அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு ப+ஜையை முடித்துக் கொண்டு கஸ்தூரி சமையறைக்கு வந்தாள் ஏற்கனவே சமையற் காரம்மா தயாரித்து வைத்திருந்த உணவு வகைகளை சாப்பாட்டு மேஜையில் வைத்து ஒழுங்கு படுத்தவும் அவள் கணவர் மூர்த்தி “கோர்ட்டுக்கு” போக ஆயத்தமாகி வரவும் சரியாக இருந்தது எப்போதுமே காலை உணவு வேளை மூர்த்திக்கு மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும். ஆரம்பிக்கவேண்டும். மங்களகரமான முகத்தில் குங்குமத் திலகத்துடன் வசீகரமான புன்னகையுடன் வளையல் குலுங்கும் கரத்தால் மனைவி பரிமாற அதை ரதிச்து புசிக்கும் அந்த காலை உணவு அவரது அந்த நாள் முழுவதுக்குமான புத்துணர்வை அவருக்கு வழங்குவதுண்டு. அன்றும் மனைவியுடன் இனிமையாக அளவளவாடியபடி சாப்பிடத் தொடங்கினார். அந்த நேரத்தில் வாசலில் கேட்ட குரல் கஸ்தூரியை வாசலை நோக்கி விரைய வைத்தது.

“அம்மா! தாயே! தர்மம் போடுங்கம்மா” என்றது  ஓர் இளம் பெண்ணின் குரல். அவசரமாக அங்கு வந்த கஸ்தூரி “இதோ பாரம்மா, ஐயா வேலைக்கு புறப்படும் நேரம் இப்படி வாசலில் குரல் கேட்டால் அவருக்குப் பிடிக்காது. நீ பின்பக்கமாக வந்திரு. ஐயா போனதும் உன்னை கவனிக்கிறேன்” என்று கூறி பின்புறமாக அந்தப் பெண்ணை அனுப்பிய கஸ்தூரிக்கு மனதிற்குள் ஏதோ நெருடல். அந்தப் பெண்ணின் முகமும், அவள் கையிலிருந்த இரண்டு வயது மதிக்கத்தக்க சிறு ஆண் குழந்தையின் தோற்றமும் அவள் மனதை சங்கடப்படுத்தியது. அதை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கணவரின் தேவையை கவனிக்க ஓடினாள். கணவரின் தேவைகளை ப+ர்த்தி செய்து அவரை வேலைக்கு அனுப்பி விட்டு மீண்டும் அங்தப் பெண்ணிடம் சென்றாள். அவள் முகத்தை கூர்ந்து நோக்கிய கஸ்தூரிக்கு நிச்சயமாக இவள் கஷ்டப்பட்ட குடும்பத்தவள் அல்ல சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறாள் என தீர்மானித்துக் கொண்டாள். சற்றே அழுக்கான ஆடைகளுடன் மாசு படிந்த முகத்திலும் பளிச்சிடும் அந்த வசீகரம். அவள் குழந்தை கூட தாயைப் போலவே அழகாக இருந்தான். அவர்களை உள்ளே அழைத்து உண்பதற்கு உணவளித்தாள். உணவாக பின் அந்தப் பெண்ணிடம் தான் புரிந்து கொண்டதை கூறி எதனால் உனக்கு இந்த நிலை என வினவினாள். ஆந்தப் பெண் நர்மதா குமுறி அழுது விட்டாள். அவளது துன்பங்களும் வடிகால் தேடியதோ அல்லது தன் தாயையே கஸ்தூரியிடம் கண்டாளோ தன் கதையை அவளிடம் கொட்டினாள்.

