bala.அன்னையின் மடியில் 10-01-1939
ஆண்டவன் அடியில் 23-04-2021

கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் நகரில் வாழ்ந்து வந்தவருமான கந்தையா சிவபாலன் ("பாலா பிறதர்ஸ்" ஊர்காவற்றுறை) அவர்கள் 23-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது ஆருயிர் அண்ணா பூமித்தாயை விட்டுப் பிரிந்த அறிவிப்பு!

எமது குடும்பத்தின் மூத்த அண்ணன்(தலைவன்) கந்தையா சிவபாலன் ஏப்பிரல் மாதம் 23ம் திகதி 2021 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார். "பாலா பிறதர்ஸ்" (ஊர்காவற்றுறை), இவரது பெயருக்குப் பின்னால், அவரது உழைப்பினால் ஒட்டி, பிரசித்தி பெற்று நின்று இதுவரை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியது. இவர் பிரான்ஸ் நகரில் மாரடைப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்துள்ளார். இதை எமது குடும்பத்தின் சார்பாகவும், மறைந்த என் அண்ணாவின் சகோதரங்கள், சகோதரங்களின் பிள்ளைகள் மற்றும் அவரது உறவினர்கள் சார்பாகவும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் கரம்பன் வாழ் மக்கள் அனைவருக்கும் இத்தால் அறியத்தருகின்றேன்.

அன்புத் தம்பி
ரதன் (416) 347 3806)

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 27, 2021