thanraj2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவரான சேர்ந்த தனராஜ் சுந்தர்பவன் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியிலும் தனராஜ் சுந்தர்பவன் பதக்கம் வென்று சாதித்திருந்தார்.

யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவரான தனராஜ் சுந்தர்பவன், கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A அதிவிசேட சித்தியினை பெற்றிருந்ததுடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருந்தார்.

உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்ற தனராஜ் சுந்தர்பவன், இணை பாடவிதான செயற்பாடுகளிலும் திறமையை வௌப்படுத்தியவராவார்.

அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்ற ஈழத்தமிழ் மகன் தனராஜ் சுந்தர்பவன்  மனமார்ந்த வாழ்த்துகள்!…

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: May 8, 2021