Kuru-photo-2021

1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள்

நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை

2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள்

சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை

3வது பரிசு: 15,000 இலங்கை ரூபாய்கள்

முருகேஷ். மு. வந்தவாசி, தமிழ்நாடு

4வது பரிசு: 10,000 இலங்கை ரூபாய்கள்

ஸ்ரீகந்தநேஷன்.ஆ.பெ. யாழ்ப்பாணம், இலங்கை

5வது பரிசு: 7,500 இலங்கை ரூபாய்கள்

சுப்ரபாரதிமணியன்.ப. திருப்பூர், தமிழ்நாடு

15 பாராட்டுப் பரிசுகள் தலா 5,000 இலங்கை ரூபாய்கள்.

பெயர்கள் அகர வரிசையில் இருக்கின்றன.

அனுராதா பாக்கியராஜா. வெள்ளவத்தை, இலங்கை.

முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா. பெரியகுளம், தேனி, தமிழ்நாடு.

மு. இப்றாகீம் பாத்திமா றுஸ்தா. காத்தான்குடி, இலங்கை.

கிறகறி பஞ்சரத்தினம் வேதநாயகம். வார்விக்ஷயர், றக்பி, ஐக்கியஇராச்சியம்.

மணி. க. மேற்கு மாம்பலம், சென்னை- 600 033. தமிழ்நாடு.

மேகநாதன். பெ. போடி நாயக்கனூர், தேனி மாவட்டம், தமிழ்நாடு.

முஹம்மது ஹனிபா முஹம்மது ஷர்பான். ஓட்டமாவடி, இலங்கை.

நளாயினி நந்தகுமார்.  மெல்பேர்ன், அவுஸ்ரேலியா.

பூமணி. க. செஞ்சி தாலுகா, விழுப்புரம், தமிழ்நாடு.

பூர்ணிமா. ச. நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.

பர்வின் பானு. எஸ். தேனாம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு.

துடுப்பதி ரகுநாதன் டி. எஸ். கோயமுத்தூர்-36 தமிழ்நாடு.

சக்திதாசன் கனகசபாபதி. 4390 VIPPEROD. டென்மார்க்.

சரளா முருகையன். பென்சினர் காலனி, திருச்சி-23 தமிழ்நாடு.

தங்கராசா செல்வகுமார். குப்பிழான் தெற்கு, யாழ்ப்பாணம், இலங்கை.

இளையதலைமுறை மாணவ, மாணவிகளுக்கான

10 பாராட்டுப் பரிசுகள் தலா 5000 இலங்கை ரூபாய்கள்.

பெயர்கள் அகரவரிசையில் இருக்கின்றன.

அருச்சனா சித்திவினாயகம். ரொறன்ரோ கனடா.

தேவரூபா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு.

கிருத்திக்கா. எஸ். முனிச்சாலை, மதுரை தமிழ்நாடு.

மோனிஷா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு.

நிறோஜினி வரதராஜன். வரணி வடக்கு, இலங்கை.

றுவிங்கா ஸ்ரீ. மிசசாகா, கனடா.

சக்தயா சாம்பவி முகுந்தன். ஸ்காபரோ, கனடா.

ஸ்ரீசங்கர் அருநோதன். மட்டக்களப்பு, இலங்கை.

திவாணி கந்தசாமி. தவசிக்குளம். வவுனியா, இலங்கை.

றிசா ஜேசுதாசன்  ரொறன்ரோ, கனடா.

சர்வதேச ரீதியாகக் கனடாவில் இருந்து நடந்த முதலாவது திறனாய்வுப் போட்டி – 2021 இல் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றி. 14 நாடுகளில் இருந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள் வந்திருந்தன. இறுதிச் சுற்றில் சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன், எழுத்தாளர் கே. எஸ். சுதாகர், கவிஞர் சரேஸ் அகணி ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினார்கள். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு பெற்றவர்களுக்குக் காலக்கிரமத்தில் பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்பபடும். இந்தப் போட்டியை நடத்த அனுமதி தந்த எழுத்தாளர் குரு அரவிந்தன் அண்ணாவிற்கும், நடுவர்களுக்கும், மிகவும் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கும் வாசகர்வட்டத்தின் சார்பில்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த வருடம் இதே போன்ற ஒரு போட்டியில் மீண்டும் சந்திப்போம். தயாராக இருங்கள், நன்றி. 

மேலதிக விபரங்களுக்கு:

https://kurunovelstory.blogspot.com/

https://canadiantamilsliterature.blogspot.com/

http://tamilaram.blogspot.com/

சுலோச்சனா அருண்

செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.

Kuru Aravinthan Fanclub

—————————————————————————————————————————————————————

(குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தியசிறுகதை,நாவல் திறனாய்வுப் போட்டி– 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த பலதிறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி முதலாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)