“பெண் பிள்ளைக்கு இப்படி அளவுக்கு மீறி செல்லமும், சுதந்திரமும் கொடுத்து வளர்க்காதீங்க” என்ற மனைவி ஐமுனாவின் வார்தைகளையும் மீறி முழு நம்பிக்கையுடன் “என் மகளடி அவள் தவறியும் தவறு செய்ய மாட்டாள்” என்று  நம்பிக்கையுடன் கூறி நர்மதாவை வளர்த்தார்: அந்த ஊரின் விரல் விட்டு எண்ணக் கூடிய தனவந்தர்களில் ஒருவரான சிவப்பிரகாசம். நர்மாதவும் தந்தையின் நம்பிக்கைக்கு எந்த குறையும் வைக்கவில்லை. மிக நன்றாகப் படித்தாள். மிக நெருங்கிய தோழி வீணா மட்டுமே. இனிதாகப் போய்க் கொண்டிருந்த அவள் வாழ்வு திசை மாறியது சங்கர் அவளுக்கு அறிமுகமான போது அவளது கல்லூரிக்கு எதிரில் அதி நவீனமான முறையில் ஒரு “கான்டீன்” தொடங்கப்பட்டது. அதன் உரிமையாளன் தான் சங்கர். “கான்டீனைப்” போலவே அவனும் நவீன மனிதனாக இருந்தான். அவனது வசீகரமான பேச்சும், மயக்கும் புன்னகையும் அந்த கல்லூரி மாணவியரிடையே ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவனைப் பற்றி பேசாத மாணவியரே இல்லை எனலாம். அப்படிப்பட்ட ஒருவன் பேசப், பழக விரும்பியது நர்மதாவிடம் மட்டுமே.

இதனாலேயே மற்ற மாணவியரை விட தான் ஒருபடி  உயர்ந்து விட்டதாக ஒரு மயக்கம் நர்மதாவிற்கு. முதலில் மறைமுகமாக வைத்திருந்த இந்த மயக்கம் எந்த நேரத்தில் எந்த சந்தர்ப்பத்தில் காதலாக மாறியது என்பது இன்று வரை அவளுக்கே புரியாமல் தான் போய்விட்டது. “கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்”. எதனால் இப்படியானது? என்னில் மிக நம்பிக்கை வைத்திருந்த  என் தந்தையின் முடிவுக்கு காரணமானதால் எனக்கு இந்த நிலைமையா? என்ன அழுது என்ன? இன்றைய நிலை எனக்கு மட்டுமல்ல இன்று என்னைப் போலுள்ள பெண்களுக்கு நல்ல பாடம்” விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கினாள் நர்மதா.

“என் காதல் வீட்டிற்கு எட்டியது. என் தோழி வீணா என் தந்தைக்கு கூறி விட்டாள். அந்தஸ்துக்கு ஒத்துவராது என்று என் காதலுக்கு சம்மதம் தரவில்லை என் பெற்றோர். அம்மாவின்  கண்டிப்பு கூடியது. அப்பா அவசர அவசரமா எனக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார். புpரபல தொழிலதிபர் ஆதித்தினை எனக்கு வரனாக நிட்சயித்தார். அம்மாவிடம் கதறினேன். “அப்பா உன் நல்லத்திற்குத் தான் செய்கிறார். அவரின் சொற்படி  கேட்டு நட உன் வாழ்வு வளமாக இருக்கும்;;’’ என்று கூறி  விட்டா அம்மா. நான் மௌனமாகிவிட்டேன். இவர்களை  எவ்வளவு கேட்டாலும் இது தான் பதில் என்பது புரிந்தது. இவர்களை எதிர்பார்த்து சரிவராது என எண்ணிய நான் எனது திருமணம் நடக்க விருந்த நாளுக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போவதாக கூறி வீணாவுடன்  கோயிலுக்குப் போனேன். என் நல்வாழ்வில் அக்கறை கொண்டவள் வீணா என்பதால் வீணாவை நம்பி என்னை அவளுடன் அனுப்பினார். அதை எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன் நான். பிரகாரத்தை சுற்றி வருகிறேன். நீ ஒரு அர்ச்சனைச் சீட்டு வாங்கி வா என்று வீணாவை அனுப்பிவிட்டு முன்னரே நான் அறிவித்தபடி வந்து கோயிலுக்குப் பின்புறமாக “காரில்” காத்திருந்த என் காதலன் சங்கருடன் போய்விட்டேன். ஆரம்பத்தில் நன்றாகத் தான் என்னைக் கவனித்தார். அவர் நடத்திய ‘கான்டீன்” அவருக்கு சொந்தமில்லை. அவரது உறவினரிடம் குத்தகைக்கு இரண்டு வருடம்  எடுத்தது எனவும் கல்யாணச் செலவிற்காக  அதிகமாகப் பணம் எடுத்தால் நஷ்டம் ஏற்பட்டு தொடர்ந்து நடத்த முடியாமல் திருப்பிக் கொடுத்து விட்டார். என்னையும் வசதியான குடும்பத்து ஒரே பெண் என்பதால் தான் என்னை விரும்பியிருக்கிறார். என்னுடன் என் சொத்துகளுக்கும் அதிபதியாகலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார். இவனும் பிறந்தான்”

