Tamil Mirror Gala 2017-1bஇலங்கைக்கு அடுத்த படியாக புலம் பெயர்ந்த தமிழர்களின் தாயகமாக விளங்குகின்ற கனடாவில் மிகவும் பெறுமதி மிக்கதும், பெருமை கொள்வதுமான தமிழ் மிரர் மாதாந்த பத்திரிகையின் 12வது வருடாந்த நிகழ்வு அண்மையில் மெற்றோ பொலிற்றன் நிலையத்தில் நடந்தேறியது. "Tamil Mirror" என்ற ஆங்கிலப் பத்திரிகையின் வரவுடன் தான் கனேடிய நீரோட்டத்தில் தமிழர்களின் நிகழ்வுகள் கலக்க ஆரம்பித்தன. தமிழ் மக்களின் உண்மையான பிரதிபலிப்பு (Reflect the Tamil Community) இதன் மூலமே சாத்தியமாயிற்று. இதன் நிறுவனர், பிரசுரிப்பாளர், பிரதம ஆசிரியர் ஆகிய முக்கிய பொறுப்புக்களை வகிப்பவர் சார்ள்ஸ் தேவசகாயம் ஆவார்.

with Charlesகனடாவில் உயர் பட்டமொன்றினை பெற்றதன் மூலம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்ற இவர் சிறந்த புகைப்படக் கலைஞருமாவார். இவரது அயராத, அப்பழுக்கற்ற முயற்சியின் விளைவே இந்த நெடும் பயணமாகும். 

தமிழ் மிரரின் முக்கிய பணிகளில் ஒன்று இங்குள்ள சமூக உறுப்பினர்கள். குறிப்பாக இளையோர்கள் செய்துள்ள பல்வேறு திறமைகளை இனம் கண்டு அவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிப்பதாகும். ஆரம்ப நிகழ்வு, தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, மௌன அஞ்சலி என இடம்பெற்றிருக்கின்றது.  இதில் தொடர்ந்து சுருதி பாலமுரளி, செல்வி ராஜசிங்ககம், மேகன் கம்மேர்சன், விதுசாயினி பரமநாதன், ஜூட் ஆகியோரது மகிழ்வூட்டும் நிகழ்வுகள் நிகழ்ச்சிகளின் முதற்பகுதியாகும். அஞ்சலி ஜெயகாந்தன், திரு நேத்தா சபேசன் ஆகியோரின் நடனம் மிக மகிழ்வானதொன்று.

தொடர்ந்து பிரதான ஆசிரியர் சார்ள்ஸ் தேவசகாயம் அவர்களின் உரை மிகவும் அமைதியானது. ஆழமானது. அர்த்தமுள்ளது. மறைவாக எமகக்குள் உள்ள பிஞ்சுக் கலைஞர்களையும், இளம் ஆர்வலர்களையும் கௌரவிப்பு செய்யும் நோக்கம் புலப்பட்டது. அத்துடன் ஜெனனி குமாரின் மாணவிகளின் நடனம் விழாவினை அலங்கரித்தது.Tamil Mirror Gala 2017-2

தொடர்ந்து நடைபெற்றது முக்கியமான விருது வழங்கல் நிகழ்வாகும். பல அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களதும் பூரண ஒத்துழைப்பே இந்த விழாவின் வெற்றிக்கு காரணமாகும். சிறந்த அறிவிப்பாளர்களான சில்வியா பிரான்சிஸ், அபிஷேககா லொயிட்ஸ்ஸன் ஆகியோர் விளங்கினர். அழகான ஆங்கில உச்சரிப்பு, கணீரென்ற குரல்வளம் இருவருக்கும் இருந்தது. சகல நிகழ்ச்சிளும் தெளிவாக இவர்களால் அறிவிக்கப் பெற்றன. Tamil Mirror Gala 2017-1

தமிழ் மிரர் இம்முறை சிறந்த பேச்சாளரான பேராசிரியர் பர்வின் சுல்தானாவை அழைத்தது மிக பெருமை தருவதொன்றாகும். ஏழு ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்ட இவர் இலக்கிய சொற்பொழிவில் உலகப் புகழ் பெற்றவர். இவரது வருகை மிகவும் பெறுமதி மிக்க தொன்றாகும்.