எழுத்தாளர் குரு அரவிந்தன் சிறுகதைகள் ஓர் அலசல்
த. நரேஸ் நியூட்டன்,கழுபோவிலை, இலங்கை.
அறிமுகம்
தமிழ் இலக்கியபடைப்புலகில் உலகின் பலபாகங்களிலும் புகழ்பெற்றுவிளங்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்குமுதலில் எனதுவாழ்த்துக்களையும் அவருடையதமிழ் இலக்கியயப்பணிமேலும் பல்லாண்டுகள் சிறக்கஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தாளர் குரு அரவிந்தன் பற்றிதெரியாததமிழ் இலக்கியஆர்வலர்கள் இருக்கமுடியாது. அதற்குகாரணம் தனதுபல்வேறுவிதமான இலக்கியப் படைப்புக்களால் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோடுஅங்கீகாரமும் பெற்றவர். இவர் யாழ் காங்கேசன்துறைமாவிட்டபுரம் தந்த இலக்கியச் செம்மல். நடேஸ்வராக் கல்லூரி,மகாஜனாக்கல்லூரி,மற்றும் பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின்பழையமாணவர். ஈழத்துமற்றும் வெளிநாட்டுஊடகங்கள் பலவற்றில் இவரதுபடைப்புக்கள் களம்பெற்றுள்ளதோடுபல்வேறுபரிசுகளையும் விருதுகளையும் பெற்றுசாதனைபடைத்துள்ளவர். நான் படித்த இவரதுசிறுகதைத் தொகுப்புக்களில் சிலசிறுகதைகளைதேர்வுசெய்துஅவைசார்பானஎனதுஆய்வைசமர்ப்பிப்பதில் நானும் சிறிதளவுபெருமைப்பட்டுக்கொள்கிறேன்.
சிறுகதைகள்,நாவல்கள்,ஒலிப்புத்தகங்கள்,மேடைநாடகங்கள் மற்றும் சிறுவர் இலக்கியங்கள் போன்றபல்வேறுபடைப்புக்களைதனக்கேயுரியபாணியில் வாசகர் மனமறிந்துவழங்குவதில் இவருக்குநிகர் இவர்தான் என்று கூறலாம். இவர் பல்வேறுவகையானபடைப்புக்களைவழங்குவதில் முனைப்புடன் செயற்பட்டுவந்தாலும் இக்கட்டுரை இவரதுசிறுகதைளின் நான்கைமட்டுமேஆய்வுசெய்வதாகஅமைகிறது. ஒருசிறுகதையைஎப்படிஎழுதுவதுஎன்பதற்கானஒழுங்குமுறைகள் பல இலக்கியகர்த்தாக்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் வாசித்துஅவற்றைபின்பற்றிஎழுதுகின்றஆற்றலைசிறப்பாகவளர்த்துவைத்திருக்கின்றார் என்பது இவரதுஒவ்வொருசிறுகதையிலும் இளையோடிப்போயிருக்கும் கதையெழுதும் முறைமையிலிருந்துதெரிந்துகொள்ளலாம்.
இந்ததிறனாய்வுக்காக“இதுதான் பாசம் என்பதா”,“ரோசக்காரி”,“அவளுக்குஒருகடிதம்”மற்றும் “தங்கையின் அழகியசிநேகிதி”என்றநான்குசிறுகதைகளை இவரதுவெவ்வேறுசிறுகதைத் தொகுப்புகளிலிருந்துதெரிவுசெய்திருக்கிறேன்.
பொதுவாக குரு அரவிந்தன் அவர்கள் இந்தநான்குசிறுகதைகளிலும் ஒருசிறுகதைக்குரித்தானபொதுவானஅம்சங்களைசரியாகபின்பற்றிசிறுகதைஎழுதுவதில் தனக்கு இருக்கும் ஆற்றலைஒவ்வொருகதையிலும் வெளிப்படுத்தியிருக்கின்றார். புலம் பெயர்ந்துகனடாநாட்டில் வாழ்ந்துவரும் இவர் அங்குவாழ்ந்தாலும் தனதுகதைகளில் தான் பிறந்ததாய் மண்ணின் வாசனையைமிகத்தத்ரூபமாகஉள்ளேஅசைபோடவைத்திருப்பதைஒவ்வொருகதைகளிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.
கதைகளின் சுருக்கம்
“இதுதான் பாசம் என்பதா”என்றசிறுகதைஒருகுடும்பச் சூழலை மையப்படுத்திஎழுதப்பட்டசிறுகதையாகஎழுதப்பட்டிருக்கிறது. இக்கதையில் மகளுடையவருமானத்தில் தங்கிவாழும் குடும்பத்தின் நிலைமைமுன்வைக்கப்படுகிறது. பெண் கதாபாத்திரமாகியமகளுக்குதிருமணம் பேசப்படுகிறது. அவளதுதந்தை அவள் திருமணமாகிசென்றால் குடும்பச்சுமையைஎப்படிசமாளிக்கப்போகிறோமோஎன்றஆதங்கத்தால் அவளுடையதிருமணத்தில் அவளுக்குதெரியாமலேதடையாக இருக்கிறார். உண்மையில் நடந்ததுஎன்னஎன்பதைகாலம் கடந்துஏதேச்சையானஒரு சூழலில் அறிந்துகொண்டமகள் தானேநிலைமையைஉணர்ந்துதிருமணத்தைதானாகவேமுன்வந்துதள்ளிவைத்துதனதுபாசத்தைவெளிக்காட்டும் நிலைமை. இதனைபுரிந்துகொண்டதந்தையின் பாசத் தவிப்புஎன்றுஅவர்களுக்குள் இருந்தபாசத் தவிப்பையும் பாசப்போராட்டத்தையும் மிகவும் சாதுரியமாககதையிலேவெளிக்கொணர்ந்திருக்கிறார் கதாசிரியர்.
அடுத்தகதையாகிய“ரோசக்காரி”என்றசிறுகதையில் பொறியியல் படித்தபட்டதாரிப்பெண் திருமணம் செய்துகணவனுடன் வாழ்ந்துவருகிறாள். பட்டம் பெற்ற இவள் வீட்டுவேலைகளைபார்த்துக்கொண்டுவீட்டிலேயே இருக்கிறார். கணவன் எவ்வளவுதடவைஅவளதுபடிப்புக்குபொருத்தமானவேலையைதேடிசெய்யும்படி கூறியும் அவள் அதனைப்பற்றிபெரிதாகஅலட்டிக்கொள்ளவில்லை. இறுதியில் அவளுடையதந்தையின் ஆலோசனையின்படிகணவன் அவளதுரோசத்தை தூண்டிவிடும்படியானசெயற்பாட்டில் ஈடுபட்டார். இதுவெற்றியளித்ததா? அவள் வேலைக்குச்சென்றாளா இல்லையாஎன்பதை கூறுவதேகதை.
