book release-1aஎழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய நான்கு நூல்களின் வெளியீடு  ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் ஸ்கரபறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வைத்திய கலாநிதி மைதிலி தயாநிதி அவர்கள் தலைமைதாங்கி தலைமையுரையினையும், வெளியீட்டுரையினையும் அவரே வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்தினை சாமந்தி யோகநாதன் இசைக்க. சபையோரை எழுத்தாளரின் புதல்வி சங்கரி விஜேந்திரா வரவேற்று பேசினார். அமுதே தமிழே என்ற பாடலை அபிநயா பவனும், நிற்பதுவே நடப்பதுவே என்ற பாரதி பாடலை சாகித்தியா ஸ்ரீரஞ்சனும் மிக அழகாகப் பாடி சபையோரின் கரகோஷங்களைப் பெற்றார்கள்.

தொடர்ந்து நூல்களைப் பற்றிய கருத்துரைகளை திருமதி வாசுகி நகுலராஜா, திருமதி கோதை அமுதன், பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன், பொன்னையா விவேகானந்தன் ஆகியோர் பகிர்ந்தார்கள். இசையும் நடனமும் இணைந்த விருந்தாக செந்தில்செல்வி சுரேஸ்வரணின் மாணவிகளின் நடனம் அமைந்திருந்தது. நிகழ்வின் இறுதியாக எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா அவர்களின் நன்றியுரை இடம்பெற்றது. வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு: 1.தமிழ் ஓர் அறிமுகம் –  (ஆங்கிலம் – தமிழ்), 2. சிறுவர் கதைகள், 3. தமிழ் படிப்போம் – ஆரம்பநிலை மாணவர்களுக்கானது  4. தமிழ் படிப்போம் – மேம்பட்டநிலை மாணவர்களுக்கானது. இந்நூல்களின் விற்பனையில் கிடைக்கும் பணத்தை 'சிக் கிட்ஸ் ஹாஸ்பிட்டலுக்கு ( Sick Kids Hospital) அன்பளிப்புச் செய்வதாக ஆசிரியர் அறிவித்திருந்தார்.

book release-2

book release-1

book release-3

book release-4

book release-5

book release-6

book release-7

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 17, 2018