‘என்னோடு நான் வழக்கமாக அணிந்திருக்கும் நகைகள் மட்டுமே கொண்டு போயிருந்தேன். அவற்றை விற்று கொஞ்ச காலம் ஓட்டினோம். அவை எத்தனை நாளுக்குப் போதுமானதாக வரும். விரைவிலேயே எல்லாம் தீர்ந்து விட்டது. அவருக்கு உடம்பு வணங்கி வேலை செய்யப் பிடிக்காது. என்னை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினார். கல்யாணத்தினால் வெறுத்த  என் பெற்றோர் பேரப்பிள்ளைக்காகவாவது எங்களைச் சேர்த்துக் கொள்வார்கள் என்பதனாலேயே என்னை ஒரு குழந்தைக்கு தாயாக்கினாராம்.
 அதன் மூலம் சொத்து கைக்கு வரும் என்று நம்பினாராம். தன் வாயாலேயே அவர் இதைச் சொல்ல எனக்கு மிகவும் வெறுத்துப் போய்விட்டது. வீட்டு மாப்பிள்ளையாகி சொத்துக்கும் அதிகாரியாக கனவு கண்டார்  என்னில்  எந்தக் காதலும் இல்லை. எல்லாம் வெறும் பணக்கணக்கு மட்டும் தான். எவ்வளவோ உயர்ந்த வாழ்வை தேடித்தர இருந்த என் பெற்றோரை ஏமாற்றிய பாவம் எப்படிப்பட்ட புதை குழியில் வீழ்ந்து என்னை நானே சிறுமைப் படுத்திக் கொண்டு விட்டேன். ஒரு நாள் என்னையும் அடித்து உன் வீட்டுக்குப் போய் பணம் வாங்கி வா என்று விரட்டினார். எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் அங்கு போவேன். மறுத்துவிட்டேன். என்னையும் குழந்தையையும் வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

