paul_book released1aமருத்துவர் போல் ஜோசேப் அவர்களின் “நலம் நலம் அறிய ஆவல்” “அகவிதைகள்” ஆகிய இரு நூல்களும், “வருமுன் காப்போம்” நலவாழ்வு இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு கடந்த வாரம் மிடில்பீல்ட், பின்ஞ் அவென்யூ சத்திய சாயிபாபா மண்டபத்தில் நடைபெற்றது. வருகை தந்தவர்களின் மனம் போல் மண்டபமும் நிரம்பி வழிந்தது. மங்கல விளக்கேற்றல், தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், குறளோசை வாழ்த்துப் பாடல், வரவேற்புரை அனைத்தும் நிறைவு பெற ஆய்வுரைகள் தொடங்கின.

“நலம் நலம் அறிய ஆவல்” என்ற ஆரோக்கிய நூல்பற்றிய விமர்சனத்தை எழுத்தாளர் “நவம்” தனக்கே உரிய பாணியில் முன்வைத்தார். பாராட்டுக்களும் கண்டனங்களும் இருந்தன. தொடர்ந்து மருத்துவ நோக்கில் டாக்டர் லம்போதரன் அவர்கள் நூலை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியர் பற்றி திரு.லிங்கம் நடராஜா அவர்களும், வாசகர்கள் நோக்கில் திருமதி வாசுகி நகுலராஜா அவர்களும் பேசினார்கள்.

“அகவிதைகள்”  நூலின் ஆய்வுரையை பொன்னையா விவேகானந்தன் அவர்களும், கவிஞர் புகாரி அவர்களும் நிகழ்த்தினார்கள். பொன்னையா விவேகானந்தன் அவர்கள் கவிதை நூலிலிருந்து சில கவிதை வரிகளை எடுத்து உதாரணம் காட்டிப் பேசினார். புகாரி அவர்களும் நூல் பற்றியும், ஆசிரியர் பற்றியும், கவிதையும் சொல்லி நகைச்சுவையாகப் பேசினார். அறிவுப்பாளராக மேரிகியூரி போல் அவர்கள் தனியொருவராக செயற்பட்டார். அளவாக, அழகாக, கலகலப்பாக சபையை வைத்திருந்தார்.
அடுத்து நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. சுpறப்புரையை “ஈஸ்ட் எவ். எம்” திரு நடா இராஜ்குமார் வழங்கினார். விழாவிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் தனது தலைமையுரையை தொடக்கவுரையாக நிகழ்த்தியபோது சபை நிறைந்திருப்பதை சுட்டிக்காட்டிப் பேசினார். வைத்தியர் போல் ஜோசேப் அவர்களின் கல்வித் திறமைகளைப் பாராட்டிப் பேசினார்.

ஆன்மீக வழிகாட்டி – தூய ஆரோக்கிய அன்னை தமிழ் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த அருட் தந்தை சாள்ஸ் கொலன் பிரதம paul_book released_2வீருந்தினராகக் கலந்து கொண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றினார்.
சுpறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிநாயகர் கந்தவனம் அவர்கள், கௌரவ விருந்தினர் அருட்தந்தை யூட் நிக்சன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

கௌரவிப்பு நிகழ்வில்.. முனைவர் பார்வதி கந்தசாமி, ரவிச்சந்திரிகா குருநாதன், டாக்டர் செந்தில்நாதன், பால. சுpவகடாட்சம், சேவியர் அன்ரன் செபஸ்ரியாம்;பிள்ளை, எஸ்.பத்மநாதன், புஸ்பா கிறிஸ்ரி, அகணி சுரேஸ், வசந்தாதேவி நடராஜன், பரா பத்மநாபன், கவிஞர் கணேசன் ஆகியோர் சமூக அக்கறையுடன் பல வழிகளில் மக்கள் நலப் பணயாற்றுகின்றமைக்காக ஒரு சேர கௌரவிக்கப்பட்டார்கள்.

இதைத் தொடர்ந்து நன்றியரை நூலாசிரியர் டாக்டர் போல் ஜோசேப் அவர்களால் வழங்கப்பட்டது. ஒரு நிறைவான நூல் வெளியீட்டு விழாவைப் பார்த்த திருப்தியோடு சபை கலைந்தது.  

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: November 28, 2018