"கரம்பொன் சீரடி சாயி இல்லத்தின் ஆதரவில் ஆஞ்சனேயரின் மார்கழி மூலநட்கத்திர நன்நாளில் 12-01-2021 செவ்வாய் கிழமை அன்று "ஸ்ரீ பொன் சாயி" தொண்டர் சேவையின் முன்னோக்கி நகரும் செயல் திட்டத்தின் கீழ் பிரதான வீதிகளில் மரங்கள் நாட்டுதலுடன் பொங்கல் பொதிகள் வழங்கும் வைபவங்களும் நடைபெறவுள்ளன. அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றோம்.
கனடிய நிகழ்வுகள்
கனடிய நிகழ்வுத்தொகுப்பு
வெல்லுங்கள் 110,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி!
இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவான தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் நடக்கும் உலகளாவிய நாவல், சிறுகதை திறனாய்வுப் போட்டி.
பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 13 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 110,000 ரூபாய்கள். பரிசுகள் இலங்கை நாணயத்தில் வழங்கப்படும்.
கனடாவின் பிரதான தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ஈழத் தமிழ் பெண் அபி குகதாசன்
கனடிய பாதுகாப்புப் படையின் உயர் மதிப்புறு விருது பெற்ற ஈழத்தமிழ் மகன் – ‘யாழ் இந்து’ செதுக்கிய வாகீசன் மதியாபரணம்
கனேடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் கூடிய பணியை ஆற்றியமைக்காக உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்னும் சிறப்பு விருதினை பெற்றுக் கொண்ட ஈழத்தமிழ் மகன் வாகீசன் மதியாபரணம் அவர்களை வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.
அண்மையில் கனடாவின் தலைநகரான ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள கனடிய பாதுகாப்புப் படையின் தலைமையகத்தில் இடம்பெற்ற படை நிகழ்வொன்றில் தனது சிரேஸ்ட படைத் தளபதியிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொண்ட ஈழத்தமிழ் மகனும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி செதுக்கிய மாணவச் செம்மல் வாகீசன் மதியாபரணம் அவர்களை எமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதிலும் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
இணையத் தெரு வழியில் நடைபெற்ற தமிழர் தெரு விழா 2020
கனடியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக கோலாகலமாக நடாத்தப்பட்டு வந்த 'தமிழர் தெரு விழா' நிகழ்வு இவ்வாண்டு கோவிட்19 நோய்த் தொற்றினைத் தவிர்க்குமுகமாக இம்முறை இணையம் வழியாக கொண்டாடப்பட்டது. கனடியத் தமிழர் பேரவையானது உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களை பல்வேறு நாட்டுக் கலைஞர்களுடன் இணைத்து புதுமையானதொரு முறையில் 'தெருவிழா 2020' கொண்டாட்டத்தை உங்கள் வீட்டிற்குள்ளேயே பார்த்து மகிழும் வண்ணம் அமைத்திருந்தார்கள்.
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர்.
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர்.
நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார். தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.
நீண்டகாலமாக இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றி இருந்தார். இவர் திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகராவார்.
´ஒதெல்லோ´, ´நத்தையும் ஆமையும்´ முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.
ரூபவாஹினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய ‘கற்பனைகள் கலைவதில்லை’ என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர். தொடர்ந்து பல சிங்களத் தொடர் நாடகங்களில் நடித்தவர்.
நடராசா சிறிரஞ்சனால் தொகுப்பட்ட “யாழ்ப்பாணத் தமிழ் அகராதி” மற்றும் “யாழ்ப்பாண வழக்குச்சொல் அகராதி தொகுதி – ஒன்று” அறிமுக விழா
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கெகாண்டவரும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாக பணிபுரிகின்றவரும், பிரபல கட்டுரையாளரும், நூலாசிரியருமான நடராசா சிறிரஞ்சனால் தொகுப்பட்ட “யாழ்ப்பாணத் தமிழ் அகராதி” மற்றும் “யாழ்ப்பாண வழக்குச்சொல் அகராதி தொகுதி – ஒன்று” அறிமுக விழா கடந்த 22ம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் அமைந்துள்ள Kennedy Convention Centre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பாக நடைபெற்ற நினைவுகள்-2020 பல்சுவை நிகழ்ச்சி!
கனடாவில் நன்கு அறியப்பட்ட புகைப்படக் கலைஞரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான கனா ஆறுமுகம் அவர்கள் வருடாந்தம் நடாத்தும் நினைவுகள்-2020 பல்சுவை மற்றும் விருதுகள் வழங்கும் விழா என்பது அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு பெரு விழா என்று கூறலாம். இவ்விழா கடந்த சனிக்க்கிழமை மாலை காபுரோ சீன கலாச்சார மண்டபத்தில்; வெகுசிறப்பாக நடைபெற்றது.