மூன்றாவதுகதை“அவளுக்குஒருகடிதம்”என்பது. இந்தக் கதையில் கல்லூhயில் கல்விகற்கும் மாணவன் அவனுடன் கற்கும் சக மாணவியைநீண்டநாட்களாகவேதனதுகாதலுக்குரியவளாகமனதில் இருத்திவைத்திருக்கிறான். கல்லூரி நாட்கள் நிறைவைஅண்மித்துக்கொண்டிருந்தது. எப்படியாவதுதனதுகாதலைஅவளுக்குதெரியப்படுத்தவேண்டும் என் முடிவுசெய்கிறான். அவனதுநண்பர்களும் உந்துதலளிக்கவேஅடுத்துவந்தகாதலர் தினத்தைஅவளுக்குதெரியப்படுத்தும் நாளாக குறிவைக்கிறான். அந்தநாள் வரவேநேரடியாக கூற தயக்கப்பட்டுஒருவாழ்த்துஅட்டையில் தனதுகாதலைதெரிவித்துஅவளிடம் கொடுத்துவிடுகிறான். அவளும் அவன் அந்தஅட்டையில் குறிப்பிட்டிருந்தபடிஅவனைப்பார்த்துபுன்முறுவல்செய்துஅதனைஏற்றுகொண்டதுபோல் காண்பித்தாலும் மறுநாள் அதிபரிடமிருந்துஅவனுக்குவிசாரணைக்கானஅழைப்புவருகிறது. விசாரிக்கவும்படுகிறான். ஏன் இப்படிசெய்தாய் எனஅவளிடம் கேட்டுவிடகோபத்துடன் அங்கிருந்துவெளியேறிஅவளைத் தேடிசெல்கிறான். அவளைசந்தித்துகேட்டானா? அவனதுகாதல் வெற்றிபெற்றதா? என்பதை கூறுவதேமிகுதிக்கதை. 
இறுதியாக இந்தஆய்விற்குஉட்படுத்தப்பட்டநான்காவதுகதை“தங்கையின் அழகியசிநேகிதி”என்பது. இந்தக்கதையில் அண்ணன் தங்கை இருவருக்கிடையிலானஅவ்வப்போதுஏற்படகின்றசிறியசிறியசெல்லச் சண்டைகள். தங்கையின் சிநேகிதிஒருவர் அவர்களுடையவீட்டிற்குவந்தபோதுஏதேச்சையாகஅவளைகாண்கிறான் அண்ணன். அந்தக் கணமேஅவளதுஅழகில் மயங்கிதன்னகத்தேகாதல் வயப்படுகிறான். சிநேகிதிக்குவேறுஒருவருடன் திருமணஏற்பாடாகியிருக்கிறதுஆனால் அவளுக்குஅந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. அப்படியாயின் அந்தசிநேகிதியின் மனதில் இருந்ததுஎன்ன? தங்கைக்கும் அண்ணனுக்கும் இடையில் நடந்தசண்டைகள் எவ்வளவுஆழமாகதங்கையின் மனதில் பதிந்திருந்தால் அவள் அந்தஉண்மையைதனக்குள் புதைத்துவைத்திருப்பாள். அண்ணனின் காதல் நிறைவேறியதா இல்லையாஎன்பதைமிகவும் சாதாரணமாககாரணகாரியங்களுடன் இந்தக் கதையில் முன்வைக்கிறார் கதாசிரியர்.
கதைத் தலைப்புக்கள்
இவர் எழுதுகின்றஒவ்வொருகதைகளையும் எடுத்துநோக்கும் போதுசிறுகதைஎழுதுவதுஎப்படிஎன்பதுபற்றிபலஎழுத்தாளர்கள் குறிப்பிடுவதுபோல் கதைத்தலைப்பிலிருந்தேகதையின் உட்கருப்பொருளைஉணரக்கூடியதாகவும் அந்தக் கதைகளைஉடனடியாகபடிக்கவேண்டும் என்றஆர்வத்தை தூண்டுவதாகவும் கதையின் தலைப்புக்கள் மிகச் சிறப்பானதாகவும் பொருத்தமுடையதாகவும் ஒவ்வொருகதைக்கும் தேர்வுசெய்து சூட்டியிருக்கிறார். சிலஎழுத்தாளர்களின் சிறுகதையில் அவர்களதுகதையின் கருப்பொருளுக்கும் கதைத் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லாமல் தலைப்பிடுவார்கள். ஆனால் இவருடையகதைகளில் அப்படிஒருநிலைமையைகாணமுடியவி;ல்லை. கதைத் தலைப்புக்கள் கதையின் இறுதிவரைநினைவில் நிற்கும்படியாகஒவ்வொருகதையின் கருவுடனும் பின்னிப் பிணைந்து இறுதிவரைநகர்கிறது.  
கதைக்கருவும் உள்ளடக்கஅளவும்
வாழ்க்கைபற்றியபோதாமைகளைச் சொல்வதுசிறுகதைஎன்பதுஒருஅறிஞரின் கருத்துஅதேபோலசிறுகதைகள் அநேகமாகவாழ்கையோடுஒன்றித்துப்போகும் பலவிடயங்களைவெளிப்படுத்துபவையாக இருக்கின்றன. சமூகம்,கலை,கலாசரவிழுமியங்கள்,பண்பாடு,நாகரீகம் போன்றவற்றின் உள்ளார்ந்தநிலைமைகள் காலவோட்டத்தில் மாறுபடுகின்றபோதுபழமைமற்றும் புதுமை என்கின்றமாறுதல்கள் தோற்றம் பெறுகிறது. இந்தமாறுதல்களினால் ஏற்படக்கூடியபாதிப்புகள் மனிதவாழ்வியல் முறைமைகளிலும் பாரியமாறுதல்களைஏற்படுத்தவிளைகின்றன. இந்த இடத்திலேதான் சிறுகதைகள் முன்நிலைபெறுகின்றன. சிறுகதைகள் மூலமாகஅந்தந்தகால சூழ்நிலைகளை மையப்படுத்திமாறுதல்களினால் ஏற்படும் பல்வேறுவிதமானஉள்ளக்குமுறல்களைவெளிக்கொணர்வதற்கு இவை களம் அமைத்துக்கொடுக்கின்றன. இந்தவகையில் எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன் அவர்களுடையசிறுகதைகள் ஒவ்வொன்றும் சமூகவாழ்வியல் சார்ந்தகுடும்பம் மற்றும் சமூகம் சார் பல்வேறுவிடயங்களைவெளிக்கொணரும் வகையில் கதைக்கருவைக்கொண்டவையாகதோன்றுகின்றன.
இந்தகட்டுரையில் குறிப்பிடப்படுகின்றசிறுகதைகள் ஒவ்வொன்றிலும் அவற்றைநன்குஉணரக்கூடியதாக இருக்கிறது. இவருடைய இந்தநான்குகதைகள் மட்டுமன்றிமற்றயகதைகள்கூட அவ்வாறேதான் எழுதப்பட்டிருக்கின்றன.
இதுதான் பாசம் என்பதாஎன்ற இந்தஆய்வின் முதற் கதையில் மிகவும் வசதிகுன்றியகுடும்பத்தில் மகளின் வருமானத்தைநம்பியேவாழ்க்கைநடத்திக்கொண்டிருக்கும் தந்தைமகள் திருமணமானால் எதிர்காலவாழ்வாதாரநிலைஎன்னவாகும் என்றதவிப்பில் இருக்கஅந்த இடத்தில் மகளுடையபாசம் எத்தகையதுஎன்பதைவெளிக்கொணர்கிறார். இவ்வாறான சூழலில் வாழுகின்றஒவ்வொருகுடும்பத்திற்கும் ஒருமுன்மாதிரிகையானஅறைகூவலாகதனதுகதையெழுதும் பாங்கின் மூலம் முன்வைத்திருக்கிறார் அரவிந்தன். அதுமட்டுமன்றிஒருகுடும்பத்தினுடைய சுமையை முழுமையாகஒருபெண்ணாலும் கூட சுமக்கமுடியும் என்பதையும் அதற்கு இந்தக் கதையில் வரும் மூத்தமகள் பாத்திரத்தைசிறந்தஉதாரணமாககையாண்டிருக்கிறார்.
