Toronto Smashers Badminton Club – Award Night & Dinner Gala-2023

கனடாவில் இயங்கிவரும் Toronto Smashers Badminton Club நடாத்திய வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்து ஆகியன ஏப்ரல் 1ம் திகதி சனிக்கிழமை மாலை ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இசை, நடனங்கள் முதலான கலை நிகழ்ச்சிகளுடன் விளையாட்டு வீரர்கள் மற்றும் விழா அனுசரனையாளர்கள் விருது கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர். விருந்துபசாரத்தைத் தொடர்ந்து நன்றியுரையுடன் விழா இனிதே முடிவுற்றது.


கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் ‘பட்டிமன்றத் தாரகை’ பாரதி பாஸ்கர்

கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் கடந்த புதன்கிழமையன்று ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி தேவதாஸ் தொடக்க உரையாற்றியதைத் தொடர்ந்து சிறப்பு பேச்சாளராக தமிழகத்தின் பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் கலந்துகொண்டு சபையோரைக் கவரும் வகையில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரம் ஆகியவை தொடர்பாக உரையாற்றினார்.


பலரையும் வியக்கவைத்த கனடா வாழ் யாழ்ப்பாண பெண்மணி வரதா சண்முகநாதன்!

கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் யாழில் அவருக்குச் சொந்தமாக உள்ள காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
யாழில் வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட வரதா சண்முகநாதன் என்பவரே தனக்கு சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.
பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (18-02-2023) மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றுள்ளது.


கனடாவின் ஒட்டாவா மாநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் விழா 2023

கனடாவின் ஒட்டாவா மாநகரில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் தமிழ் மரபுரிமைத் திங்கள் மற்றும் பொங்கல் விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் தை 30, 2023 திங்கள் கிழமை கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கனடிய பிரதமர் உட்பட கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் கனடாவின் எல்லா கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி இருந்தனர். கனடிய தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கனடாவின் எல்லா பாகங்களிலும் இருந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தமிழர்களுக்கு கனேடிய பிரதமரின் ‘தை பொங்கல்’ வாழ்த்து!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு ‘தை பொங்கல்’ வாழ்த்து தெரிவித்து காணொளி வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த வாரம், கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்கள் அறுவடைத் திருநாளான தைப் பொங்கலைக் கொண்டாடுவார்கள். “இந்த வருடாந்தர நான்கு நாள் திருவிழாவின் போது, குடும்பமும் அன்புக்குரியவர்களும் கூடி, வருடத்தின் அபரிமிதமான அறுவடைக் காலத்திற்காக இயற்கைக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்கள் பொங்கலைக் கொண்டாடுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் ஒன்று கூடும், இது பாலில் காய்ச்சப்பட்ட அரிசியுடன் காரமான அல்லது இனிப்பு செய்யப்பட்ட பாரம்பரிய உணவாகும்


கனடா தமிழ் எழுத்தாளர் இணைய தலைவரும் இலக்கியவாதியுமான அகணி சுரேஸ் அவர்களின் மற்றுமொரு சாதனை முயற்சி!

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவரும் சாதனை முயற்சிகளை சிலவற்றை ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்தவரும் இலக்கியவாதியுமான அகணி சுரேஸ் அவர்கள் மற்றுமொரு சாதனை முயற்சி அண்மையில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
35 மணித்தியாலயங்கள் தொடர்ச்சியாக நூல்கள் பற்றிய அறிமுக உரையை நடத்தி இலக்கியச் சாதனையை நிலை நாட்டிய அவருக்கான பாராட்டு வைபவம் ஒன்றை கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஜனவரி 2ம் திகதி திங்கட்கிழமை நடாத்தியது.


கனடாவில் தள்ளாத வயதிலும் சாதித்த யாழ்ப்பாண தமிழச்சி வரதா சண்முகநாதன் – சட்டமன்றுக்கு வரவழைத்து பாராட்டு

கனடாவிற்கு புலம்பெயர்ந்த நிலையில் தனது 87 ஆவது வயதிலும் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்று ஆச்சரியப்படவைத்துள்ளார் யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த தமிழச்சியான மூதாட்டி .

கனடாவில் வசித்து வரும் யாழ்ப்பாணம் வேலணையை பூர்விகமாக கொண்ட வரதா சண்முகநாதன் (87) என்பவரே யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) தனது இரண்டாவது முதுகலைப்பட்டத்தைப் பெற்றுள்ளார்.


Elson Badminton Club -Gala-2022

கனடாவில் இயங்கிவரும் Elson Badminton Club நடாத்திய வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்து ஆகியன நவம்பர் 19ம் திகதி சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள “The Estate Banquet Hall” மண்டபத்தில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நடனம் ஆகியனவும் இடம்பெற்று சிறுவர் சிறுமியர்களுக்கு அன்பளிப்புக்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.


நடந்து வந்த பாதையிலே “நூல் அறிமுக விழா”

இலங்கை யாழ்ப்பாணத்தில் முகமாலை(பளை) என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்து இன்று சுவிட்சர்லாந்து தேசத்தில் வாழும் திரு.கந்தையா சிங்கம் அவர்கள் எழுதிய ” நடந்து வந்த பாதையிலே” என்னும் ஒரு விளையாட்டு வீரனின் சுயசரிதை “நூல் அறிமுக விழா” சென்ற ஞாயிற்றுக் கிழமை (10-23-2022) கனடா ஸ்காபுறோவில் அமைந்துள் செந்தாமரை மண்டபத்தில் மாலை நான்கு மணியளவில் ஆரம்பித்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் 3 கனேடிய நகரங்கள்!

Canada1aமுன்னிலை உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பட்டியலில் கனடாவின் கல்கரி நகரம் 3ம் இடத்தையும், வான்கூவார் 5ம் இடத்தையும், றொரன்டோ எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

நகரங்களின் ஸ்திரத்தன்மை, சுகாதார வசதிகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உட்கட்டுமான வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.