இந்த விழாவில் முதலில் பிஞ்சுகளிலிருந்தே செல்ல வேண்டியிருக்கிறது. இளம், கலை, கலாச்சா விருதுகள் என பிரிவு பெற்றிருந்தது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களாவர். இந்த வகையில் செல்வி அஞ்சலி ஜெயகாந்தன், பத்து வயது நிரம்பிய ஆடலரசி. அண்மையில் இவரது அரங்கேற்றம் மேடையேறியிருந்தது. ஐக்கிய இராச்சியத்திலும், சென்னையிலும் பரிசு பெற்ற சிறுமி. அவருக்கு இந்த ஆண்டு விருது கிடைத்தது. இதேபோலவே திருநீற்றா சபேசன் பதினொரு வயது நிரம்பிய சிறுமி இவரும் அண்மையில் அரங்கேற்றம் கண்டவர். நான்கு வயது முதல் நாட்டியம் பயின்றவராவார். நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் பங்கு கொண்டவர். இவருக்கும் இந்த விருது கிடைத்தது.

Tamil Mirror Gala 2017-10

Tamil Mirror Gala 2017-20

இதுபோல எதிர்காலத்தில் மிளிரப்போகும் இளவலான அகரன் குலேந்திரனுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. பாலலயம்-1 டிவிடி வெளியிட்டு பெருமை சேர்த்தவர இவர். ஏழு வயது நிரம்பிய இவர் மிருதங்க பரிச்சயம் மிக்கவர். அத்துடன் வாய்ப்பாட்டிலும் வல்லவர். வயலின் வாசிக்கவும் செய்வார். ஐம்பது நிகழ்வுகளிற்கு மேல் பங்கு கொண்டவர். இது போல ஹரிஸ்ரன் குமரகுரு என்ற இளவலும் மூன்று மொழிகளிலும் பேசும் ஆற்றல் கொண்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்.  Taekwondo தற்காப்புக் கலையில் கறுப்புப் பட்டி பெற்றவர். ரெனிஸ், கோல்ப், பட்மின்ரன், கிரிக்கட் விளையாட்டுக்களில் பங்கு கொள்பவர். இந்த உன்னதம் மிக்கவருக்கும் விருது வழங்கப் பெற்றுள்ளது.

Tamil Mirror Gala 2017-6

அன்ரியா நந்தீஸ்வரன் பத்து வயது நிரம்பிய சிறுமி. பல துறைகளில் மிளிர்பவள். எழுபத்தைந்து நிகழ்வுகளில் பங்கு கொண்டவள். தமிழில் வல்லவள். கர்நாடக இசை, பகக்திப் பாடல், பியானோ இசை, நீச்சல் போன்றவற்றிலும் ஈடுபடுகிறார். அண்மையில் சலங்கை பூசை நடத்தியுள்ளார். இவருக்கும் இவ்வருட விருது கிடைத்துள்ளது. ரிதிஜா பாலகணேசன் என்ற இளம் சிறுமி அண்மையில் சலங்கை பூசை நடத்தியுள்ளார். வாய்ப்பாட்டு, தமிழ் பேச்சு, நாடக ஈடுபாடு உள்ளவர்.  இவருக்கும் இவ்வாண்டு விருது கிடைத்துள்ளது.

Tamil Mirror Gala 2017-14

தனு பால்ராஜ் வாய்ப்பாட்டு, மிருதங்கம் என்பவற்றில் தேர்ச்சி பெறுகிறார். எட்டு வயதுள்ள இவர் மூன்று வயதில் பலே நடனத்திலும் பங்குபற்றிய ஓருவர். இவரைப் போலவே சரிஷ் பிரபாகரன் ஒன்பது வயது மாணவர். இவரும் கர்நாடக இசை, கணிதம் மற்றும் கலைகளில் தேர்ச்சி பெறுகிறார். இவர்கள் இருவரும் இசை அர்ப்பணம் செய்தவர்கள். சலங்கை பூஜை நிகழ்த்திய கீர்த்தி பிரபாகரன் எட்டு வயது நிரம்பியவர். மெல்லிசை, பிரெஞ்சு மொழி கற்றலில் ஈடுபாடுள்ளவர். பரத நாட்டியமும் இவரது கலை. இவர்கள் எல்லோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

Tamil Mirror Gala 2017-18

திவ்யா ராமச்சந்திரன் பன்னிரன்டு வயது நிரம்பிய இளம் மாணவி.  பரத நாட்டிய அரங்கேற்றம் கண்டவர் கனடா, அமெரிக்கா, இந்திய நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தியவர். பல பிரபலமான இசைக் கலைஞர்களுடன் இணைந்து கொண்ட பிரபலமான கலைஞர். 