இரண்டாவதுகதையாகியரோசக்காரிஎன்றகதையில் பெண்மைஎன்பதுஅமைதியாக இருப்பதுமட்டுமல்லஅவளுக்குள்ளும் ரோசம் கோபம் போன்றவை இருக்கிறது. ஒருகுறிப்பிட்டதருணத்தில் தனதுரோசம் கோபம் போன்றவற்றையும் வெளிக்கொணர்வாள் என்பதையும் அவளாலும் சாதனைகளைநிலைநாட்டமுடியும் என்பதையும் கதாசிரியர் வெளிப்படுத்துகிறார். அத்தோடுஒருகணவன் தனதுமனைவியைசமூகத்தில் ஒருஅந்தஸ்துடைய சாதனைகளைநிலைநிறுத்தும் பெண்ணாகவெளிக்கொணரஎத்தகையஒத்துழைப்பைவழங்கமுடியும் என்பதையும் இந்தகதையில் சிறப்பாகவெளிக்கொணர்ந்திருக்கிறார்.
அவளுக்குஒருகடிதம்கதையிலே இன்றையசமூகத்தில் சாதாரணமாகபாடசாலைகளில் நிகழும் காதல் முன்மொழிவைஎடுத்துமுன்வைத்துஅதன்மூலம் காதலிப்பதுதப்பில்லைஆனால் காலகாலத்துக்கும் இருவரும் ஒன்றுசேர்ந்துவாழ்வதற்கானசரியானமற்றும் உறுதியானஅடித்தளத்தை இடுவதில் அக்கறைகாட்டிஅதனைமுன்னுரிமைப்படுத்துவதுஎத்துணைமுக்கியத்துவம் வாய்ந்ததுஎன்பதைநாசூக்காகஎடுத்துக்காட்டியிருக்கிறார். 
அடுத்தகதையாகியதங்கையின் அழகியசிநேகிதி மூலமாகசமூகத்தில் பல குடும்பங்களில் உண்மையாகவேநிகழ்கின்றசகோதரர்களுக்கிடையிலானசிறியசிறயமுரண்பாடுகளைபுடம்போட்டுக் காட்டியிருக்கிறார். அதனைக்காட்டுவதன்மூலமாக இவ்வாறானசிறியசண்டைகள் மற்றும் முரண்பாடுகள் அடிமனதில் ஆழமாகபதிந்துஎதிர்காலத்தில் ஏற்படக்கூடியபாரியபாதிப்பையோ இழப்புகளையோ கூட பொருட்படுத்தாமல் பழிவாங்கும் சூழலை உருவாக்கிவிடுகிறதுஎன்பதைஅழகாகசுட்டிக்காட்டியிருக்கிறார். நெருக்கமானஉறவுகளுக்கிடையிலும் வெவ்வேறுகராணங்களின் நிமித்தம் பழிவாங்கும் மனப்பாங்குஏற்படாமலில்லைஎன்பதையும் இக்கதை மூலமாகஒருஎச்சரிக்கையாகவெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்தஒவ்வொருகதைகளும் அவர் கூறவந்தகுறிப்பிட்டகருப்பொருளைதாண்டிஅவசியமற்றவிடயங்களுக்குள் நுளைந்துவிடாதுமிககவனமாககதைகளைநகர்த்திச்சென்றிருக்கின்றகதையின்போக்குமெய்சப்படவேண்டியதே. கதைக் கருவில் எந்தவொரு இடத்திலும் தொய்வோசலனமோகாணப்படவில்லைஎன்பது இன்னும் கதையின் போக்கிற்குவலுச் சேர்கிறது. ஒவ்வொருகதையிலும் கதையினுடையவேகம் பொருத்தமானசீரில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. படிப்படியாககதைதனதுஉச்சக்கட்டத்தைநோக்கிசெல்லும்படியாகஅடுத்துவரக்கூடியகாட்சிகளைதொடர்ச்சியானஒருகோர்வையாகஒழுங்குபடுத்தியிருக்கிறார். இவற்றோடுஒவ்வொருகதையிலும் மிகப்பொருத்தமான இடத்திலேஎதிர்பாராதஒருஆச்சரியத்தை (ருவிஸ்ற்) கொடுத்துவாசகர் மனதில் அக்கதையைபடிக்கஆரம்பித்தபோது இருந்தகதைப்போக்குகருப்பொருள் பற்றியஅவர்களின் கருத்துமற்றும் எதிர்பார்ப்பில் திடீர் மாற்றத்தைகொடுத்துஆச்சரியத்தைஏற்படுத்திகதையைதொடர்ந்துபடிக்கும் ஆர்வத்தைமேலும் தூண்டிவிடுகிறார்.
கதையினுடையஉள்ளடக்கம் அதாவதுநீட்சியைஅநேகமாகஒவ்வொருகதாசிரியர்களும் தங்கள் கதைக்கேற்பதாமேவகுத்துக்கொள்வதுண்டு. ஆனால் பொதுவாகஒருசிறுகதையானது 5 முதல் 7 (யு 4) பக்கங்களுக்குள் அடக்கப்படவேண்டும் என்பதுசிறுகதைபற்றியஅறிவார்ந்தோரின் கருத்து. அதுஉண்மையும் கூட. அதற்குமேல் எழுதினால் வாசகர் பொறுமையிழந்துவிடுவர். அத்தோடுஅதுகுறுநாவல் என்றகட்டத்திற்குநுளைந்துவிடும். போட்டிகள் என்றுவரும்போதுபோட்டிக்கானஅழைப்புவிடுப்பவர்களால் பக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டு இத்தனைபக்கங்களுக்குள் சிறுகதைகள் உள்ளடக்கப்படவேண்டும் எனஅறிவுறுத்தல் வழங்கப்படும். இங்குஎழுத்தாளர் குரு அரவிந்தனுடையசிறுகதைகள் ஒவ்வொன்றையும் எடுத்துநோக்கினால் அவர் தனக்குத்தானேவரையறைஒன்றைவைத்திருப்பதுபுலனாகிறது. ஒவ்வொருசிறுகதையும் 5 பக்கங்களைதாண்டாமல் அதற்குள் அடக்கிவிடுகிறார். தனதுகதையில் தான் கூறவந்தகதையின் கருவைமிகவும் நுணுக்கமாக இந்தபக்கங்களுக்குள் அடங்கிவிடுமாறுசெய்திருக்கின்றார்.    
கதைஎழுதும்போக்கு
கதையின் ஆரம்பம் கதையின் கருப்பகுதிஅதன் முடிவுப் பகுதிபோன்றவற்றைஅவற்றுக்கானஎல்லைகளைவகுத்துஅந்தஎல்லைகளுக்;குள் மட்டுப்படுத்திகுறிப்பிட்டபகுதிக்குள் கதையின் ஒவ்வொருபகுதிகளையும் கச்சிதமாகஅநேகமாகஅனைத்துக்கதைகளிலும் சிறைப்படுத்திவிட்டிருக்கிறார். அவசியமற்றஅலட்டல்களைஅறவேதனதுகதைகளுக்குள் நுளையவிடாதுபார்த்திருக்கிறார். இது இவரதுசிறந்தசிறுகதைஎழுத்தாளர் என்றஅனுபவத்தைபுடம்போட்டுக் காட்டுகிறது. 
