Hospital canteen1aஇன்று 02-04-2021 வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை வைத்தியசாலை உணவுக்கூட (Canteen) திறப்புவிழா ஸ்ரீவைரவப்பெருமானின் பூசையுடனும், ஆசியுடனும் ஆரம்பமானது. எல்லோரும் பசியாறும் வசதிகளைக் கொண்ட உணவுக்கூடம் வடக்கு Road ஊர்காவற்றுறை பண்ணை வீதி வைத்தியசாலை ஸ்ரீவைரவர் சந்நிதியின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள், வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளர்கள் என தனித்தனியாக அமர்ந்து உணவு உட்கொள்ளும் வகையில் சுகாதார முறைப்படி உணவுக்கூடம் பிரித்து (separated) அமைக்கப்பட்டுள்ளது.

இது சாத்தியமாக பணவசதியும், பொருளுதவியும் வழங்கியவர்கள் அனலைதீவையும், புளியங்கூடலையும் சேர்ந்த சிவசம்பு பார்வதி தம்பதிகளின் பிள்ளைகளும் அவர்கள் குடும்பமுமாகும்.

இந்த நற்பணியை தாமதமின்றி முன்னின்று செயற்படுத்திய "உதயதாரகை" சமூகத்தலைவி மதிப்புக்குரிய சோதிநாயகி குருசாமி அவர்களுக்கும் "கரம்பொன் ரெம்பிள்ஸ்" சார்பில் நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Kayts Hospital Canteen2Kayts Hospital Canteen1Kayts Hospital Canteen4Kayts Hospital Canteen6Kayts Hospital Canteen5Kayts Hospital Canteen1bKayts Hospital Canteen8Kayts Hospital Canteen10Kayts Hospital Canteen11Kayts Hospital Canteen7Kayts Hospital Canteen12Kayts Hospital Canteen9Kayts Hospital Canteen12a

வகைப்படுத்தப்பட்ட பகுதி: நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 5, 2021