“ திருமணமாகி குழந்தையுடன் கணவர் வீட்டில் சந்தோஷமாக வாழும் என் தோழி வீணாவிடம் சென்று எல்லாவற்றையும் கூறி அழுதேன்.  முதலில் முகம் கொடுத்தே பேச மறுத்து விட்டாள். அவளையும் தானே நான் ஏமாற்றிச் சென்றேன். என் பெற்றோரிடம் நன்கு வாங்கியிருப்பாள் போல. கடைசியில் என் நிலைமை அவளை இளக்கியதோ சற்றே நின்று பேசினாள். உன் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்த உன் தந்தையால் உன் செய்கையை ஜீரணிக்க முடியவில்லை. திடீரென எற்பட்ட மாரடைப்பால் இந்த உலகத்தை விட்டே போய்விட்டார். பெற்ற மகளின் செய்கையாலும், உயிருக்குயிரான கணவரின் பிரிவாலும் உன் தாய் படுத்த படுக்கையாகி விட்டா, உன் அசட்டுத் தனத்தால் உன் பாசமிக்க தந்தையை இழந்து விட்டாய்.  இப்போது நீ இருக்கும் நிலையை அறிந்தால் உன் தாயும் உயிர் தரிக்க மாட்டா. உன் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்ற கவலை  பலவீனமாக இருக்கும்  அவவின் மரணத்துக்கும் நீ காரணமாகி விடாதே. இது நீயாகத் தேடிய வாழ்க்கை. மனதுக்குப் பிடித்த வாழ்க்கையில் மகள் சந்தோஷமாக இருக்கிறாள் என்ற நிம்மதியை ஆவது உன்னைப் பெற்றவளுக்கு கொடு. உன் கணவருக்கும் இதை எடுத்துச் சொல்லி அவருடன் சேர்ந்து வாழப்பார்,” என்றாள். அவளே இப்படிச் சொல்லும் போது எப்படி என் தாயின் வாழ்வை குறுகப் பண்ணுவேன். ஏற்கனவே என் தந்தையை உலகை விட்டு அனுப்பிய பாவி நான். மீண்டும் என் கணவனிடமே சென்று நடந்ததை கூறி அழுதேன். ஆனால் அவரோ என் தந்தை இல்லாததும் நன்மைக்கே. உன் அம்மா உன் மேல் அதிகம் ஆத்திரப்பட மாட்டா. அவவிடம் போ என்று வற்புறுத்தினார். நான் கூறிய எதுவும்  அவர் காதுகளில் ஏறவில்லை. கடைசியாக அவர் முகத்தில் முழிக்கக் கூடாது என்ற முடிவுடன் என்ழன அங்கிருந்து விலகச் செய்தது. ஆம் அவர் சொன்னாள் “உன் அம்மாவிடம் போய் அழு. உன்னை அவ சேர்ப்பா. ஆதரவுக்கு உன்னை விட்டால் உன் அப்பாவும் அங்கில்லைப் பார். அப்படியும் அவவும் செத்து கித்து வைத்தாலும் சொத்து உன் கைக்கு வந்திடும். ஏனென்றால் உன்னை விட்டால் அவர்களுக்கு வேற வாரிசில்லைப் பார்” என்றார்;.

கையில் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். படிப்பும் அரைகுறை. கைக் குழந்தையுடன் நிற்பவளை வீட்டு வேலைக்குக் கூட யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஒரு மண் குதிரையை நம்பி என்னில் நம்பிக்கை வைத்திருந்த என் பெற்றோரை, என் தோழியை ஏமாற்றிய பாவம் என்னை நடுத் தெருவுக்கு தள்ளி வயிற்றுப்பாட்டிற்கு கையேந்த வைத்து விட்டது. நான் தனியாக என்றால் என் வாழ்வு எப்போதோ முடிந்திருக்கும். ஆனால் என்னை நம்பி என் வயிற்றில் உதித்த இந்த பச்சை மண்ணையும் ஏமாற்ற என்னால் முடியவில்லை. அம்மா. அதுதான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். ஏப்படியாவது என் அம்மாவை பார்த்து இவனை அவவிடம் ஒப்படைத்து விட்டு நான் என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்கப் போய் விடுவேன்.”

அவ்வளவு நேரமும் அமைதியாக அவளது கதையை கேட்ட  கஸ்தூரி, கதையை முடித்து விட்டு அடக்கமாட்டாமல் கதறித் துடித்த அந்த இளம் பெண்ணை அனுதாபமாக பார்த்துக்  கொண்டிருந்தாள். அவளது கண்ணீர் அவள் சோகங்களை கொஞ்சமாவது கரைக்கட்டும் என்று நினைத்து அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கஸ்தூரியின் மனமோ நர்மதாவை தற்போது ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்” எனத் திரியும் பல இளம் பெண்களின் ஒட்டு மொத்தப் பிரதிநிதியாகத் கண்டது. ஒருவாறு அழுகை சற்று ஓய்ந்ததும் மெல்ல தன் சேலைத் தலைப்பால் முகத்தை அழுதித் துடைத்துக் கொண்டு, “மன்னித்துக் கொள்ளுங்கம்மா உங்கள் காலை வேளையை சுமையாக்கி விட்டேன். என் பாரம் கொஞசம் குறைந்து விட்டது தான். ஆனால் உங்களை கவலைப் படுத்தி விட்டேன்” என்றாள்.

