covid-19வேண்டாத விருந்தாளியை எப்படித் தவிர்ப்பது என்பதில் கவனம் எடுக்க வேண்டும். கொறோனா வைரஸ்சை நாங்கள் சாதாரணமாக எண்ணக்கூடாது. எமது இனத்தைச் சேர்ந்த சிலருக்கும் இது தொற்றியிருக்கின்றது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாடுதான் கொறோனா வைரஸ்சால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதற்குக் காரணம் பாதிக்கப்பட்டவர்கள் அனேகமாக முதியோர்களாக இருப்பதேயாகும். இந்த நகரங்களில் 23 வீதமானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்வர்கள். இறந்தவர்களில் அதிகமானவர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தி இவர்களுக்குக் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாகும். இதைவிட நீரழிவு போன்ற வேறு சில நோய்களும் இவர்களுக்கு ஏற்கனவே இருந்திருக்கின்றன. இத்தாலியில் முக்கியமான கடைகளைத் தவிர ஏனையவற்றை உடனடியாக மூடும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. பெரிய அங்காடிகளும், மருந்துக் கடைகளும் மட்டும் திறப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். வட இத்தாலியில் உள்ள லொம்பாடி, வெனிட்ரோ ஆகிய நகரங்களே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சென்ற புதன் கிழமை இத்தாலியில் இருந்து கிடைத்த தகவலின்படி 12,462 பேர் கொறோனா வைரஸ்சால் பீடிக்கப்பட்டிருந்தனர். 827 பேர் மரணித்திருந்தனர். இதுவரை 28 பில்லியன் டொலர் இந்தத் தொற்று நோயைத் தடுப்பதற்காக இத்தாலிய அரசு ஒதுக்கி இருக்கிறது.

வயோதிபத்தால் ஏற்படும் மரணங்களைத் தவிர ஏனைய மரணங்கள் எதிர்பாராத அதிர்ச்சியைத் தரக்கூடியன. இயற்கையால் அழிவு, யுத்தத்தால் அழிவு இப்படியாகத் தொடர்ந்து அழிவுகளைச் சந்தித்த உயிரினங்கள் வைரஸ் என்று சொல்லப்படுகின்ற கண்ணுக்குத் தெரியாத மிகநுண்ணிய கிருமிகளாலும் காலாகாலமாய் அழிக்கப்படுகின்றன. எத்தனையோ உயிரினங்கள் இப்போது இந்த உலகில் முற்றாக அழிந்து போனதற்கு இத்தகைய வைரஸ்சும் ஒரு காரணமாகும். ஆணுக்குண்டுகள் போன்ற அதிபயங்கர ஆயுதங்களைப் பாவிக்காமல், யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இலகுவாக உயிரினங்களை அழிப்பதற்கு வைரஸ்சுகளே போதுமானவை. இந்தக் கட்டுரை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மட்டுமே எழுதப்படுகின்றது.

இந்தக் கட்டுரையை எழுதலாமா என்று கூடச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. ஒரு கலந்துரையாடலின் போது எனக்கு அருகே இருந்த ஒருவர் எழுந்து, அந்தந்தத் துறையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் தங்களுக்குத் தொடர்பில்லாத துறைகள் பற்றி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார். அவர் குறிப்பிட வந்தது மருத்துவர்தான் மருத்துவத்தைப் பற்றியும், சட்டத்தரணிதான் சட்டத்தைப் பற்றியும் அந்தந்தத் துறை சார்ந்து எழுதவேண்டும் என்பதே அவரது வேண்டுகோளாக இருந்தது. எல்லோரும் மௌனமாக இருந்தார்கள், ஒரு பெண்மணி மட்டும் எழுந்து, அப்படியென்றால் எழுத்தாளர்கள் என்று இருக்கும் நாங்கள் எதை எழுதுவது என்று கேட்டார். அவரது நியாயமான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், தான் சொல்ல வந்ததை அவர் வாபஸ் வாங்கிக் கொண்டார். சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது ஒரு எழுத்தாளனின் கடமை என்பதால் இக் கட்டுரையை எழுதுகின்றேன்.

