Music Blendz1aகனடாவில் இயங்கி வரும் இரண்டு அமைப்புக்களான Veenalayam Temple of Music மற்றும் Toronto Voice of Humanity   ஆகியன இணைந்து நடாத்திய Musical Blendx  என்னும் இசை நிகழ்ச்சி மூலம் இருபதாயிரம் டாலர்களை ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக சேகரித்து வழங்கப்பட்டன.

கடந்த சனிக்கிழமை ஸ்காபுறோவில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலயத்தில்  நடைபெற்ற இந்த அற்புதமான நிகழ்ச்சியில் கனடாவில் உள்ள இளம் இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் ஆகியோர் பங்கெடுத்து தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்தனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான திரு.ஜிம் கரிஜியானிஸ் மற்றும் எமது பாராளுமன்ற திரு ஹரி ஆனந்தசங்கரி ஆகியோர் அங்கு கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து இரண்டு அமைப்புக்களையும் பாராட்டி உரையாற்றினார்கள்.

Sequence 01

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 19, 2019