பொங்கல் விழா தனைத் தமிழர் கொண்டாடுவார்
        புதுப் பானை தனைவைத்துப் பொங்கல் பொங்குவார் 
        பச்சரிசிப் பால்ப் பொங்கல் சர்க்கரைப் பொங்கல்
        பதமாகப் பார்த்தெடுத்துப் பொங்கல் பொங்குவார்

        மங்கலமாய் மனைமுன்னே கோலம் போடுவார்
        மணி விளக்கை ஏற்றி வைத்து ஒளியைக் கூட்டுவார் 
        மாவிலையும் தேங்காயும் மஞ்சளும் வைப்பார்
        மக்கள் உள்ளம் குளிர்விக்கும் கும்பம் ஏற்றுவார்

        தட்டத்தில் வெற்றிலையும் பாக்கும் எடுப்பார்
        தரமான கதலியினைப் பக்கத்தில் வைப்பார்
        குங்குமமும் சந்தனமும் நீறும் எடுப்பார்
        கோலாகலமாகப் பொங்கல் பொங்குவார்

        பொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுவர் பூங்கா.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014