வெஜிடபிள் பிரியாணி – 5

vegi biriyane-5தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை மிளகாய்- 2, புளித்த தயிர் – அரை கப், எலுமிச்சம்பழச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி + பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, கேரட் – 1, உருளைக்கிழங்கு -1, பட்டாணி – ஒரு கைப்பிடி. தாளிக்க: பட்டை – ஒரு துண்டு, லவங்கம் – 3, ஏலக்காய் – 4, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: நறுக்கிய தக்காளி, புதினா, மல்லித்தழை, இஞ்சி + பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை தயிரோடு சேர்த்து 2 மணி நேரம் ஊற வையுங்கள். அரிசியைக் கழுவி, இரண்டரை கப் தண்ணீரில் ஊறவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும், தயிரையும் ஊறவைத்த பொருட்களையும் அப்படியே சேருங்கள். எண்ணெய் பிரியும் வரை கிளறுங்கள். பச்சை வாசனை போய், எண்ணெய் பிரிந்து வந்ததும் அரிசியை ஊறவைத்த தண்ணீருடன் சேருங்கள். ஒரு விசில் வந்ததும், தீயைக் குறைத்து ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்குங்கள்.


வெஜிடபிள் பிரியாணி – 4

vegi biriyane-4தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை மிளகாய்- 2, புளித்த தயிர் – அரை கப், எலுமிச்சம்பழச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி + பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், புதினா, மல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, கேரட் – 1, உருளைக்கிழங்கு -1, பட்டாணி – ஒரு கைப்பிடி, தேங்காய்ப்பால் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிக்க: பட்டை – ஒரு துண்டு, லவங்கம் – 3, ஏலக்காய் – 4, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் ஊறவையுங்கள். முதலில் சொன்னது போலவே,
காய்கறிகளை நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை, லவங்கம், ஏலக்காளிணி
சேர்த்துத் தாளித்து, பச்சை மிளகாயைக் கீறிச் சேருங்கள். பிறகு, வெங்காயத்தைப் போட்டு
வதக்குங்கள். நன்கு வதங்கியதும், காய்கறி, புதினா, மல்லித்தழை, இஞ்சி + பூண்டு அரைத்த
விழுது, மிளகாளிணிதூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள். 10 நிமிடம் கழித்து,
வெண்ணெயையும் சேர்த்துக் கிளறுங்கள். தேங்காய்ப்பால் ஒரு கப், தண்ணீர் 2 கப் சேர்த்து
கொதிக்க விடுங்கள். எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது, ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து, ஒரு விசில் வந்த பிறகு, அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.


வெஜிடபிள் பிரியாணி – 3

vegi biriyane-3தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 2, புளித்த தயிர் – அரை கப், எலுமிச்சம்பழச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி + பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, கேரட் – 1, உருளைக்கிழங்கு -1, பட்டாணி – ஒரு கைப்பிடி. 
தாளிக்க: பட்டை – ஒரு துண்டு, லவங்கம் – 3, ஏலக்காளிணி – 4,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன். 

செய்முறை: அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள். வெங்காயத்தை
நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்குங்கள்.
உருளைக்கிழங்கை சற்றுப் பெரிய துண்டுகளாகவும் கேரட்டை வட்ட வில்லைகளாகவும் நறுக்குங்கள்.
குக்கரை சூடாக்கி எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, உடனே
வெங்காயம், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்குங்கள்.
பிறகு, நறுக்கிய காய்கறியை அதோடு சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்குங்கள். காய்கறி
வதங்கியதும் நறுக்கிய தக்காளி, இஞ்சி + பூண்டு விழுது, புதினா, மல்லித்தழை, தயிர்,
எலுமிச்சம்பழச் சாறு, தேவையான உப்பு, பச்சை மிளகாய் (முழுதாக) சேர்த்து, 5 நிமிடம் நன்கு
கொதிக்கவிடுங்கள். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் இதில் சேருங்கள். குக்கரை மூடி, வெயிட்
போடுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை நன்கு குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.
சூடான வெஜிடபிள் பிரியாணி ரெடி.


