத்தியிருந்தார்.

anpuneri1bவிழாவின் ஆரம்பமாக திரு.திருமதி கிரிதரன், திரு.திருமதி கிள்ளிவளவன், திரு.திருமதி சத்தீஷ்கரன், மதிப்புக்குரிய போதகர் அல்பேட் அருள்ராஜா, திரு.திருமதி ஜெயக்குமார், திரு.திருமதி கௌரிபாலன் ஆகியோரால் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து கனடா தேசிய கீதம், தமிழ் வாழ்த்துப் பாடல் ஆகியன ihரவி வேணு, சுவேதா கிள்ளிவளவன், நிவேதா கிள்ளிவளவன் ஆகியோரால் இசைக்கப்பட்டது. அடுத்து anpuneri2அன்புநெறி மன்றத்தின் தலைவர் திரு.சிவகௌரிபாலன் அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது. அன்புநெறி பற்றிய காணொளியைத் தொடர்ந்து நிதியுதவித் தொகை செயலாளர் வேணு சிவக்கொழுந்து அவர்களால் கையளிக்கப்பட்டது. நிதியுதவியைப் பெற்றுக் கொண்ட மதிப்புக்குரிய போதகர் அல்பேட் அருள்ராஜா அவர்களின் உரை அடுத்து இடம் பெற்றது. தொடர்ந்து கலைமாமணி ராஜேஷ் வைத்தியாவும், இசை உதவி வழங்கியோரும் பாராட்டப்பட்டனர்.

natha-sangamam2natha-sangamam7natha-sangamam8

natha-sangamam5

natha-sangamam3natha-sangamam6