'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்' என்று பாடினான் பாரதி. அந்தப் பாரதியின் கனவை இன்று நனவாக்கி வருபர்கள் புலம்பெயர்ந்து பூமிப்பந்தின் பரப்பெங்கும் பரவி வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழர்கள் என்றால் அது மிகையல்ல.

ஓலிகளானவை மிகுந்த திருத்தமான உச்சரிப்பு உள்ளடக்கத்துடன் சேர்த்து உருவாக்கப்படும் போது அது மந்திரமாகிறது. அதுவே தாளம், இராகம், ஸ்வரம் என்று விரியும்போது சங்கீதமாகிறது. ஆய கலைகளுள் நுண் கலையான இந்தச் சங்கீதம் உலகப் பொது மொழி போன்றதாகும். இராகம், தாளம், ஸ்வரம் போன்வற்றின் அடிப்படையில் எழுந்த இந்த ஆதிக் கலை கீதம், வாத்தியம், நிருத்தியம் என்ற பிரிவுகளையுடையதென்பர். இதைவிட நாதம், ஜதி, ஸ்தாயி என சங்கீதம் விரிந்து பரந்து செல்கிறது. பிணிகளைக்கூட நீக்க வல்ல இக்கலையைக் கற்பதற்கும், ரசிப்பதற்கும் கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இந்நிகழ்வுபற்றிய கட்டுரையையும் நிழற்படங்களையும் இங்கே காணலாம்

அந்தவகையில் கடந்த 02 செப்டம்பர் 2007 ஸ்காபரோ Chinese Cultural Centre இல் நடைபெற்ற தென்கரம்பனைச் சேர்ந்த குமாரசாமி அருளமணி தம்பதிகளின் பேத்தியும் ரவீந்திரமோகன்  நகுலேஸ்வரி தம்பதிகளின் புதல்வியுமான செல்வி ஜனுஷா  அவர்களின் சங்கீத கனிஷ்ட அரங்கேற்றம் அமந்திருந்தது.ஜனுஷா புகுந்தகத்தில் உதித்த உத்தம சிறுமி. அவள் ஓடியாடித் திரியும் போதெல்லாம் முணு முணுத்துக் கொண்டிருப்பாள். அது வெறும் முணுமுணுப்பல்ல. இயற்கையாக ஊற்றெடுக்கும் சங்கீதம். தனக்குத் தெரிந்த பாரதியார் பாடல் திரைஇசைப் பாடல்களை பாடிய வண்ணம் இருப்பாள். இவளது இந்த ஆர்வத்தினைக் காணும்போது சங்கீத மேதை பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ அவர்கள் கனடா வந்தபோது குறிப்பிட்டிருந்தார், தான் சமைக்கும் போதும், ஓடியாடித்திரியும் போதும் தன்னை அறியாமலே இசைத்த வண்ணம் இருப்பது பழக்கமாகிவிட்டது என்றார். ஆதன் அறுவடைதான் இன்று அவர் தம் இளவயதினிலேயே சங்கீத மாமேதையாகி விட்டார்.

அத்தகைய திறன், ஆர்வம் வித்துவத்தன்மையை ஜனுஷாவிடம் காண்கின்றேன். ஆவர் திறமையை பக்குவமாய், பயிற்றுவித்து கற்பித்து வளர்த்தெடுக்க அவருக்கு தலைசிறந்த, தன்னடக்கம் மிக்க, கலைஆற்றல் கொண்ட ஆசிரியை ஜெயராணி சிவபாலன் குருவாக அமைந்திருப்பது அவருக்கு கிடைத்த ஓர் பாக்கியம். ஜனுஷாவின் திறன்கண்டு அவளை நான்கு வயதினிலேயே மாணவியாக ஏற்றுக்கொண்டு பலவகை திறன்களை நன்கு கற்பித்தும், பயிற்றுவித்தும் வருகிறார். விளயும் பயிரை முளையில் கண்டு கற்பித்து வரும் குருவிற்கு ஜனுஷாவின் எதிர்காலம் இசைத்துறையில் ஒளிமயமாக இருக்கும் என்ற நம்பிக்கை நிறைய உண்டு.

ஜனுஷா அவர்கள் இசைத்துறையில் மட்டுமன்றி விளையாட்டு, நடனம், வயலின் எனப்பல துறைகளில் சிறந்து மிளிர்கிறாள். அவளது ஒட்டு மொத்த கல்வி, ஒழுக்க பண்பாட்டு திறன்கள் கண்டு, அவளை கனடாவில் பிறந்து வளரும் சிறாருக்கு உதாரண செல்வியாக காண்கின்றேன்.

இசையால் அண்ட சராசரங்களை உருவாக்கிய தில்லைக் கூத்தன் நடனமாடி அவற்றை அசைத்து வருவது கண்டு ஜனுஷாவும் இசையோடு நடனமும் கற்று வருகின்றார்.

அவர் பல்கலைகளும் கற்று சிரேஸ்ட அரங்கேற்றம் கண்டு தமிழர் தம் பெருமையை தரணியெங்கும் தலைநிறுத்த வேண்டி வாழ்த்தி வணங்குகின்றேன்.
நன்றி: சாமி அப்பாத்துரை

மேலும் சில நிழற்படங்களைக்காண..

வகைப்படுத்தப்பட்ட பகுதி: நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014