இளம் பாடக பாடகிகளை குழுக்களாக அமைத்து அந்த குழுக்களுக்கிடையில் பாடல் போட்டிகளை நடாத்தி அவர்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பணப் பருசுகளை வழங்குவதே இந்த விழாவின் நோக்கங்களில் ஒன்றாகும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் கலை மரபுரிமைக் கழகம் நடாத்திய தைப்பொங்கல் நிகழ்வு 2020
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் கலை மரபுரிமைக் கழகம் நடாத்திய தமிழ்மரபுத் தைத்திங்கள் பொங்கல் நிகழ்வு, கடந்த தைமாதம் 25ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில், ரொறன்ரோ செல்வ சந்நதி முருகன் ஆலய கலைமண்டபத்தில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் கனகரத்தினம் இரவீந்திரன்; தமைமையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு விழா ஒரு கலை விழாபோல், தமிழ்மரபுத் திங்கள் அடையாளங்களை உள்ளடக்கியதாக, மிளிர்ந்தது என்றால் அது மிகையில்லை.
ஸ்காபுறோவில் சிறப்பாக நடைபெற்ற “வேலாயிமவன்-2″ இறுவெட்டு வெளியீட்டு விழா!
கடந்த சனிக்கிழமை மாலை கனடா ஸ்காபுறோவில் நகரில் அமைந்துள்ள "Armenian Youth Centre" மண்டபத்தில் வேலாயிமவன்-2" இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றல், தேசியகீதம், தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம் ஆகியவற்றோடு ஆரம்பமான நிகழ்வுகளை ஜெய்அரவிந் அவர்கள் நெறிப்படுத்தினார். இறுவெட்டில் உள்ள பாடல்களோடு வேறும் பல பாடல்கள் மேடையில் அரங்கேறியது. இளம் பாடகர்களோடு இணைந்து பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் அவர்களின் இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா!
கனடாவில் இருந்து வெளிவரும் தளிர் இதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள குயின்ஸ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்காக இவர்கள் நடத்திய இசை, நடனப்போட்டியான ‘சலங்கையும் சங்கீதமும்’ என்ற நிகழ்வின் இறுதிச் சுற்றும் நேற்றையதினம் வெகு சிறப்பாக அந்த மண்டபத்தில் நடை பெற்றது
பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் கலந்து கொண்ட FRONTLINE COMMUNITY CENTRE ஆதரவில் இடம்பெற்ற அற்புதமான இசை நிகழ்ச்சி;
சென்ற வெள்ளிக்கிழமை 13ம் திகதி மாலை கனடா ஸ்காபுறோவில் நகரில் இயங்கிவரும் ஒரு சேவை வழங்கும் நிறுவனமான FRONTLINE COMMUNITY CENTRE இற்காக நிதி சேகரிக்கும் ஒரு இசை நிகழ்சி ஸ்காபுறோவில் அமைந்துள்ள "ஒன்ராறியோ தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்ற அற்புதமான இசை நிகழ்ச்சியில் இனிய பாடல்களை வழங்குவதற்காக தமிழ் நாட்டிலிருந்து பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் வருகை தந்து பார்வையாளர்கள் அனைவரையும் மெய்மறக்கச் செய்தார்.
மகாஜனக்கல்லூரி பழையமாணவர் சங்கம் – கனடாவின் முத்தமிழ் விழா – 2019
மகாஜனக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் மாதம் 10 ஆம் திகதி 2019 அன்று ரொறன்ரோவில் உள்ள ‘ஆர்மேனியன் யுத் சென்ரர்’ மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தச் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவு விழாவில் மகாஜனக் கல்லூரி பழைய மாணவனும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து விழாவைச் சிறப்பித்தார்.
கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய வருடாந்ததேர் திருவிழா! -2019
கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று 17-08-2019 ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா ஆயிரக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் புடைசூழ இனிதே நடந்தேறியது. அதிகாலை அபிசேகத்துடன் பூசைகள் ஆரம்பமாகி வசந்தமண்டப பூசையை தொடர்ந்து ஐயப்பன், விநாயகப் பெருமான், சுப்பிரமணியப்பெருமான் சகிதம் உள்வீதி வலம் வந்து காலை 09.30 மணிக்கு தேரில் ஆரோகணித்தார்.
“தமிழின் சுவை” Taste of Tamil மாபெரும் திறந்த வெளி இசை நிகழ்ச்சிக்கு அலையென திரண்ட மக்கள் கூட்டம்
கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் 10ம் திகதி சனிக்கிழமையும் கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற "தமிழின் சுவை" Taste of Tamil என்னும் மாபெரும் திறந்த வெளி இசை நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்த வண்ணம் இருந்தது. அத்துடன் வற்றாத இசை வெள்ளத்தை ஓடவிட்ட அந்த மேடையில் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உட்பட பல அரசியல் தலைவர்கள் இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய வர்த்தகப் பெருமக்களுக்கு கௌரவ கேடயங்களையும், மலர்ச் செண்டு ஆகியவற்றை ஆகியவற்றை வழங்கினார்கள். அட்டகாசமாக ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டத்தின் மத்தியில் சுப்பர் சிங்கர் பாடகரும் பாடகியுமான செந்தில்கணேஸ் லட்சுமி ஆகியோர் பாடி ரகிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றார்கள்.