canada1bஉலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிஏவி கன்சல்டிங் ஆகியவை இணைந்து உலகம் முழுவதுமுள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 65 விடயங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளி வழங்குமாறு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை, கலாச்சார தாக்கம், முயற்சியான்மை, மரபுரிமைகள், வர்த்தகம், மின்வலு எரிசக்தி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகச் சிறந்த நாடுகளின் வரிசையில் கனடா மூன்றாம் இடத்தை வகிப்பதுடன், உலகின் மிகச் சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதலாம் இடத்தை வகிக்கின்றது.

canada1cஉலகளாவிய ரீதியில் கனடாவில் அதிகளவான இலங்கையர்கள் வாழ்கின்றனர். இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் மாத்திரம் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாகும். ரொறன்ரோ ஒன்ராறியோவில் அதிக அளவான தமிழர்கள் வாழ்கின்றனர்.

கனடாவில் பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 16வது பேசும் மொழியாக தமிழ் உள்ளமை விசேட அம்சமாகும்.

உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் சுவீடன் இரண்டாமிடத்தையும், டென்மார்க் மூன்றாமிடத்தையும் நோர்வே நான்காமிடத்தையும், சுவிட்சர்லாந்து ஐந்தாமிடத்தையும் பிடித்துள்ளது.