முல்லை மலர் மொட்டு
        முகிழ்த்து வரும் ரோஜா
        அல்லிமலர் அரும்பு
        அரிய கனகாம்பரம்
        மல்லிகைப் பூவினங்கள்
        மகிழ்வூட்டும் அப்பிள்பூ
        இல்லை எனாதபடி
        இதழ் விரிக்கும் தாமரை

        செம்மை வெண்மை ஆரஞ்சு
        சேர்ந்து மகிழ் செவ்வரத்தை
        பட்டென்று மணம் வீசும்
        பசுமையுள்ள இராத்திரிப்பூ
        ஜெறேனியம் மரிகோல்ட்
        ஜெயம் காட்டும் காணேஷன்
        ஒல்லாந்து நாட்டில் வளர்
        உயர்தர ரியூலிப்ஸ்
      

        எந்த மலர் தானும்
        எங்கே வளர்ந்தாலும்
        எப்பெயர் தான் பெற்றாலும்
        எல்லோருமே தான்
        இயல்பாக நாடுவது
        பூத்த மலர்களையும்
        பொங்கு மலர் அழகினையும்
        அதியழகு பூவழகு

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுவர் பூங்கா.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014