Srilanka-Book-2019 June1aஎழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் கனடா தமிழ் பத்திரிகைகளில் தொடராக எழுதிய இரண்டு புதினங்கள் சென்ற மாதம் இலங்கையில் வெளியிடப்பெற்றன. 

குரு அரவிந்தனின் 50 ஆண்டுகால இலக்கிய சேவையைப் பாராட்டி ஞானம் கலை இலக்கியப் பண்ணையால் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற நாவல் 16-06-2019 கொழும்பு தமிழ்சங்க மண்டபத்தில் வெளியிடப் பெற்றது.

 இதற்குSrilanka-Maha-Book-2019 June2 அடுத்த வாரம் 24-06-2019 தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி பாவலர் துரையப்பாப்பிள்ளை அரங்கில் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ என்ற நாவலும் அரங்கம் நிறைந்த ஆர்வலர்கள் மத்தியில் வெளியிடப்பெற்றது.

‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற நாவல் மொன்றியலில் இருந்து வெளிவரும் இருசு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ என்ற நாவல் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. இந்த இரண்டு நூல்களும் மணிமேகலைப் பிரசுரத்தால் பிரசுரிக்கப்பட்டிருந்தன. 

Novel-2- Enna solla- 2018-‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற நாவலின் முதற் பிரதியை ஞானம் பத்திரிகை பிரதம ஆசிரியர் திரு. தி. ஞானசேகரன் அவர்களும், விசேட பிரதிகளை ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் திரு. பாரதி இராஜநாயகம், பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆகியோரும் நாவலாசிரியர் குரு அரவிந்தனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். இந்த விழாவில் ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் சார்பில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் ‘கதாவித்தகர்’ என்ற விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  திருமதி பத்மா சோமகாந்தன், கே. எஸ். சிவகுமாரன், தகவம் செயலாளர் வசந்தி தயாபரன், ஞானம் பாலச்சந்திரன் போன்ற பல இலக்கிய ஆர்வலர்களும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வில் ஞானம் பாலச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மகாஜனக் கல்லூரியில் வெளிIswaria-Kuru- Book-2019 July 10-4யிடப்பட்ட ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ என்ற நாவலின் முதற்பிரதியைப் பெற்றோர், ஆசிரியர், மாணவர்களின் கரவொலியின் மத்தியில் மகாஜனக்கல்லூரி அதிபர் ம. மணிசேகரன் அவர்களும் விசேடபிரதியைப் பொது வைத்திய நிபுணத்துவ ஆலோசகர் வைத்திய கலாநிதி த. பேரானந்தராஜா அவர்களும் நாவலாசிரியர் குரு அரவிந்தனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களும் கலந்து சிறப்பித்தார். மகாஜனக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’ என்ற நாவலை மகாஜனமாதாவிற்குச் சமர்ப்பணம் செய்திருந்த குரு அரவிந்தன் தனது இந்த நாவலையும் நிறுவியவர் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவுப் பேருரை ஒன்றை நிகழ்த்தி, மகாஜனமாதாவிற்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். அகில இலங்கை மாணவர்களுக்காக வெற்றிமணி பத்திரிNovel- June 2019கையின் ஆதரவுடன் சிறுகதைப் போட்டி ஒன்றையும், அதிபர் ஜெயரத்தினத்தின் நூற்றாண்டு விழாவின்போது மகாஜன மாணவர்களிடையே சிறுகதைப் போட்டி ஒன்றையும் ஏற்கனவே நடத்திப் பரிசுகளும் விருதுகளும் கொடுத்திருந்தார். சமீபத்தில் சர்வதேச சிறுகதைப் போட்டி ஒன்றையும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் நடத்திப் பரிசுகள் கொடுத்திருந்தார்.

பிரபல எழுத்தாளரான குரு அரவிந்தனின் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ என்ற நாவலின் அட்டைப்பட நாயகியாக கனடாவில் பிறந்து வளர்ந்த,  புதிய தலைமுறையைச் சேர்ந்த  இளம் நாட்டிய தாரகையும், சிறந்த பாடகியுமான செல்வி ஐஸ்வரியா சந்துரு அவர்களின் படம் இடம் பெற்றிருந்ததைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். ரொறன்ரோவில் நடந்த பிறிதொரு நிகழ்வில் ஆசிரியர் குரு அரவிந்தனிடம் இருந்து செல்வி. ஐஸ்வரியா சந்துரு அவர்கள் விசேட பிரதியைப் பெற்றுக் கொண்டார். 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: August 6, 2019