Canada best countryஅமெரிக்க நிறுவனங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு சிறந்த நாடுகளின் பாட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து இருந்தது தற்போது அதனை பின்னுக்குத்தள்ளி கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. கனடா கொரோனாவை எதிர்கொண்டு கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்கி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதனிடையே சுவிட்சர்லாந்து தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தையும், ஜப்பான் இரண்டாவது இடத்தையும், ஜெர்மனி 3-வது இடத்தையும் பெற்றுள்ளன.  இதனை தொடர்ந்து சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. கனடா முதலிடத்தை பிடித்ததற்கு காரணம் சமூகநீதி, வாழ்க்கைத்தரம், பெண்களின் பாதுகாப்பு ஆகியவை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.