இவரைப் போன்று பன்னிரண்டு வயது நிரம்பிய அஞ்சலி வதனகுமாரன் மிக இளம் வயதுள்ளவர். வயது பதினொன்று மட்டுமே. ஆனால் பதினாறு வயதுள்ளவர்களுடன் கலந்து நடனம் ஆடக்கூடியவர். பரத நாட்டிய அரங்கேற்றம் கண்டவர். பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். அனைவருக்கும் விருதுகள் கிடைத்தன.

அனுஸ்கா அன்பழகன் ஏழு வயதுள்ள இளம் குருத்து. நான்கு வயது முதல் பரத நாட்டியம் கற்றவர். சலங்கை பூஜை முடித்துள்ளார். இவர் போலவே அக்ஷிகா அன்பழகன் தனது சகோதரிகளுடன் சலங்கை பூஜை முடித்தவர். ஐந்து வயது மட்டுமே இவருக்கு. மூன்று வயது முதல் பரதநாட்டியம் பயில்கிறார்.

மொத்தமாக பதின்மூன்று இளம் சிறார்கள் இளம் கலை, கலாச்சார விருதுகளுக்கு தெரிவாகி விருதுகள் வழங்கப்பட்டுள்ளனர். இந்தக் கலைஞர்களை எவ்வாறு தெரிவு செய்து அற்புதமாக இங்கு கௌரவித்துள்ளது தமிழ் மிரர் என்பது மிகவும் வியப்பானதொன்றாகும்.

Tamil Mirror Gala 2017-8

Tamil Mirror Gala 2017-9

Tamil Mirror Gala 2017-5

அடுத்துள்ள பிரிவு இளம் தலைமைத்துவம் (Youth Leadership Awards) ஆகும். இதில் தெரிவான றபீனா ரவீந்திரன் மக்மாஸ்ரர் பல்கலைக்கழக மாணவி. சட்டமும், தத்துவமும் பயிலும் இவர் சமூக கல்வி, சமூக வேலை என்பவற்றில் ஈடுபட்டுள்ள ஒருவர். ஒன்ராறியோ இளவல் பாராளுமன்ற அமைப்பில்  மிகவும் செயல்பாடு கொண்டுள்ளார். இதே வேளையில் தீரன் துரைராஜா ஒன்பதாம் வகுப்பு மாணவர். ஆனால் தலைமைத்துவ துறையில் சிறப்பான பேச்சாற்றல் உள்ளவர். பல தொண்டர் சேவையில் ஈடுபட்டுள்ளார். இலங்கையில் உள்ள வலுவள உறுப்பினர்களுக்கு நிதி சேகரித்து உதவியவர். இந்த வரிசையில் சோபியா கபிரியேல் பதினாறு வயது நிரம்பிய இளம் மாணவி.விவாத குழுவில் துணைத்தலைவர் இவர். பேச்சுத் துறையில் பல பரிசில்கள் பெற்றுள்ளார்.

Tamil Mirror Gala 2017-16

Tamil Mirror Gala 2017-17

எதன் கபிரியேல் பதினான்கு வயது இளம் மாணவர். இவரும் விவாத குழுவில் பங்கு கொள்பவர். விசேட தேவை மாணவர்களுக்கு உதவுபவர். வுயநமறழனெழ கலையில் கறுப்புப் பட்டி பெற்றவர். சிறந்த தொண்டர் சேவையாளர்.

மேற்கூறிய நால்வரும் nதிர்கால தமிழினத்தின் தலைமைத்துவ செல்வங்கள். இவர்களை இனம் கண்டு, தகுதி அறிந்து முன் கொணர்ந்து மக்கள் மத்தியில் வெளிச்சமிட்டு காட்டிய தமிழ் மிரர் குழுவினரை எப்படிப் பாராட்டினாலும் தகும் என்றே கூறவேண்டும்.

