Tamil Alumni Sports Club of Canada (TASCC)நடாத்திய – பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி -2018

TASSC-2018-1aஇன்று  ஜனவரி மாதம் 27ம் திகதி சனிக்கிழமை Tamil Alumni Sports Club of Canada(TASCC) விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் பிரிவுகளுக்கிடையே பூப்பந்தாட்ட போட்டிகள் கனடாவின் ஸ்காபுரோ பிரதேசத்தில் அமைந்திருக்கும் " Epic Sports Centre"  இல் நடைபெற்றது.

வேட்டி அணிந்து பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்

Justin-Trudeau-Pongal-1aஸ்காபுறோ தமிழர் மரபுரிமை நாள் விழாவில் கனடியப் பிரதமர் பெருமிதம்
தைப்பொங்கலையும் கொண்டாடும் ஒரு நாடாக எமது கனடா பல்கலாச்சாரக் கோட்பாடுகளோடு சேர்ந்து உயர்ந்துள்ளதைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறான வளர்ச்சியை நாம் அடைவதற்கு எமது மக்கள் பல்லின கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மிகவும் மதிப்பதே காரணம் என்பதையும் நான் நன்கு உணர்கின்றேன். இவ்வாறு கடந்த செவ்வாய்கிமையன்று ஸ்காபுறோ கொன்வென்சன் மண்டபத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்த மாபெரும் வைபவத்தில் கனடியப் பிரதமர் கௌரவ ஜஸ்டின் ரூடுடோ பெருமிதத்தோடு கூறினார்.

தமிழ் மரபுரிமைத் திங்களில் தமிழுக்கு ஒரு விழா!

book release-1aஎழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய நான்கு நூல்களின் வெளியீடு  ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் ஸ்கரபறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வைத்திய கலாநிதி மைதிலி தயாநிதி அவர்கள் தலைமைதாங்கி தலைமையுரையினையும், வெளியீட்டுரையினையும் அவரே வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்தினை சாமந்தி யோகநாதன் இசைக்க. சபையோரை எழுத்தாளரின் புதல்வி சங்கரி விஜேந்திரா வரவேற்று பேசினார். அமுதே தமிழே என்ற பாடலை அபிநயா பவனும், நிற்பதுவே நடப்பதுவே என்ற பாரதி பாடலை சாகித்தியா ஸ்ரீரஞ்சனும் மிக அழகாகப் பாடி சபையோரின் கரகோஷங்களைப் பெற்றார்கள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!.

new year 2018-எங்கள் பேரன்புக்கும், பெருமதிப்பிற்கும் உரிய வாசகர்கள், உறவுகள், ஊர்மக்கள், புலம்பெயர் வாழ் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  "எல்லோரும் எல்லாம் பெற்று இன்பம் பொங்கும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக 2018 மலரட்டும்"

கொய்யாத்தோட்டம் கனடா சங்கம் நடாத்திய KEP – GALA NIGHT-2017

KEP GALA 2017-1Aகனடாவில் இயங்கிவரும் கொய்யாத்தோட்டம் கனடா சங்கம் நடாத்திய வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்து ஆகியன கடந்த சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள"The Estate Banquet Hall"  மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக பொறியியலாளர் திரு.ஜெயக்குமார் மற்றும் சிறப்புப் பேச்சாளராக கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு.ஆர்.என்.லோகேந்திரலிங்கம், கனடிய நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிஆனந்தசங்கரி, ரொறொன்ரோ மாநகர உறுப்பினர் நீதன் சாண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.

தமிழ் மிரர் மாதாந்த பத்திரிகையின் 12வது வருடாந்த நிகழ்வில் பேராசிரியர் பர்வின் சுல்தானா

Tamil Mirror Gala 2017-1bஇலங்கைக்கு அடுத்த படியாக புலம் பெயர்ந்த தமிழர்களின் தாயகமாக விளங்குகின்ற கனடாவில் மிகவும் பெறுமதி மிக்கதும், பெருமை கொள்வதுமான தமிழ் மிரர் மாதாந்த பத்திரிகையின் 12வது வருடாந்த நிகழ்வு அண்மையில் மெற்றோ பொலிற்றன் நிலையத்தில் நடந்தேறியது. "Tamil Mirror" என்ற ஆங்கிலப் பத்திரிகையின் வரவுடன் தான் கனேடிய நீரோட்டத்தில் தமிழர்களின் நிகழ்வுகள் கலக்க ஆரம்பித்தன. தமிழ் மக்களின் உண்மையான பிரதிபலிப்பு (Reflect the Tamil Community) இதன் மூலமே சாத்தியமாயிற்று. இதன் நிறுவனர், பிரசுரிப்பாளர், பிரதம ஆசிரியர் ஆகிய முக்கிய பொறுப்புக்களை வகிப்பவர் சார்ள்ஸ் தேவசகாயம் ஆவார்.

கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தில் பக்தி பூர்வமாக நடை பெற்ற நெய் அபிஷேக நிகழ்வு!

Iyappan Nei Abishekam 2017-1aஇன்று டிசம்பர் மாதம் 26ம் நாள் இல.635 மிடில்பீல்ட் வீதியில் அமைந்துள்ள கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தில் மிக பக்தி பூர்வமாக நடை பெற்ற நெய் நிரப்பும் நிகழ்வில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பக்தியுடன் சாமிமார்களுக்கு சிறியவர் பெரியவர்களென நெய் நிரப்பி வணங்கினார்கள். இந் நிகழ்வு பக்தர்களின் சௌகரியத்தை மனதில் கொண்டு இரு நாட்கள் நடைபெற்றது.

இசையரங்கம் வழங்கிய இருபத்தி நான்காவது இசைக்கு ஏது எல்லை!

isaikethu ellai 2017-1dமெல்லிசை ரசிகர்களின் கரம்பற்றி மெல்ல அழைத்து வந்து சாஸ்திரிய நதியில் நீராட்டும் இசையரங்கம் வழங்கிய இருபத்தி நான்காவது இசைக்கு ஏது எல்லை. இசைப்பிரவாகத்தில் ஒரு புதிய பரிமாணம். நவம்பர் 12, 2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு சென்ரானியல் கல்லூரிக் கலையரங்கில் பல இசை ரசிகர்களின் மத்தியில் இனிதே நடைபெற்றது. நிகழ்வை மிக நேர்த்தியாக இலங்கதாஸ் தொகுத்து வழங்கியிருந்தார்.

விலா கருணா முதியோர் இல்லமும் TET-HD  தொலைக்காட்சியும் இணைந்து முதுமைக்கு மகுடம் சூட்டிய இசை விழா! கோல்டன் சுப்பர் சிங்கர்ஸ்

Golden 2017-1aஅன்னைத் தமிழை போற்றும் பிள்ளைகளாய் எம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் என்றுமே எங்கள் இதய தெய்வமாய் நிலைத்து நிற்பவர்கள். முதுமைப் பருவத்தில் அவர்கள் மகிழ்வோடும் அமைதியோடும் தங்கள் இறுதிக் காலத்தை கழிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை பிள்ளைகளாகிய எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. பிறந்து வளர்ந்த தாயகத்தைப் பிரிந்து உறவுகளோடு கூடி வாழ்ந்த தாய் மண்ணைப் பிரிந்து, சொந்த பந்தங்கள்  வீடு வாசல்களை விட்டுப் பிரிந்து புலம் பெயர் தேசத்தில் வாழும் பிள்ளைகளே தஞ்சமென துணை தேடி வந்தவர்கள் நம் பெற்றோர்கள். தாயக மண்ணில் தனித்துவமாய் வாழ்ந்தவர்கள்.

கரம்பனைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் “வீரகேசரி” மூர்த்தி கனடாவில் கௌரவிப்பு

smoorthy1கொழும்பு வீரகேசரி பத்திரிகைக் காரியாலயத்தில் பத்தாண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவரும், எழுத்தாளருமான திரு. செல்லத்துரை தெட்சணாமூர்த்தி(வீரகேசரி மூர்த்தி) கடந்த வாரம் மார்க்கம் தமிழ் முதியோர் சங்கத்தின் மாதாந்தக் கூட்டத்தின் போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
சங்கத் தலைவர் திரு.சுந்தரலிங்கம் இராஜலிங்கம் அவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவத்து உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் கனடா… 150 வது ஆண்டு பிறந்தநாள் விழா கோலாகலம்!

canada day 1a1கனடா நாட்டின் 150 பிறந்த நாள் இன்று (ஜூலை1) கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. நாடு முழுவதும் இரவு வாணவேடிக்கை, வண்ண விளக்குகள் என்று ஒளிமயமாக பிரகாசிக்கப் போகிறது. தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற உள்ள கொண்டாட்டத்தில் 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 150 வது ஆண்டு விழா என்பதால் நாட்டு மக்களிடம் கூடுதல் குதூகலம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் கனேடியர்களும் பெருவாரியாக கலந்து கொள்கிறார்கள். 

