அழகான குருவியொன்று
        ஆலமர மீதிருந்து
        ஆனந்தமாகப் பாட்டுப் பாட

        அங்கே ஒரு வேடன் வந்து
        அதனைக் குறிவைத்துப் பார்த்து
        அம்பு தனை ஏவிவிட்டுப் பார்க்க

        அந்தக் குருவி பறந்து பறந்து
        ஆகாயத்தை நோக்கி மேலே
        போனதைத் தான் பார்த்து நின்ற வேடன்

        'போகட்டுமே அந்தக்குருவி
        பொல்லாத சிட்டுக் குருவி"
        என்று சொல்லி வெட்கிச் சென்றான் வேடன்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுவர் பூங்கா.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014