அப்பிள் பழம் பழுத்திருக்கு
        ஆய்ந்துண்டால் அதிகருசி
        தோடம்பழம் தொங்குதுபார்
        தோலுரித்தால் சுவை சொட்டும்

        முந்திரிகைக் குலைதாங்கும்
        முத்தான பழமினிப்பே
        மாமரத்தில் நிறைந்த கனி
        வளமான சுவைக் கனிதான்

        பலாப்பழம் பழுத்து நிற்கும்
        பசுஞ் சுளைகள் தேனினிமை
        வாழைமரத் தோட்டத்து வண்ண     
        மஞ்சள் பழம் உண்போம்

        செக்கச் செவே லென்றந்த
        ஸ்ரோபெரியின் தீஞ் சுவைதான் 
        தினைப்பான மாதுளையின் 
        சிவப்பு முத்தின் சுவை கூறும்  (அப்)
 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுவர் பூங்கா.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014