sinmaji2aஈழத்தின் இன்னுமொரு இளவரசியாய், மிகப் பிரபலமான விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஈழத்தமிழரின் இசைக்குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் இசைக்குயில் சின்மயி சிவகுமார். கணீரென்று இதமாய் ஒலிக்கும் இனிய குரல், அழகான சிரிப்பு, எதற்காக இந்திய மண்ணில் காலடிவைத்து இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்ற தெளிவோடும், முயற்சியும் உறுதியும் நிறைந்த கண்களோடும் தோன்றும் சிறுமி. பலப்பல தடைகள் சோதனைகளைத் தாண்டி இன்று இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தெரிவாகியுள்ள முதல் மூன்று போட்டியாளர்களுள் ஒருவராக எமக்கெல்லாம் பெருமை சேர்த்திருக்கிறார்.

 

sinmaji4தாய்வழியில் சாவகச்சேரி மட்டுவிலையும் தந்தை வழியில் மானிப்பாயையும் சொந்த இடங்களாகக் கொண்டு ஈழத்தில் பிறந்த குழந்தை. நான்கு மாதக் குழந்தையாகத் தாய் தந்தையுடன் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து கனேடிய மண்ணில் வளர்ந்து வருகின்ற சின்மயி, சிறுவயது முதலே தமிழிலும் இசையிலும் திறமை மிக்க சிறுமியாக வளர்ந்து வருபவர்.

3 வயதுக் குழந்தையாக இருக்கும் போதே பலர் கூடியிருந்த சபையொன்றில் "அயிகிரி நந்தினி" என்ற அம்பாள் ஸ்லோகத்தை தெளிவான உச்சரிப்போடு இசையோடு பாடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த குழந்தை. பலப்பல மேடைகள், போட்டிகள் என இசைத்திறமையையும் தமிழ் திறமையையும் நிரூபித்திருக்கின்றார்.

8 வயதில் TVI தொலைக்காட்சியில் நடாத்தப்பட்ட சூப்பர் ஸ்ரார் போட்டி நிகழ்ச்சியில் தன்னைவிட வயதில் பெரியவர்களோடு போட்டியிட்டு, இறுதிப்போட்டியில் இசையமைப்பாளர், நடிகர் கங்கை அமரன் முன்னிலையில் சிறப்பாகக் பாடி 3ம் இடத்தைப் பெற்றுக்கொண்டவர்.

sinmaji3அதனைத் தொடர்ந்து வெற்றியீட்டிய போட்டிகளிலும், பங்கேற்ற நிகழ்ச்சிகளிலும் சின்மயியின் தமிழ்த் திறமையையும் இசைத் திறமையையும் பலரும் பாராட்டியிருக்கின்றார்கள்.

கனேடிய மண்ணில் வளர்தாலும்கூட ஆங்கில உச்சரிப்பு சிறிதுமே கலக்காமல் தமிழை மிகத் தெளிவாக உச்சரித்துப் பாடக்கூடிய திறமை சின்மயியிடம் இருக்கின்றது. கனேடிய மண்ணிலும் ஐரோப்பிய மண்ணிலும் ஒலித்த சின்மயியின் குரல் இன்று சர்வதேச அரங்கில் இன்று சர்வதேச அரங்கில் ஒலித்துப் பாராட்டுப்படுகிpன்றது என்றால் அதற்கு இவரது கடும் முயற்சியும் உறுதியும் பெற்றோர்களின் ஊக்கமும்தான் காரணம்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிsinmaji6ன்மயி பல கடினமான பாடல்களைத் துணிவோடு சிறப்பாகப் பாடி நடுவர்களின் பாராட்டுக்களைப் பெற்றிருக்கின்றார். இந்தவகையில் படிப்படியாக முன்னேறி இப்போது இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருக்கின்றார் சின்மயி. எங்கள குரல், மண்ணின் குரல் என்ற வகையில் ஈழத்துச் சிறுமிக்கு எமது ஆதரவை வழங்கி அவரது வெற்றிக்கு வழிசெய்வோம்.

எமது வாக்குகளை சின்மயிக்கு அளித்து எமது குழந்தைக்கு எமது ஆதரவை அளிப்போம். கனடிய-ஈழ மண்ணின் குரலாய் இந்திய மண்ணில் மகிழ்ந்து பாடி வெற்றி சூட வாழ்த்த்துக்கள் சின்மயி. 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 28, 2019