TASSC-2018-1aஇன்று  ஜனவரி மாதம் 27ம் திகதி சனிக்கிழமை Tamil Alumni Sports Club of Canada(TASCC) விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் பிரிவுகளுக்கிடையே பூப்பந்தாட்ட போட்டிகள் கனடாவின் ஸ்காபுரோ பிரதேசத்தில் அமைந்திருக்கும் " Epic Sports Centre"  இல் நடைபெற்றது.

தேசிய கீதம் தமிழ்தாய் வாழ்த்து என்பவற்றோடு நிகழ்வு தொடங்கியது. இப் போட்டிகள் 18 இரட்டையர் பிரிவுகளுக்கிடையே நான்கு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு ஒரே நேரத்தில் ஆரம்பபமாகியது. அன்றைய போட்டிக்களம் மிகவும் உற்சாகமாகவும்இ விறுவிறுப்பாகவும் அமைந்தது. நான்கு பிரிவுகளில் வெற்றியீட்டிய முதல் இரண்டு போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணம் பரசளிக்கப்பட்டது. அத்துடன் வெற்றி பெற்ற இரு குழுக்களுக்கு பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன. 

TASSC-2018-1

TACCA-2018-1

TASCC Flyer

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 29, 2018