Magizhampoo-1aதிருமதி கிருஷ்ணவேணி என்ற "தீபதிலகை" அவர்களின் " மகிழம்பூவும் அறுகம்புல்லும்"  என்ற இலக்கிய நூல் வெளியீடு ஆகஸ்ட் 9ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ஸ்காபோரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இலக்கியத்துறை சார்ந்தவர்கள், கல்விமான்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், அன்பான உறவுகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

Magizhampoo-4

Magizhampoo-3

Magizhampoo-2

Magizhampoo-6

Magizhampoo-7

Magizhampoo-5

திருமதி கிருஷ்ணவேணி என்ற "தீபதிலகை" அவர்களின் " மகிழம்பூவும் அறுகம்புல்லும்"  என்ற இலக்கியப் படைப்புக்கு ஒரு சில உற்சாக வார்த்தைகள் கூறுவதில் நிறைவடைகிறேன். வேணி அவர்களின் தந்தை நயினாதீவையும், தாயார் நெடுந்தீவையும் சேர்ந்தவர்கள். மணிமேகலையில் குறிப்பிட்ட அக்கம் பக்கத்திலுள்ள இவ்வீரு தீவுகளில் வாழ்ந்து பெற்ற பால்ய அனுபவங்கள் இவ்விலக்கியப் படைப்புக்கு உந்துதல் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆசிரியர் ஜெர்மனிக்கு முதலில் புலம் பெயர்ந்து ஜெர்மன் மொழி படித்து, அங்கு வாழ்ந்ததன் பின் இங்கிலாந்தில் சென்று வாழ்ந்து வருகிறார். இவ்விரு நாடுகளில் மொழி, வாழ்வு முறைகளில் மூழ்கியிருந்தும் தமிழில் ஒரு நூல் படைப்பதற்குரிய தமிழ் இலக்கிய புலமை கொண்டிருந்தது பாராட்டுதற்குரியது.

இலங்கையில் வாழும் பூர்வீக குடிமக்களாகிய பௌத்த சிங்களவர்கள், சைவதடதமிழர்கள் சந்திக்கும் இடம் நயினாதீவு. கடந்த கால நினைவுகளினால் தூரச்சென்றிருக்கும் இரு தேசியங்களையும் இணைக்கும் பாலமாக அமையும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நயினாதீவின் நாகபூசணி அம்மாள் ஆலயச் சூழலில் இருந்து தனது கதையைத் தொடர்வது ஓர் ஒப்புரவு நெறி.
"இந்த கடந்த காலத்துக்குள் நாம் எதை விரும்பி உணர்வுபூர்வமாக நமது ஞாபகத்தில் இருத்திக்கொள்கிறோமோ அதுவே வரலாறு"  என்று வரலாற்றுக்கு சிறந்த விளக்கம் கொடுத்து மீனவ சமூகத்தோடிருந்த தனது ஞாபக உணர்வலைகளை தனது பேனாவின் ஊடாக கொப்பளித்துள்ளார். அச்சமூகத்தின் விடாமுயற்சி, தாராளம், விருந்தோம்பல் போன்ற அறநெறிகளை மிக நுணுக்கமாக உயிர்த்துடிப்புடன் உசாவியுள்ளார்.

இவை அவரது பேனாவின் உதாரண வரிகள்:

ஆகா என்ன அழகு! ஒரே பார்வையில் கடலையும், கடல் சார்ந்த நிலத்தையும் பார்ப்பது "நெய்தல் நிலம்" அதற்கே உரித்தான குணங்கள் மாறாது எம்மை வரவேற்கின்றன. வழி நெடுகிலும் வானளாவிய மரங்களும், பசுமை நிறைந்த தரைகளும் விரிந்து நீண்டு கொண்டு சென்றது. வீசும் கடல் காற்று நாசி வழி புகுந்து மனதை நிறைத்தது.

"பெரியவர் நண்டை எமக்காக பேரம் பேசினார். நீலகால் நண்டு பெட்டை நண்டுதான் ருசியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டு தெரிந்தெடுத்தார். மீன் வைத்திருப்பவரும், பெரியவரும் உறவுக்காரர்போலும், விருந்தாளி எந்திருக்கிறார் விலை கேட்காதே வீரும்பியதை எடுத்துக்கோங்க என்றார். நான் இடைமறித்து உங்கள் அன்புக்கு விலையில்லை அதை எங்களால் விலை மதிக்க முடியாது. இருப்பினும் எங்கள் அன்பளிப்பாக iஎத்துக்கொள்ளுங்கள் என்று கூறி அவர் மறுக்க வலுக்கட்டாயமாக பணத்தைத் திணித்து விட்டு நண்டை வாங்கினேன்.

வந்தியத்தேவனுடனான உரையாடல் மூலம் மனிதர்களின் தேடல்களுக்கு விளக்கம் கொடுப்பதாக இந்நூல் அமைகிறது. கட்டடக் கலை, புவியியல், அரசியல், சமயம், தமிழ் இலக்கியம், காப்பியங்கள் இவைகள் அனைத்திலும் புதைந்து கிடக்கும் உண்மைகள், குவிந்து கிடக்கும் புதிர்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

Magizhampoo-7a

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: August 21, 2019