அவளை கையமர்த்திய கஸ்தூரி, நர்மதா இங்கே பார் நீ எவ்வளவோ தவறு விட்டு விட்டாய். இப்போது உன்னைத் திருத்திக் கொள்ள உனக்கு ஆண்டவன் சந்தர்ப்பம் தந்திருக்கிறான். இனியும் தவறு செய்யாமல் உன்னை நீ திருத்திக் கொள்”  என்றாள். எதுவும் புரியாமல் அவளை நோக்கினாள் நர்மதா. அவளைப் பார்த்து புன்னகைத்த கஸ்தூரி, ‘புரியவில்லையா? சொல்கிறேன் கேள். இப்போது உன் சேவை உன் மகiனுக்கு மட்டுமல்ல உன் தாய்க்கும் தேவை. நீ சொல்கிறாய் உன் மகனை உன் அம்மாவிடம் கொடுத்தவிட்டு உன் அப்பாவிடம் சென்று மன்னிப்புக் கேட்க்கப் போவதாக. அவர் மன்னிப்பார் என்று நம்புகிறாயா? இயலாத உன் அன்னைக்கு சுமையாக உன் மகனையும் கொடுத்து விட்டு நீ தற்கொலை செய்து கொண்டால்  உன் தாயினதும், மகனினதும் கதி என்ன என்று நினைத்துப் பார்த்தாயா? அதைவிட உன் தாயிடம் சென்று மன்னிப்புக் கோரி அவரிடம் இருந்து உன் சொத்துக்களையும் நிர்வகித்து உன் தாயையும், மகனையும் கவனித்துக்கொண்டாய் என்றால் உன் தந்தையின் ஆத்மா நிச்சயம் உன்னை மன்னிக்கும். நீ எங்கும் போகாதே இங்கேயே இரு. நானும் என் கணவரும் உன் அம்மாவிடம் பேசி உன்னை அவர்களிடம் சேர்ப்பிக்கிறோம்” என்று உறுதியளித்தாள். கஸ்தூரி; உறுதியளித்து போலவே, மகளையும், பேரனையும் நர்மதாவின் தாய் பார்வதியுடன் சேர்த்து வைத்தாள். பிரிந்து சென்ற மகள் காலில் வந்து வீழ்ந்ததும் அவளது  நிலைமையும் அந்த அன்புத்தாயி;ன் கோபத்தை அகற்றி மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். பேரனை மனம் நிறையத் தூக்கிக் கொஞ்சினாள் வக்கீல் மூர்த்தியின் உதவியுடன் சொத்துக்கள் அனைத்தும் பேரன் காண்டீபனின் பேரில் எழுதப்பட்டது. அதன் நிர்வாகப் பொறுப்பை நர்மதா ஏற்றுக் கொண்டாள்.  கஸ்தூரி, மூர்த்தியின் நல்லாசிகளுடனும், மூர்த்தியின் உதவியுடனும்  தன் பொறுப்பை திறம்பட செய்து வந்தாள். மகனை நல்ல படியாக வளர்த்தாள். அவளது அன்பான கவனிப்பாலும், அதற்கென பயிற்று விக்கப்பட்ட தாதியின் கவனிப்பாலும், தாய் பார்வதியும் உடல் தேறி வந்தா. இடையில் நீலிக்ககண்ணீருடன் வந்த சங்கர் உரிய விதத்தில் அவள் வாழ்விலிருந்து அகற்றப்பட்டான். இனி அவள் வாழ்விற்கு அவளைப் பெற்ற தாயும் அவள் பெற்ற மகனும் மட்டும் போதுமானது.

-திருமதி வாலாம்பிகை சுப்பிரமணியம்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுகதைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 14, 2015