பெரிய அங்காடி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். கிருமிபரவாமல் தடுக்கும் கையில் பூசக்கூடிய கிருமிகொல்லி மருந்து வாங்கத்தான் சென்றேன். எல்லாம் விற்று முடிந்து விட்டதாகச் சொன்னார்கள். நான் நினைக்கின்றேன் சமீபத்தில் அதிகம் விற்பனையானது இந்தக் கையில் பூசக்கூடிய கிருமிகொல்லியாகத்தான் இருக்கும். வாங்கிய பொருளுக்கான பணத்தைக் கொடுத்தபோது, பணம்பெறுபவர் கையுறையும் அணிந்து முகத்திற்கு பாதுகாப்பாக முகமூடியும் அணிந்திருந்தார். பல இனத்தவரும் வந்து போகிறார்கள், அவர்கள் தருகின்ற பணத்தில்கூட வைரஸ் இருக்கலாம், எதற்கும் பாதுகாப்பிற்காக இதை அணிந்தேன் என்றார். அவர் அடுத்துச் சொன்னதுதான் என்னை விழிப்படைய வைத்தது, ஒருவர் தனக்கு முன்னாலேயே நாக்கிலே எச்சியைத் தொட்டு பணத்தை எண்ணிக் கொடுத்தாவும், பணத்தைத் தான் தொடவேண்டி இருந்ததாகவும், அற்காகத்தான் இந்தக் கையுறை என்றார். அவர் சொன்னது உண்மைதான், எங்கிருந்து எப்படி இந்த வைரஸ் பரவும் என்று சொல்ல முடியாத நிலையில், உயிர் கொல்லி வைரஸ் வேகமாகப் பரவுகின்றது. குறிப்பாக வயோதிபர்களை இலகுவாகத் தாக்குகின்றது.

ஒரு காலகட்டத்தில் பெரும் உயிர் அழிவை ஏற்படுத்திய நோய்களாக பிளேக் நோய், வாந்திபேதி, மஞ்சள் காய்ச்சல் ஆகியன இருந்தன. உலக யுத்தங்களின் போது இந்த நோய்களால் ( டியஉவநசயை ) பெருமளவு மக்களும், போர்வீரர்களும் பாதிக்கப்பட்டனர். தற்போது இதற்கான மருந்து வகைகள் இருக்கின்றன. எலிகளில் இருந்து வரும் தௌ;ளுப்பூச்சிகளே பிளேக்நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாகும். நேரத்தோடு நோயைக் கண்டறிந்தால் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொண்டு குணப்படுத்த முடியும். இந்தியாவின் மும்பையில் பணியாற்றிய மருத்துவர் வால்டெமர் ஆஃப்கின் என்பவரே பிளேக் நோயுக்கான தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்தவராவார். நோய் பரவுவதற்கு நுளம்புகளும் ஒரு காரணமாக இருக்கின்றன. காற்றிலும், நீரிலும்கூட கிருமிகள் பரவக்கூடும். அதனால்தான் ‘சுத்தம் சுகம் தரும்’ என்றும், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று எமது முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.

எமக்குத் தெரியக்கூடியதாக 2004 ஆம் ஆண்டு சாஸ் (ளுயசள);, 2008 ஆம் ஆண்டு ஏவியன்இ (யுஎயைn), 2010 ஆம் ஆண்டு சுவைன்(ளுறiநெ), 2012 ஆம் ஆண்டு மேஸ்(ஆநசள), 2014 ஆம் ஆண்டு ஈபோலா (நுடிழடய), 2018 ஸிஹா (ணுமைய), 2018 ஈபோலா (நுடிழடய), 2020 கோறோனா (ஊழசழயெ) போன்ற தொற்று நோய்கள் மனித சமூகத்திற்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. புதிது புதிதாக வைரஸ்சுகள் தோன்றுவதால் அவற்றுக்கான தடுப்பு மருந்துகள் உடனடியாகக் கண்டு பிடிக்க முடிவதில்லை.

