அப்பா செய்த வண்டி
        அழகான வண்டி
        சுதா ஓட்டும் வண்டி
        சொகுசான வண்டி

        தம்பி ஓட்டும் வண்டி
        தள்ளி தள்ளி ஓடும்
        தள்ளத் தள்ளத் தானே
        தாவித் தாவி ஓடிடும்

        பிரியா ஓட்டும் வண்டி
        பெரிய நல்ல வண்டி
        பிறந்த நாளின் பரிசாய்
        பெற்ற நல்ல வண்டி

        அம்மா தந்த வண்டி
        அழகான வண்டி
        அன்புப் பிள்ளை ரூபா
        அமுக்கி ஓட்டும் வண்டி

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுவர் பூங்கா.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014