இவரதுகதையெழுதும் போக்கில் ஒருகேள்விஎன்னைஉறுத்திக்கொண்டிருக்கிறதுஆகையால் அதைதவறவிட்டுவிடாது இங்குகுறிப்பிடுகிறேன். ஆதாவது இவருடைய இந்தநான்குகதைகளிலும் இலக்கணமுறையிலானஎழுத்துமுறைமையையே கூடுதலாககையாண்டிருக்கிறார். பாத்திரங்களுக்கிடையிலானசம்பாசணைகளும்கூட இலக்கணமுறைவழக்கிலேயேகையாளப்பட்டிருக்கிறது. அதுஏன் என்பதுதான் எனதுகேள்வியும் புரியாதவிடயமாகவும் இருக்கிறது. சிலவேளைபுலம்பெயர்ந்துவேறுநாட்டில் வாழ்ந்துவருவதால் எல்லாநாடுகளிலும் இருக்கக்கூடிய இவரதுஅனைத்துவாசகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கோடுவெவ்வேறுவகைiயானபேச்சுவழக்குகளைஉள்ளேநுளைத்துவிடாது இலக்கணமுறைமையைகையாண்டிருப்பாரோ? இது இவ்வாறு இருப்பினும் இவரைஅறியாமலேகதாபாத்திரங்களிடையிலானசம்பாசணைகளில் சில இடங்களில் பேச்சுவழக்கு இயல்பாகவேநுளைந்திருப்பதைஅவதானிக்கமுடிகிறது.
கதாபாத்திரங்களும் காட்சியமைப்புகளும்
இந்தஆய்விற்குட்பட்டஎழுத்தாளர் குரு அரவிந்தனின் நான்குகதைகளையும் எடுத்துநோக்கும்போதுஅவர் தனதுஒவ்வொருகதைக்கும் பொருத்தமானஅதேவேளைகதைக்கருவின் தேவைக்கேற்றவகையில் கதாபாத்திரங்களைமட்டுப்படுத்தியிருக்கிறார். கதைக்கருவைமிகைப்படுத்தும்படியானஅல்லதுகவர்ச்சியூட்டும்படியானதேவைக்குப் புறம்பானஎந்தவொருபாத்திரத்தையும் கதைக்குள் நுளையவிடாதுகச்சிதமாகபாத்திரஅமைப்புக்களைகையாண்டிருக்கிறார். முதலாவதுகதையில் தந்தை,மகள் மற்றும் மகளுக்காகபார்த்தமாப்பிள்ளைஎன்ற மூன்றுபாத்திரங்களையும் இரண்டாவதுகதையாகியரோசக்காரிஎனும் சிறுகதையில் கணவன்,ரோசக்காரமனைவி,அவளுடையதந்தைமற்றும் தாய் எனகதைக்குஅவசியமானஅந்தநான்குபாத்திரங்களையும் முன்நிலைப்படுத்திகதையைசுவாரசியமாகநகர்த்திமுடித்திருக்கிறார்.
அவளுக்குஒருகடிதம் என்றமற்றயசிறுகதையில் கல்லூரியில் கற்கும் மாணவன்,அவன் தனதுகாதலைமுன் வைக்கும் பெண் மற்றும் கல்லூரியின் அதிபர் என்ற மூன்றுபாத்திரங்களையும் முன்வைத்துநான்காவதுபாத்திரமாகியஅவன் காதலிக்கும் பெண்ணின் தந்தைஎன்றபாத்திரத்தைபுதிதாகஒருவரைநுளைக்காதுகல்லூரி அதிபரையேஒருதிருப்புமுனைபாத்திரமாககாண்பித்துஅதேநேரம் நண்பர்களையும் காதலியின் தாயையும் பொதுவாகபயன்படுத்திகுறித்துரைக்கும்படியாகயாருக்கும் நடிபாகத்தைதராமல் விட்டுகதையைமுழுமைப்படுத்தியிருக்கிறார். இறுதியாகவரக்கூடியதங்கையின் அழகியசிநேகிதிஎன்றகதையிலும் பிரதானபாத்திரமாகியகதையின் நாயகன்,அவனதுதங்கை,அவளுடையசிநேகிதிமற்றும் அவனுடையதாய் என்று இந்தநான்குபாத்திரங்களைமட்டும் காட்சிகளுக்குள் நுளைத்துகதையைநகர்த்தியிருக்கிறார். 
மேற் கூறியவாறுஒவ்வொருகதையிலும் குறிப்பிட்ட 3 அல்லது 4 கதாபாத்திரங்களுக்குமேற்படாதவாறுபாத்திரங்களைமட்டுப்படுத்திசொல்லவந்தகதைக்கருவைஅழகாகவும் தெளிவாகவும் காண்பித்துதனதுகதைகளைமுடித்திருப்பதானதுவாசகர்களும் பாத்திரங்கள் சார்பானஅனாவசியமானகுளப்பங்களுக்குஉட்படாதுகதையைஆர்வமாகபடிக்க தூண்டிவிட்டிருக்கின்றதுஎன்றுசொன்னால் அதுமிகையாகாது.
அதேவேளைஅவர் உருவகித்தபாத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் அவசியமற்றசம்பாசணைகளைதராமல் கதைக்குபொருத்தமானஅதேவேளைஅவசியமானசம்பாசணைகளைமட்டும் கனகச்சிதமாகவழங்கிஅவசியமற்றஅலட்டல்களைஒவ்வொருகதையிலும் தவிர்த்திருப்பதுமற்றொருசிறப்பம்சமாககாணப்படுகிறது. 
முடிவுரை
எழுத்தாளர் குரு அரவிந்தனுடையகதைகள் பலவற்றில் நான் படித்தவற்றுள் சிலதொகுப்புகளிலிருந்துநான்குகதைகளை இந்ததிறனாய்வின்பொருட்டுதேர்வுசெய்திருந்தேன். அவைசார்பானஒருசிறுகதையைஎழுதும்போதுபொதுவாககவனத்தில்கொள்ளப்படவேண்டியபலவிடயங்களைமுன்நிலைப்படுத்தி இந்தஆய்வைசமர்பித்திருக்கிறேன். இந்தகதைகளுக்;குள் நான்; மேலேகுறிப்பிட்டிருக்கக்கூடியநேரானபலவிடயங்களைஅவதானிக்கக்கூடியதாக இருந்தபோதிலும் எதிர்மறையானவியங்களைகாண்பதுசற்றுசவாலானவிடயமாகவேகாணப்பட்டது. இருப்பினும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இவருடையசிறுகதைகள் அமைந்திருக்கும் எனநான் கருதியஒருசிலவிடயங்களையும் குறிப்பிட்டிருக்கிறேன். இவற்றுக்கும் மேலாகசிலசுவாரஸ்யம் தரக்கூடியவிடயங்களையும் இடையிடையேஒவ்வொருகதைகளிலும் சேர்த்திருந்தால் வாசகர்களுடையவாசிக்கும் ஆர்வத்தைமேலும் தூண்டியிருக்குமோஎன்பதைமேலதிகமானஒருகருத்தாகநான் இங்குகுறிப்பிடுகிறேன். பொதுவாகநான் படித்த ஏனைய கதைகளையும் வைத்துப் பார்க்கின்றபோது இவரதுகதைகள் யாவும் சிறப்பாகவேஅமைந்திருக்கின்றன. வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக இருக்கும்,இவர் மேலும் பலபடைப்;புக்களைதமிழ் இலக்கியஉலகிற்குதரவேண்டும் என்றவாஞ்சையுடனானபதிவையும் முன்வைத்து இவ்வாய்வைநிறைவுசெய்கிறேன். 
உசாத்துணை:
‘இதூன் பாசம் என்பதா?’–மணிமேகலைப்பிரசுரம்.சென்னை.
‘தங்கையின் அழகியசினேகிதி’– இனியநந்தவனம் பதிப்பகம்.திருச்சி.
‘அவளுக்குஒருகடிதம்’ – ஆனந்தவிகடன் காதலர்தினமலர் (14-2-99).
‘ரோஷக்காரி’ – https://kurunovelstory.blogspot.com/