இத்தகைய நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பதன் மூலம் எம்மை மட்டுமல்ல, ஏனையவர்களையும் நாம் காப்பாற்ற முடியும். முக்கியமாகப் பொதுமக்கள் கூடும் இடங்கள், பொதுவான போக்குவரத்து வண்டிகள் குறிப்பாக பேருந்து, தொடர்வண்டி, விமானம், குறூஸ் கப்பல் பயணம் போன்றவற்றைச் சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுங்கள். சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களைத் தள்ளிப் போடுவதால் தங்களுக்கும், நாட்டிற்கும் நன்மை செய்தவர்களாக இருப்பார்கள். கொறோனா பாதிப்பு இரண்டு நாளில் இருந்து 14 நாட்கள் வரை வெளிக்காட்டக் கூடியது. நோய் தொற்றினாலும் சில நேரங்களில் வெளிப்படுத்த இரண்டு வாரங்களாவது எடுக்கலாம். காற்றிலே 3

மணிநேரமும், உலோகப் பொருட்களில் 4 மணிநேரமும், காட்போட் பெட்டிகளில் 24 மணி நேரமும், பிளாஸ்டிக் பெட்டிகளில் 3 நாட்களுக்கும் இந்pத வைரஸ்சுகள் உயிர் வாழக்கூடியன. காலையில் எழுந்ததும் சுவாசத்தை நன்றாக உள் எடுத்து, சுமார் 10 விநாடிகள் வரை வைத்திருங்கள். அப்போது இருமலோ, அல்லது இறுக்கமாகவே இல்லாமல் சாதாரணமாக வழமைபோல இருந்தால் உங்கள் நுரையீரலில் நார்த்திசு அழற்சி எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். அலட்சிய போக்குத்தான் மனிதனைப் பெரிய ஆபத்தில் மாட்டி விடுகின்றது. வெள்ளம் வந்தபின் அணை கட்டுவதில் பலனில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

2019, டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி சீனா நாட்டில் கூபேய் மாகாணத்தில் வுகான் நகரில் முதன் முதலாக இந்த நோய் கண்டு பிடிக்கப்பட்டது. இப்படி ஒரு வைரஸ் புதிதாக அங்கே உருவாகி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்த மருத்துவரையே இந்த வைரஸ் பலி எடுத்துவிட்டது. தொண்டை வரட்சியாய் இருந்தால் நோய் தொற்றும் வாய்ப்பு அதிகமாகும். எனவே அடிக்கடி சுத்தமான நீரை அருந்த வேண்டும். அவ்வப்போது இளம் சூடுள்ள நீரில் உப்பைக் கலந்து கொப்பளிப்பதால், கல்லீரலுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம். வயிற்றில் சுரக்கும் அமிலம் தண்ணீரோடு உள்செல்லும் வைரஸ்சை அழித்துவிடும். உணவுப் பழக்கத்திலும் தற்காலிகமாகச் சில மாற்றங்களை மேற்கொள்ளலாம். குறிப்பாக உள்ளி, இஞ்சி, மஞ்சள், தேசிக்காய் போன்றவற்றை பாவிக்கலாம். வெளியே சென்று வந்தால் உங்கள் கைகளை கவனமாகக் கழுவிக் கொள்ளுங்கள். இந்தக் கட்டுரை எழுதும் போது, இதுவரை 120,000 நோயாளர்கள் அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறார்கள். 4300 பேர் இதனால் மரணமடைந்திருக்கிறார்கள். சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாடுதான் அதிகளவிலான மரணத்தைச் சந்தித்திருக்கின்றது. மூன்று மாதத்தில் மிக வேகமாக 140 நாடுகளுக்கு இந்த கொறோனா வைரஸ் இதுவரை பரவியிருக்கின்றது.

