சென்ற மாதம் 20-04-2008 ஞாயிற்றுக்கிழமை மேலைக்கரம்பொன் முருக மூர்த்தி கோவிலில் அங்கு குடிகொண்டிருக்கும் கந்தப் பெருமானுக்கு விசேஷ பூஜைகளுடன் வெகு விமரிசையாக சித்திரைக் கஞ்சி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. முற்கூட்டியே இந்நிகழ்வு நடைபெறும் என்பதை அங்கு வாழும் மக்களுக்கு அறிவித்திருந்தமையால் எல்லோரும் பக்தி பூர்வமாக முருகப்பெருமானை வழிபட்டு மனமகிழ்வோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் எல்லோருக்கும் சுவையாகத் தயாரித்திருந்த சித்திரைக் கஞ்சியும், சர்க்கரைச் சாதமும் வழங்கப்பட்டது. வந்திருந்த அனைவரும் வயிறார உண்ட பின்னர் வீட்டிற்கும் எடுத்துச் செல்லக்கூடியதாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். வருடந்தோறும் தொடர்ந்து இந்நிகழ்வு நடைபெறும் என்பதை அறிந்து மக்கள் மனநிறைவோடு வீடு சென்றனர்.

அன்றைய நிகழ்வின் சில காட்சிகள்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014