——————————————————————————————————————————–

(குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தியசிறுகதை,நாவல் திறனாய்வுப் போட்டி– 2021 இல் 14 நாடுகளில் இருந்துவந்தபலதிறனாய்வுக் கட்டுரைகளில் இருந்துதெரிவாகி இரண்டாவதுபரிசுபெற்றதிறனாய்வுக்கட்டுரை.)

பகுப்புமுறைத் திறனாய்வு அடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள் – ஒரு விமர்சன நோக்கு

சிவனேஸ்ரஞ்சிதா, கெக்கிராவ, இலங்கை.

அறிமுகம் –

ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கும் கணிசமான பங்களிப்பு உள்ளது. மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் இலக்கியப் பரப்பை குறிப்பாக புனைகதைத் துறையை தனது பேனாவால் அலங்கரித்தவர். சிறுகதை, நாவல், ஒலிப்புத்தகங்கள், திரைப்படம், மேடை நாடகம், சிறுவர் இலக்கியம் என பன்முக ஆளுமையுடன் தனக்கென ஒரு அடையாளத்தை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் நிலைநிறுத்தி வைத்துள்ளார். இவருடைய புனைகதை இலக்கியங்களை தமிழ்த்திறனாய்வுத் துறைக்குள் கொண்டுவந்து பேசவேண்டிய தேவை தமிழ்த்திறனாய்வாளர்களுக்கு உள்ளது. அவ்வகையில் குரு அரவிந்தன் அவர்களினால் படைப்புவெளிக்குள் அழைத்துவரப்பட்ட 'இதுதான் பாசம் என்பதா', 'சிந்து மனவெளி', 'ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்', 'தாயாய் தாதியாய்'ஆகிய நான்கு சிறுகதைகளும் பகுப்புமுறைத் திறனாய்வின் அடிப்படையில் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகள் அல்லது கூறுகளை யாதாயினும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம் கொண்டு பகுத்துக்காண்பது பகுப்புமுறைத்திறனாய்வு எனப்படும். இத்தகையத் திறனாய்வு 'அலசல் முறைத் திறனாய்வு' என அன்றைய திறனாய்வாளர்களால் அழைக்கப்பட்டது. இத்திறனாய்வு முறையினூடாக குரு அரவிந்தன் அவர்களின் தெரிவுசெய்யப்பட்ட சிறுகதைகளில் வரும் கதைக்கரு, தலைப்பு, பாத்திரப்படைப்பு, பின்னோக்கு, கடித உத்தி, தொடக்கமும் முடிவும் ஆகிய கூறுகளின் வழி ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.

கதைக்கரு –

குரு அரவிந்தனின் சிறுகதைகளில் அவர் கையாண்டுள்ள கரு சமூக யதார்த்தம் கொண்டதாக படைக்கப்பட்டுள்ளது. சான்றாக 'தாயாய் தாதியாய்' என்ற சிறுகதையிலும் ‘என் செல்லக்குட்டி கண்ணணுக்கு’ என்னும் சிறுகதையிலும் தற்போது உலகை உலுக்கி வரும் கொரோனாவின் பாதிப்புகள் சமூகத்தில் வாழும் பாத்திரங்களினூடாக யதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ளன. கொரோனாவினால் பொதுமக்கள் மட்டுமல்ல வைத்தியத்துறையில் பணிபுரியும் வைத்தியர்களும், தாதியரும் தமது பொதுவாழ்விற்காக குடும்ப வாழ்வை அர்ப்பணித்து கடமையாற்றுவதை இவ் இரு சிறுகதைகளும் தெளிவுறுத்தியுள்ளன. 'சிந்து மனவெளி' என்னும் சிறுகதை ஆண் – பெண் உறவுநிலையில் எழும் சந்தேகக்கோடுகளை மனப்போராட்டமாகவே சித்திரிக்கின்றது. 'இதுதான் பாசம் என்பதா', 'ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்' – சற்று வித்தியாசமான சிறுகதைகள். 'இதுதான் பாசம் என்பதா' என்னும் சிறுகதை திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் மகள் திருமம்செய்து சென்றுவிட்டால் குடும்ப பொருளாதாரத்தை யார் சுமப்பது என்ற பயத்தில் திருட்டுத்தனமாக திருமணத்தை நிறுத்திவிடும் தந்தையொருவரையும் பின்னர் அதனை அறிந்து திருமணமே செய்யாமல் வாழத்துடிக்கும் மகளைப்பற்றியும் தீட்டப்பட்டுள்ளது. 'ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்' என்னும் சிறுகதை ஒரு பெண் விருப்பமின்றி தனது கணவனுடன் வாழ்ந்து பின் முரண்பாடு உச்சக்கட்டத்தை எட்டி தனது மகள் அவருக்கு பிறக்கவில்லை என கூறி வைத்திய பரிசோதனை வரைக்கும் செல்கின்றாள். இதையறிந்த மகள் தனது அப்பாவிற்கு எழுதும் உணர்வுபூர்வமான கடிதத்தில் மனமுறுகிய அந்த தந்தை வைத்திய பரிசோதனை 'ரிப்போர்ட்'டை பார்க்காமல் தனது மகளை ஏற்றுக்கொள்கிறார். அந்த ரிப்போர்ட்டில் என்ன இருந்தது என்பது யாருக்கும் தெரியாது என்பது போலவே இறுதியில் கதை முடிகிறது. குரு அரவிந்தன் இவ்வாறு கையாண்டுள்ள சிறுகதையின் கரு வித்தியாசமானதாகவும் எவரும் சிந்தித்து பார்க்காத ஒன்றாகவும் வெளிப்படுகின்றது.

தலைப்பு –

எந்தவொரு படைப்பும் தாம் கொண்டிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமாகவே அமையும். சில தலைப்புகள் குறியீடாகவும் சில தலைப்புகள் பாத்திரங்களின் பெயரையும் கொண்டு அமைக்கப்படும். ஆனால் ஒரு சிறுகதையின் தலைப்பு தாம் எடுத்துக்கொண்ட கதையின் கருவிற்கு மிக பொருத்தமாகவே அமையவேண்டும். குரு அரவிந்தனின் சிறுகதைகளில் குறியீடான தலைப்புக்கள் எவற்றையும் காணமுடியவில்லை. இருப்பினும் கதையின் கருவிற்கேற்ற பொருத்தமானத் தலைப்புக்கள் அவரது சிறுகதைகளில் இழையோடியுள்ளன. உதாரணமாக 'தாயாய் தாதியாய்' என்ற சிறுகதையை நோக்கும்போது ஒரு தாதி தனது இரண்டு பெண்பிள்ளைகளையும் வீட்டில் விட்டுவிட்டு தாதியர் சேவைக்கு பயணமாகின்றாள். கொரோனா சூழ்நிலையில் பணியாற்றும் அந்த தாதி தனிமைப்படுத்தல் காலகட்டத்தில் தனது சிறிய மகள் வயதிற்கு வந்து தனியே தவிக்கும்போது வைத்தியசாலையிலிருந்து வரமுடியாமல் தவிக்கிறாள். தனது மூத்த மகளிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என தொலைபேசியில் அறிவுறுத்துகின்றாள். அயலவர் இந்த பிள்ளைகளுக்கு உதவிபுரிய முடியாத சூழலை தனிமைப்படுத்தல் சட்டங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. ஒரு தாயாய் உரிய வேளையில் கடமைகளைப் பூர்த்திசெய்யமுடியாமல் அதே தருணம் தாதியாய் சேவையாற்ற வேண்டிய கட்டாயத்திலும் வாழும் ஒரு பெண்ணின் வாழ்வை கருவாக்கிய இச்சிறுகதையின் தலைப்பு 'தாயாய் தாதியாய்' என்பது மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.