கனடாவில் மார்ச்மாதம் 12 ஆம் திகதி 150 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 16 ஆம் திகதி 370 ஆக இது உயர்ந்ததில் இருந்து இதன் வேகம் புரிகிறது. இதில் ஒன்ராறியோவில் 172, பிரிட்டிஸ் கொலம்பியா 73, அல்பேட்h 56, கியூபொக் 41, ஏனைய மாகாணங்களிலும் சிறிய அளவில் பரவியிருக்கின்றது. இந்தக் கட்டுரை பத்திரிகையில் வரும்போது இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டல், கட்டுப்படுத்த முடியாமல் போய்விடலாம். பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும். எனவே ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பும் இதைத் தடுப்பதற்குத் தேவையாகும். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி லண்டன் சென்று வந்ததால் கொரோனா பாதிப்பு இருந்ததால், தடுத்து தனிமைப் படுத்தப்பட்டார். நம்மவரில் சிலர் இதை அலட்சியப்படுத்துகிறார்கள். அவர்களின் அலட்சியத்தால் மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை அவர்கள் சிந்திப்தில்லை. இதேபோல நாங்கள் கவனமாக இருந்தால், பயம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆரம்பத்திலேயே விழிப்புணர்வோடு நடவடிக்கைகளை மேற்கொள்வது எமக்கும், மனித சமூகத்திற்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும் என்பதால் விழிப்புணர்வோடு செயற்படுவோம். குறைந்த பட்டசம் அடிக்கடி உங்கள் கையைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள்.

உசாத்துணை:

Stanford hospital board internal message:

The new Coronavirus may not show sign of infection for many days. How can one know if he/she is infected? By the time they have fever and/or cough and go to the hospital, the lung is usually 50% Fibrosis and it's too late. Taiwan experts provide a simple self-check that we can do every morning. Take a deep breath and hold your breath for more than 10 seconds. If you complete it successfully without coughing, without discomfort, stiffness or tightness, etc., it proves there is no Fibrosis in the lungs, basically indicates no infection.

In critical time, please self-check every morning in an environment with clean air. Serious excellent advice by Japanese doctors treating COVID-19 cases: Everyone should ensure your mouth & throat are moist, never dry. Take a few sips of water every 15 minutes at least. Why? Even if the virus gets into your mouth, drinking water or other liquids will wash them down through your throat and into the stomach. Once there, your stomach acid will kill all the virus. If you don't drink enough water more regularly, the virus can enter your windpipe and into the lungs. That's very dangerous.

Please send and share this with family and friends. Take care everyone and may the world recover from this Coronavirus soon.

IMPORTANT ANNOUNCEMENT – CORONAVIRUS

1. If you have a runny nose and sputum, you have a common cold

2. Coronavirus pneumonia is a dry cough with no runny nose.

3. This new virus is not heat-resistant and will be killed by a temperature of just 26/27 degrees. It hates the Sun.

4. If someone sneezes with it, it takes about 10 feet before it drops to the ground and is no longer airborne.

5. If it drops on a metal surface it will live for at least 12 hours – so if you come into contact with any metal surface – wash your hands as soon as you can with a bacterial soap.

6. On fabric it can survive for 6-12 hours. normal laundry detergent will kill it.

7. Drinking warm water is effective for all viruses. Try not to drink liquids with ice.

8. Wash your hands frequently as the virus can only live on your hands for 5-10 minutes, but – a lot can happen during that time – you can rub your eyes, pick your nose unwittingly and so on.

9. You should also gargle as a prevention. A simple solution of salt in warm water will suffice.

10. Can't emphasis enough – drink plenty of water!

THE SYMPTOMS 1. It will first infect the throat, so you'll have a sore throat lasting 3/4 days 2. The virus then blends into a nasal fluid that enters the trachea and then the lungs, causing pneumonia. This takes about 5/6 days further. 3. With the pneumonia comes high fever and difficulty in breathing. 4. The nasal congestion is not like the normal kind You feel like you're drowning. It's imperative you then seek immediate attention.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 24, 2021