manuvetpillai1aஅன்னையின் மடியில் 18-08-1928
ஆண்டவன் அடியில் 23-01-2021

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வதிவிடமாகவும், தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமான மதிப்புக்குரிய கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலய முன்னாள் உடற்பயிற்சி மற்றும் ஆங்கில ஆசிரியர் திரு.மனுவேற்பிள்ளை  அவர்கள் 23-01–2021 சனிக்கிழமை அன்று  யாழ். இளவாலையில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற டெய்ஷி மனுவேற்பிள்ளை (இளைப்பாறிய ஆசிரியை நாரந்தனை கணேசா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவராவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள்  25-01–2021 திங்கட்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் யாழ். இளவாலை புனித அன்னாள் தேவாலயத்தில் இடம்பெற்று நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், பழைய மாணவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..

மதிப்புக்குரிய திரு.மனுவேற்பிள்ளை அவர்கள் கனடா வந்திருந்தபோது…

கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலய முன்னாள் உடற்பயிற்சி மற்றும் ஆங்கில ஆசிரியர் மதிப்புக்குரிய திரு.மனுவேற்பிள்ளை அவர்கள் கனடா வந்திருந்தபோது அவரைக் கௌரவிக்குமுகமாக கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலய முன்னாள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பழையமாணவர்கள் அவரது பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடிய நிகழ்வின் சில பதிவுகள்- 2006 

manuel-4

manuel-1a

manuel-2a

manuel-3

manuel-8

manuel-6manuel-7

manuel-9

manuel-1

manuel-10

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: February 1, 2021