பாத்திரப்படைப்பு –

ஒரு சிறுகதைக்கு அதன் மொழி உயிரோட்டம் தருவது எவ்வளவு உண்மையோ அதுபோல கதையில் வரும் பாத்திரங்கள் அந்த மொழிநடையை காவிச்சென்று மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகின்றன. சிறுகதைகள் பொதுவாக தனிமனித உணர்வுகளை அல்லது ஒரு பிரச்சினையை கணநேரத்தில் சொல்லி முடிக்கவேண்டும். பாத்திரங்களும் வளர்க்கப்படாது வார்க்கப்பட வேண்டும். குரு அரவிந்தனின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்களும் அப்படியானவையே வார்க்கப்பட்டள்ளன. உதாரணமாக 'இதுதான் பாசம் என்பதா' என்னும் சிறுகதையில் வரும் சீதா, ஸ்ரீராம், அப்பா ஆகிய பாத்திரங்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன. அளவான பாத்திரங்களையும் இச்சிறுகதையில் குரு அரவிந்தன் கொண்டுவந்துள்ளார். ஏனைய சிறுகதைகளும் அவ்வாறே அளவான பாத்திரங்களுடன் முடிந்துள்ளன. இச்சிறுகதையில் உலா வரும் சீதா என்னும் பாத்திரம் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளாள். தனது குடும்பத்திற்காக தனது உணர்ச்சிகளை, ஆசைகளைத் துறந்து திருமணம் செய்யாது போராடத் துணிகின்றாள். இதனை '…என்னோட உணர்ச்சிகளை எப்படியாவது பல்கலைக் கடித்துக் கொண்டு என்னால் பொறுத்துக்க முடியும். ஆனால் இந்தக் குடும்பத்தால் வயிற்றுப்பசியை பொறுக்க முடியுமா? இவங்க என்னோடு உழைப்பை நம்பி இருக்கும் வரை நான் கல்யாணமே செய்துக்கப்போறதில்லை பயப்படாதீங்க அப்பா' என்று சீதா கூறுவது இப்பாத்திரத்தின் மீது ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்துகின்றது. பொதுவாக ஒரு சிறுகதையில் இரண்டொரு பாத்திரங்கள் நடமாடினாலும் மனதை உடைத்துச் செல்வது ஒரு பாத்திரமாகவே இருக்கும். அவ்வாறே 'இதுதான் பாசம் என்பதா' என்ற சிறுகதையில் பல பாத்திரங்கள் நகர்ந்தாலும் சீதா என்னும் பெண் பாத்திரமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னோக்கு –

பின்னோக்கு உத்தியைப் பாத்திரங்கள் நினைத்துப் பார்ப்பது போலவும் ஆசிரியரே கதைகூறுவது போலவும் அமைக்கலாம். நனவோடை உத்தியும் இதில் அடங்கும். கடந்த காலத்தைக்காட்டவும் பின்னோக்கு உத்தி பயன்படுகின்றது. இவ்வாறான பின்னோக்கு உத்திமுறையை 'இதுதான் பாசம் என்பதா' என்னும் சிறுகதையில் வெளிப்படுகின்றது. ரயிலில் சந்தித்துக்கொள்ளும் சீதா – ஸ்ரீராம் ஆகிய இரு பாத்திரங்களும் தாம் பெண்பார்க்கும் படலத்தில் சந்தித்துக்கொண்டமை பின்னோக்குநிலையில் ஆசிரியரால் காட்டப்பட்டுள்ளன. 'அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் ஒரு கணம் அதிர்ந்துபோனாள். அவனைநேருக்கு நேர் சந்திப்போம் என்று அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கண்களில் சட்டென ஈரம் படர்ந்தது. தலை லேசாக வலிப்பது போலிருந்தது…' என இச்சிறுகதையின் ஆரம்பம் முன்னர் இவர்களின் வாழ்வில் கசப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளதை பின்னோக்கி கூறவிழைகின்றது. சிந்து மனவெளியும் இத்தகைய பின்னோக்கு உத்தியை ஒரு ஆண் பாத்திரத்தின் மூலம் கூறுகின்றது. ' மனம் குழம்பிப்போய் சஞ்சலப்பட்டது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கக் கூடாதோ என்று எண்ணத்தோன்றியது. சஞ்சலம் என்பது எப்போதும் எவருக்கும் வரலாம்… கண்முன்னால் நடப்பதைப் பார்த்துக்கொண்டு எப்பொழுதும் இளிச்சவாயாக இருந்துவிடமுடியுமா?…' என ஒரு திரைப்படத்தை பார்த்து தனது மனப்போராட்டத்தைவெளிப்படுத்தும் ஒரு ஆணின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பின்னோக்கி நகர்வதை கதையின் ஆரம்பத்தில் குரு அரவிந்தன் காட்டியுள்ளார். ஏனைய சிறுகதைகள் அடுத்தடுத்த சம்பவங்களை தொடர்ச்சியாக கூறுகின்றன.

கடித உத்தி – 

சிறுகதைகளில் கதையைக் கூறிச்செல்லும்போது இடையில் கடிதங்களை கொண்டு வந்தும் கதையை கூறிச் செல்வதை காணலாம். கரு அரவிந்தன் தனதுசிறுகதைகளில் கடிதங்களை கொண்டு வந்துள்ளமையையும் காணமுடிகின்றது. சிறப்பாக ஒரு அப்பா ஒருமகள் ஒரு கடிதம் என்னும் சிறுகதை தலைப்பே கடித உத்திக்கு சான்றுகாட்டுகின்றது. தந்தை – மகள் உறவின் ஆழத்தை அற்புதமாக படம்பிடிக்கும் இச்சிறுகதையின் ஆரம்பத்தில் ஒரு மகள் அவளது தந்தைக்கு 'அன்புள்ள அப்பா

அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு அப்பா என்று என்னால் அழைக்கமுடியுமோ தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'டி.என்.ஏ.ரிப்போர்ட்' உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப்பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்…' என கடிதம் ஆரம்பமாவதோடு பின்னோக்கு நிலையைக் கடித உத்தியைக் கொண்டு வந்து நனவோடையாக கதையை நகர்த்தியுள்ளார் குரு அரவிந்தன். 'இதுதான் பாசம் என்பதா' சிறுகதையில் கடிதம் பற்றிய பதிவுகள் விரிவாக அலசப்படவில்லை. எனினும் ஒரு கடிதத்தினால் சீதா என்னும் பெண்ணின் திருமணம் தடைபடுவதை இச்சிறுகதையாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே குரு அரவிந்தன் தமது சிறுகதைகளில் கடித உத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளமையை நன்கு அறியமுடிகின்றது.

