smoorthy1கொழும்பு வீரகேசரி பத்திரிகைக் காரியாலயத்தில் பத்தாண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவரும், எழுத்தாளருமான திரு. செல்லத்துரை தெட்சணாமூர்த்தி(வீரகேசரி மூர்த்தி) கடந்த வாரம் மார்க்கம் தமிழ் முதியோர் சங்கத்தின் மாதாந்தக் கூட்டத்தின் போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
சங்கத் தலைவர் திரு.சுந்தரலிங்கம் இராஜலிங்கம் அவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவத்து உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார்.

"திரு.மூர்த்தி அவர்களை எமது சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்திருந்தோம். அவர் கமராவுடன் வநந்து புகைப்படங்களை எடுத்தும், நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளை எடுத்தும் மிக அழகாக பத்திரிகைகளில் பிரசுரித்திருந்தார். எதுவித எதிர்பார்ப்புகளுமின்றி இதனை ஒரு தொண்டாக செய்து வரும் அவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பதில் நாம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்" எனக் கூறினார்.

சங்கத்தின் செயலாளர் திரு. நடராஜா சிவசுப்பிரமணியம், இணைப்பாளர் திரு.பரமநாதன் கந்தையா ஆகியோரும் வீரகேசரி மூர்த்தியைப் பாராட்டினார்கள். மற்றும் அங்கு வருகை தந்திருந்த முதியோர்கள் அனைவரும் கரகோஷம் செய்து தமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 20, 2018