Tamil Mirror Gala 2017-7இந்தத் தெரிவுகளுக்கு அப்பால் மிகப் பெரிய விருது ஒருவருக்கு கிடைத்துள்ளது. இதனை பல்துறை ஆற்றல் இளையோர் விருது (Multi Talented Youth Award) எனலாம். சுருதி பாலமுரளி என்ற பதினோராம் வகுப்பு மாணவியே இந்த அதிஸ்டசாலி. கூடைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் என விளையாட்டுத் துறைகளில் பிரகாசிக்கும் இவர் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். வயலின், வீணை, பரதநாட்டியம் கூட அவரது சிறப்புக்கள். TVI, TAMILONE, TET நிகழ்வுகளில் கலந்து கொண்டவர். புல்லாங்குழல், வயலின் கூட வாசிப்பார். பல இசைக்குழுவில் பங்கு கொள்கிறார். இவரது திறமைகளைக் கண்டால் பிரமிப்பு ஏற்படுகிறது. இவர் தமிழ்ச் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் சிறந்த பெண்மணி. இவ்வாண்டு மிகச்சிறந்த விருது பெறுவதில் நாமும் பூரித்து போகிறோம்.

Tamil Mirror Gala 2017-11

Tamil Mirror Gala 2017-25

Tamil Mirror Gala 2017-23

இவை தவிர உலக தரம் வாய்ந்த பாடகியாகி வளரும் இளம் பாடகி லக்ஷ்மி சிவனேஸ்வரலலிங்கம், எதிர்கால சமூகத்தினை உருவாக்கி நிற்கும் ஜனனி பாஸ்கரன், பரத நாட்டியத்தில் 30 ஆண்டுகளாக பெரும் சேவையாற்றிய திருமதி நிர்மலா சுரேஸ், மிகச்சிறந்த கலைத்துறை சேவை செய்த நிரோதினி பரராஜசிங்கம் ஆகியோர் மிகவும் உன்னதமான முறையில் கௌரவம் பெற்றுள்ளார்கள். 

Tamil Mirror Gala 2017-13

மேலும் இரண்டு சிறப்பு விருதுகள் வழங்கப் பெற்றன. சமூகத்துறையில் செய்த தலைமைத்துவ சேவைக்கான Centre for Leadership and Innovation   நிலையம் இந்த தகுதி பெறுகிறது. அத்துடன் முன்னாள் பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் அவர்களின் மகளான மல்லிகா வில்சன் அதி விசேட சாதனையாளர் விருது பெற்றார். சட்டத்துறையில் இவர் செய்த சாதனைகள் பல. தற்போது Nava Wilson சட்ட நிலையத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். தமிழ் மிரரின் மிகச்சிறந்த விருதினை இவர் பெற்று எல்வோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Tamil Mirror Gala 2017-19

சபையோர் அனைவரையும் ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும் மூழ்கடிக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிற்சேச் ஸ்ரோவில் நகர மேயர் Justyn Altman தனது மேயருக்குரிய விசேட பட்டியை கழற்றி சார்ள்ஸ் தேவசகாயம் அவர்களுக்கு அணிவித்து அழகு பார்த்தார். விழா முடியும் வரை அதனை கழற்ற வேண்டாம் எனவும் பணித்தார். கனடாவில் எந்த மேடையிலும் காணாத நிகழ்வு இதுவாகும். மொத்தமாக இருபத்து நான்கு பேர் விருது பெற்றனர்.

Tamil Mirror Gala 2017-26

இறுதியில் அனைவரும் எதிர்பார்த்த பேராசிரியர் பர்வீன் சுல்தானா சொற்பொழிவாற்றினார். தற்போது எல்லோரது ரசனை குறைந்து வருகிறது என்பதே இவரின் பேச்சின் சாரமாகும். ஆழமான, அழகான, அற்புதமான சொற்பொழிவு அது. நடு இரவு வரை மெய்மறந்து ரசித்த தமிழ் மிரரின் வெற்றி தமிழர்களின் வெற்றியாகும்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 17, 2018