கனடாவில் நன்கு அறியப்பட்ட புகைப்படக் கலைஞரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான கனா ஆறுமுகம் அவர்கள் வருடாந்தம் நடாத்தும் நினைவுகள்-2020 பல்சுவை மற்றும் விருதுகள் வழங்கும் விழா என்பது அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு பெரு விழா என்று கூறலாம். இவ்விழா கடந்த சனிக்க்கிழமை மாலை காபுரோ சீன கலாச்சார மண்டபத்தில்; வெகுசிறப்பாக நடைபெற்றது.
இளம் பாடக பாடகிகளை குழுக்களாக அமைத்து அந்த குழுக்களுக்கிடையில் பாடல் போட்டிகளை நடாத்தி அவர்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பணப் பருசுகளை வழங்குவதே இந்த விழாவின் நோக்கங்களில் ஒன்றாகும்.
மேற்படி பாடல் போட்டி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல நடுவர்கள் பாடல்போட்டிகளை மேற்பார்வை செய்து சிறந்த பாடல் குழுக்களைத் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் இளையோர் தொடக்கம் முதியோர் வரையிலுமானவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் விலருக்கு வெவ்வேறு துறைகளில் வீருதுகள் வழங்கப் பெற்றன. இவர்களில் திரு. சின்னத்தம்பி சண்முகராஜாவிற்கு தமிழ் மொழி சார்ந்த துறைகளில் பணியாற்றியமைக்காக விருது வழங்கப்பட்டது. கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் அங்கு இடம்பெற்றன.