சென்ற மார்ச் மாதம் 8ஆம் திகதி (03-08-08) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் முறையே மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, அணிநடை மரியாதை ஏற்றல், பாடசாலை, ஒலிம்பிக், இல்லக்கொடிகள் ஏற்றல், சத்தியப்பிரமாணம், மற்றும் பிரதம விருந்தினரின் ஆசியுரையுடன் போட்டிகள் ஆரம்பமாகின.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாடசாலையின் பழையமாணவரும் தற்போது யா/கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலய அதிபருமான திரு.சா.தியாகலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.எஸ்.விஜிதரன் (இணைப்பாளர் பாடசாலை பழையமாணவர் ஒன்றியம் – கனடா) அவர்களும், கௌரவ விருந்தினராக ஊர்காவற்றுறை கோட்டக்கல்விப் பணிப்பாளராகிய திரு.எஸ்.பாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

போட்டிகள் விவேகானந்தா இல்லம், மகாதேவா இல்லம் ஆகிய இரு இல்லங்களுக்கிடையே நடைபெற்றது. மெய்வல்லுனர் நிகழ்வுகளில் 100, 200 மீற்றர் ஓட்டம், தாரா நடை, சமநிலை ஓட்டம், தடை ஓட்டம், அஞ்சல் ஓட்டம், உடற்பயிற்சி, விநோத உடை, கயிறு இழுத்தல் ஆகியன இடம் பெற்றன.

பிரதம விருந்தினரின் உரையில் மகாதேவா சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை அவரின் ஆசியினால் இன்றும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறதென்றும், நீதியரசர் சர்வானந்தா, தமிழோசை சோ.சிவபாதசுந்தரம் இன்னும் பல பெரியவர்களை இப்பாடசாலை தான் உருவாக்கியதென்றும் பெருமிதமாகக் கூறினார் பாடசாலை அதிபர் திரு.க.தேவராசா அவர்கள் உரையாற்றும்போது பாடசாலையின் வளர்ச்சிக்கு பல வழிகளில் உதவிபுரியும் கனடா பழைய மாணவர் ஒன்றியத்திற்கு நன்றி கூறினார்.
இந்நிகழ்வின் படங்களை இங்கே காணலாம்.