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் 5வது  உலகத் தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி-  ஜூலை 29 /30 2017

WTBF-2017-1aஇம்முறை பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கனடாவில் நடைபெறுகிறது. கனடாவிலுள்ள அனைத்து கழகங்களும் பங்குபற்றுவதோடு சுவிஸ், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, சுவீடன், டென்மார்க், நோர்வே, அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா என பல நாடுகளிலிருந்தும் தமிழ் வீரர்கள் பங்குபற்றும் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி. இதுவரை போட்டிக்காக பெயர்களை பதிவு செய்யாதவர்கள் தயவு செய்து கீழேயுள்ள அலுவலர்களைத் தொடர்பு கொள்ளவும்.
பாரிய அளவிலான சுற்றுப் போட்டியாதலால் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் உபகுழுவில் இணைந்து பங்காற்ற விரும்பும் கழக உறுப்பினர்களும், தொண்டர்களாக உதவி செய்ய விரும்புவர்களும் தயவு செய்து கீழேயுள்ள அலுவலர்களைத் தொடர்பு கொள்ளவும்.

காரைநகர் தந்த கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் அறிமுக விழா

Ezil Popkal-1aகாரைநகர் தந்த கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மன் அவர்களின் மரபுக் கவிதைகள் அடங்கிய ‘எழில் பூக்கள்’ என்ற நூல் மற்றும் அந்தக் கவிதைகளை பிரபல தென்னிந்தியத் திரை இசைப் பாடகர்களின் குரலில் வடிவமைத்த இசைப்பாடல் இறுவெட்டு அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை1120 Tapscott Road, Unit- 3 Scarborough (McNicoll & Tapscott) ல் அமைந்துள்ள தமிழிசைக் கலா மன்றத்தின் அழகிய அரங்கத்தில் நடைபெற்றது. அறிமுக விழாவில் தமிழ் ஆர்வலர்களும் ரொறன்ரோ வாழ் காரைநகர் மக்களும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வை கவிஞர் கந்தவனம் அவர்கள் தலைமைதாங்கி நடாத்த எழில் பூக்கள்’ கவிதை நூலின் அறிமுகவுரையை கவிஞர் கோதை அமுதன் அவர்களும், ஆய்வுரையை கலாநிதி சுப்பிமணியம் அவர்களும் வழங்க நிகழ்வுகளை C.M.R வானொலி அறிவிப்பாளர் தர்ஷினி உதயராஜா சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

கனடா பிரதமரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

canada-pmஉலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடே தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று. தமிழர்களின் வாழ்வியலோடு மிகவும் பின்னிப்பிணைந்த கனடா, தமிழர்களின் கலை, கலாசாரம் என அனைத்திற்கும் தகுந்த அங்கீகாரம், மரியாதை வழங்கிவருகிறது.

இந்நிலையில், சித்திரை 14ம் தேதியான இன்று தமிழ்ப் புத்தாண்டு தினம் என்பதால், கனடா பிரதமர் ட்ருடே தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“LIFT SHOW” ஈழத்து கலைஞர்களின் படைப்பின் குறும்படத் திரையிடல்

LIFT SHOW-1aகடந்த வாரம் கனடா ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள WOODSIDE  CINEMA திரையரங்கில் "LIFT"  பிரான்ஸ் ஈழத்தமிழர் திரைப்படச் சங்கத்தினால்; ஏற்பாடு செய்யப்பட்ட எமது கலைஞர்களின் படைப்பில் உருவான சிறந்த 10 பரிசு பெற்ற  குறுந்திரைப்படங்கள் பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டன. இந்நிகழ்வில் பிரான்ஸ், லண்டன், நோர்வே போன்ற நாடுகளிலிருந்து படத்தின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். வருடா வருடம் வேறு நாடுகளில் நிகழும் இக் குறும்பட விழா இம்முறை கனடாவில் நடைபெற்றது. நிகழ்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களை பார்வையாளர்கள் பாராட்டி கௌரவித்தார்கள். விழாவினை தர்ஷனி வரப்பிரசாதம் தொகுத்து வழங்கியிருந்தார்.