vegi biriyane-4தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை மிளகாய்- 2, புளித்த தயிர் – அரை கப், எலுமிச்சம்பழச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி + பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், புதினா, மல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, கேரட் – 1, உருளைக்கிழங்கு -1, பட்டாணி – ஒரு கைப்பிடி, தேங்காய்ப்பால் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிக்க: பட்டை – ஒரு துண்டு, லவங்கம் – 3, ஏலக்காய் – 4, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் ஊறவையுங்கள். முதலில் சொன்னது போலவே,
காய்கறிகளை நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை, லவங்கம், ஏலக்காளிணி
சேர்த்துத் தாளித்து, பச்சை மிளகாயைக் கீறிச் சேருங்கள். பிறகு, வெங்காயத்தைப் போட்டு
வதக்குங்கள். நன்கு வதங்கியதும், காய்கறி, புதினா, மல்லித்தழை, இஞ்சி + பூண்டு அரைத்த
விழுது, மிளகாளிணிதூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள். 10 நிமிடம் கழித்து,
வெண்ணெயையும் சேர்த்துக் கிளறுங்கள். தேங்காய்ப்பால் ஒரு கப், தண்ணீர் 2 கப் சேர்த்து
கொதிக்க விடுங்கள். எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது, ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து, ஒரு விசில் வந்த பிறகு, அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.