வெஜிடபிள் பிரியாணி – 2

vegi biriyane-2தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, கேரட் – 1, உருளைக்கிழங்கு – 1, பட்டாணி – ஒரு கைப்பிடி, புதினா, மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி,மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
ரைக்க: சின்ன வெங்காயம் – 10, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 6 பல் (சிறிய பூண்டாக இருந்தால் 8 பல்), காய்ந்த மிளகாய் – 3, தனியா – 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, சீரகம் – அரை டீஸ்பூன், தயிர் – அரை கப், கசகசா – 1 டீஸ்பூன்.
தாளிக்க: பிரிஞ்சி இலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். அரைக்கக்
கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்தெடுங்கள். காய்ணிகறிகளை வெஜிடபிள்
பிரியாணிக்கு சொன்னது போலவே நறுக்குங்கள். வெங்காயத்தை நீளவாக்கிலும் தக்காளியை
பொடியாகவும் நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதங்கியதும், அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். ஊறிக்கொண்டிருக்கும் அரிசியை, தண்ணீருடன் மேற்கண்ட கலவையில் சேர்த்துக் கிளறி, மூடிப்போட்டு, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்குங்கள்.


வெஜிடபிள் பிரியாணி – 1

vegi biriyane-1தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 2, புளித்த தயிர் – கால் கப், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி + பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், புதினா, மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, கேரட்- 1, உருளைக்கிழங்கு – 1, பட்டாணி – ஒரு கைப்பிடி, வினிகர் – 2
டேபிள் ஸ்பூன், அரைத்த முந்திரி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், இனிப்பில்லாத கோவா – 1 டேபிள் ஸ்பூன்.
தாளிக்க: பட்டை, லவங்கம் – தலா 2, ஏலக்காளிணி – 4, எண்ணெளிணி – 2 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீரில் ஊறவையுங்கள். காய்கறிகளை முதலில்
சொன்னது போல நறுக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை,
லவங்கம், ஏலக்காளிணி தாளித்து, வெங்காயம் சேருங்கள். வெங்காயத்துடன் சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதங்கியதும், அரைத்த இஞ்சி + பூண்டு விழுது, தக்காளி, காய்கறி, புதினா, மல்லித்தழை, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, தயிர், கோவா, வினிகர் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, ஊற வைத்த அரிசியை அந்தத் தண்ணீருடன் சேர்த்து, அரைத்த முந்திரி விழுது, தேவையான உப்பு சேர்த்து, குக்கரை மூடுங்கள். ஒரு விசில் வந்ததும், அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்குங்கள்.


வதக்கிய காரக்குழம்பு

karai kulambuதேவையானவை: பெரிய வெங்காயம் – 2, பூண்டு – 10 பல், தக்காளி – 4, சிறிய கத்தரிக்காய் -10, புளி – எலுமிச்சை அளவு, மிளகாய்தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியாதூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.    அரைக்க: தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 4, கசகசா – 2 டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், மிளகு -கால் டீஸ்பூன், பூண்டு – 2 பல்.  தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன்,
சோம்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – கால் கப்.
செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள் பூண்டைத்


பாசிப்பருப்பு சொதி

தேவையானவைparupu sothi: பாசிப்பருப்பு – கால் கப், முதல் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், இரண்டாம் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி – ஒரு துண்டு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, பூண்டு – 6 பல். அரைக்க: பச்சை மிளகாய் – 4. தாளிக்க: பட்டை 1 துண்டு, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள்.


புளி சாதம்

puli saatham copyதேவையானாவை: சாதம் – 2 கப், புளி -எலுமிச்சம்பழ அளவு, மஞ்சள் தூள் –
கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் –
5, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், வேர்க்கடலை (விருப்பப்பட்டால்) – ஒரு
டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை  சிறிது.
செய்முறை: புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அதனுடன்
மஞ்சள்தூள், உப்பு, சாதம் சேர்த்துக் கலந்து அழுத்திவையுங்கள். ஒரு மணி நேரம்
ஊறியபிறகு, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து,
பொன்னிறமானதும் சாதத்தில் சூடாகக் கொட்டி (அப்போதுதான் புளியின் பச்சை
வாசனை போகும்) கிளறுங்கள். விருப்பப்பட்டவர்கள், ஊறவைத்து வேகவைத்த
கொண்டைக்கடலையை, வேர்க்கடலைக்குப் பதிலாக சேர்க்கலாம்.
முதல்நாள் செய்து மீந்த சாதத்தில் புளியைக் கரைத்து ஊற்றிவைத்திருந்துவிட்டு கூட,
மறுநாள் இம்முறையில் தாளிக்கலாம். அருமையாக இருக்கும்.


பத்தியக்கூட்டுக் கறி

தேவையான பொருட்கள்:
புடலங்காய் – ½ கிலோ
துவரம் பருப்பு – 4 கரண்டி (வேக வைத்து மசித்தது) 
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – ¼ ஸ்பூன்
மல்லிப்பொடி – 1 ஸ்பூன்