எங்கள் வீட்டு நாய் தான்
        எழுந்து வாலை ஆட்டும்
        என்னைக் கண்டு விட்டால்
        எழுந்து வந்து நக்கும்

        எலும்புத் துண்டு ஒன்றை
        எடுத்து அதற்குப் போட்டால்
        என்னை விட்டு அதனை
        எடுத்துக் கடித்துப் பார்க்கும்

        என்னுடனே அதுதான்
        எங்கெல்லாமோ போகும்
        என்னை விட்டால் அதற்கு
        இனிய நண்பர் இல்லை

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுவர் பூங்கா.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014