தொடக்கமும் முடிவும் –

சிறுகதைகள் இயற்கை வர்ணணைகளுடனும், உரையாடலுடனும், ஆசிரியரின் கூற்றாகவும் அமைவதுண்டு. அவ்வாறு அமையும் சிறுகதையின் தொடக்கம் வாசகரை வாசிக்கத்தூண்டுவதாக அமைதல் சிறந்தது. குரு அரவிந்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளிலும் கதையின் தொடக்கம் வாசிக்கத்தூண்டுவதாகவே அமைந்துள்ளது. அடுத்து சிறுகதையின் முடிவு சிந்திக்கவைப்பதாகவும் முடிவை அவர்களிடமே ஒப்படைதாகவும் படைக்கப்பட வேண்டும். முடிவு முடிந்துவிடாமல் மீண்டும் தொடர்வதாகவும் திருப்புமுனையுடன் கூடியதாகவும் படைப்பது சாலச்சிறந்தது. 'இதுதான் பாசம் என்பதா' என்னும் சிறுகதை தொடக்கம் முதல் முடிவு வரை உணர்வோட்டத்துடன் ஓடி முடிகின்றது. ஒரு பெண் தனது தந்தையாலே வஞ்சிக்கப்பட்டு திருமணவாழ்வை இழக்கும் துன்பத்தை பதிவுசெய்யும் இச்சிறுகதை இறுதியில் ' 'அப்பா நீங்களா அப்பா இப்படிச் செய்தீங்க? என்னுடைய பிரிவால், என்னையே நம்பி இருக்கும் இந்தக் குடும்பம் நடுத்தெருவிலே நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று பயந்துட்டீங்களாப்பா? என்னோட உணர்ச்சிகளை எப்படியாவது பல்கலைக் கடித்துக் கொண்டு என்னால் பொறுத்துக்க முடியும். ஆனால் இந்தக் குடும்பத்தால் வயிற்றுப்பசியை பொறுக்க முடியுமா? இவங்க என்னோடு உழைப்பை நம்பி இருக்கும் வரை நான் கல்யாணமே செய்துக்கப்போறதில்லை பயப்படாதீங்க அப்பா.' கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு கடிதத்தை கிழித்துப் போட்டாள். மனதில் இருந்த சுமை குறைந்தது போல இருந்தது.' என இச்சிறுகதையில் வரும் சீதா என்னும் பாத்திரத்தின் உரையாடலுடன் கதையின் முடிவு முடிந்தாலும் இனி அவள் திருமணம் செய்வாளா? அவளது வாழ்க்கையின் அர்த்தம் என்ன? அவளது தந்தை ஏன் இப்படிச் செய்தார்? மகளின் வாழ்விற்கு என்ன பதில் கூறபோகிறார் என முடியும் சிறுகதையின் முடிவு பல முடிவுகளை எடுக்கவைக்கின்றது. இவ்வாறு குரு அரவிந்தனின் சிறுகதைகளில் முடிவுகள் சிறப்பாக சிந்திக்கத்தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

முடிவுரை –

எனவே குரு அரவிந்தனின் சிறுகதைகளை பகுப்புமுறைத் திறனாய்வின் வழி ஆராயும்போது அவர் கையாண்டுள்ள சிறுகதையின் கூறுகள் ஒரு சிறுகதைக்கு வடிவம் தந்து உயிருடன் நடமாட வைப்பதை அறியமுடிகின்றது. பொருத்தமான தலைப்பு, தலைப்பிற்கேற்ற கரு, கதையின் ஆரம்பம், வாசகரை சிந்திக்கத்தூண்டும் முடிவு, பின்னோக்கு உத்தி என அனைத்துஅம்சங்களும் சிறப்பாக பொருந்தி நிற்கின்றன. பொதுவாக குரு அரவிந்தனின் சிறுகதைகளில் உணர்ச்சிகளோடு, பாசத்தோடு, சந்தேகத்தோடு போராடும் பாத்திர வார்ப்புகளே எல்லை விரிந்துகிடக்கின்றன. சற்று போராட்டத்துடன் புரட்சிகரமாக சிந்தித்து செயலாற்றும் பாத்திரங்களையும் கதைக்கருவையும் அமைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சூழல் தொடர்பான வருணணைகளையும் சற்று கையாண்டிருந்தால் புலம்பெயர்வாழ் மக்களின் பண்பாட்டையும் தெளிவாக அறியும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். எது எவ்வாறு இருப்பினும் கலையம்சத்துடன் இவரது சிறுகதைகள் சிறப்பாக வடிவம் பெற்று தமிழ் உலகில் நடைபயில்வதையும் தனக்கான ஒரு இடத்தைக்குரு அரவிந்தன் நிலைநாட்டியுள்ளமையையும் மறுதளிக்கமுடியாது.

உசாத்துணை:

1.https://kurunovelstory.blogspot.com

2.நடராசன், தி.சு., திறனாய்வுக்கலை, நிவ் சென்ஜரி புக்ஹவுஸ், சென்னை, 2003.

3.புயல் ஸ்ரீகந்தநேசன், போர்க்காலச் சிறுகதைகள், தாய்மொழிக் கலை மன்றம் வெளியீடு, வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம்.

—————————————————————————————————————————————————–

இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவான தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் நடக்கும் உலகளாவிய நாவல், சிறுகதை திறனாய்வுப் போட்டி.

பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 13 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 110,000 ரூபாய்கள். பரிசுகள் இலங்கை நாணயத்தில் வழங்கப்படும்.

முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000.

இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 20,000.

மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 15,000.

10 பாராட்டுப் பரிசுகள் (ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 5000.)

பாராட்டுப் பரிசுகள் (10) மொத்தத்தொகை ரூ. 50,000.

குரு அரவிந்தன் அவர்களின் படைப்புக்களுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 4 பக்கங்களுக்குள் அல்லது 1500 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் ( Unicode and word) அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவ, மாணவிகளாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாக வெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்கு உரியது.

மின்னஞ்சல் வழியாக ஆங்கிலத்தில் உங்களின் முழுப்பெயர், தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் விவரங்களோடு அனுப்பவேண்டும்.

உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 30.04.2021

போட்டி முடிவுகள் 2021 மே மாதம் 24 ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்படும்.

மின்னஞ்சல்:       kurufanclub@gmail.com – (kurufanclub@gmail.com) 

இணையம்:  https://kurunovelstory.blogspot.com/ (kurunovelstory.blogspot.com) 
                         https://canadiantamilsliterature.blogspot.com/

Kuru-Contest