இன்று 02-04-2021 வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை வைத்தியசாலை உணவுக்கூட (Canteen) திறப்புவிழா ஸ்ரீவைரவப்பெருமானின் பூசையுடனும், ஆசியுடனும் ஆரம்பமானது. எல்லோரும் பசியாறும் வசதிகளைக் கொண்ட உணவுக்கூடம் வடக்கு Road ஊர்காவற்றுறை பண்ணை வீதி வைத்தியசாலை ஸ்ரீவைரவர் சந்நிதியின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள், வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளர்கள் என தனித்தனியாக அமர்ந்து உணவு உட்கொள்ளும் வகையில் சுகாதார முறைப்படி உணவுக்கூடம் பிரித்து (separated) அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகள்
கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தின் 130வது ஆண்டு நிறைவு விழா!
கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் நடைபெறும் நிழ்வுகள்!
"கரம்பொன் சீரடி சாயி இல்லத்தின் ஆதரவில் ஆஞ்சனேயரின் மார்கழி மூலநட்கத்திர நன்நாளில் 12-01-2021 செவ்வாய் கிழமையான இன்று "ஸ்ரீ பொன் சாயி" தொண்டர் சேவையின் முன்னோக்கி நகரும் செயல் திட்டத்தின் கீழ் ஸ்ரீபொன்சாயி இல்லத்தில் ஆஞ்சனேயர் விம்பம் பிரதிஷ்டை, சீரடி சாயி சத்சரித கைநூல் வெளியீடு, மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம் மற்றும் பொங்கல் பொதிகள் வழங்குதல் ஆகிய நான்கு நிழ்வுகள் நடைபெற்றன.
<
விடைபெறுகிறது 2020 மகிழ்ச்சியுடன் இனிதாய் வரவேற்போம்.. ஆங்கிலப் புத்தாண்டு 2021.!
இன்று 2020ஆம் ஆண்டின் கடைசி நாள். நம் வாழ்நாளில் மறக்க முடியாத வருடம் என்றால் அது 2020ஆம் ஆண்டாக இருக்கக்கூடும். எத்தனை கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் 2020ஆம் ஆண்டை வரவேற்று மகிழ்ந்தோம். ஆனால் பலரது வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை 2020ஆம் ஆண்டு கற்றுக் கொடுத்துள்ளது.
பிறந்திருக்கும் புது வருடத்தில் அனைவரது வாழ்விலும் சாந்தி, சமாதானம், அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைத்திருக்க கரம்பொன்.நெற் இணையம் வாழ்த்துகிறது.
“கரம்பொன் சீரடி சாயி இல்லம்” பக்தி பூர்வமாக இன்று (23-08-2020) திறந்து வைக்கப்பட்டது
சீரடி சாயியின் திருவருளால் இன்று சார்வரி ஆண்டு ஆவணித் திங்கள் 7ம் நாள் (23-08-2020) ஞாயிறு காலை 8.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையுள்ள சுபநேரத்தில் "ஸ்ரீ பொன் சாயி" கரம்பொனுக்கு வருகை தரும் வைபவம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது.
இந்தியாவின் புண்ணிய சீரடி மண்ணிலுள்ள பாபாவின் மகா சமாதியில் "ஸ்ரீ பொன் சாயி" ஆசீர்வதிக்கப்பெற்று பின் இலங்கை " யாழ் மத்தி ஸ்ரீ பகவான் சத்திய சாய் சேவா நிலையத்தில்" சௌகரியமாக தனது பொன்னான நாளை எதிர்பார்த்து இன்று நல்லூர் " யாழ் மத்தி ஸ்ரீ பகவான் சத்திய சாய் சேவா நிலையத்தின்" தலைமையில் "ஸ்ரீ பொன் சாயியின்" நிழல் உருவப்படம் அங்கு எழுந்தருளல் காயத்ரி, அஷ்ரோத்ர சத நாமாவளி, வைகறை ஆராத்தி ஆராதனையைத் தொடர்ந்து காலை 9.15 மணியளவில் பக்தர்கள் புடை சூழ கரம்பொன் தெற்கு ஒழுவில் "ஸ்ரீ ஞானவைரவர் அரச மரத்தடிக்கு 10.00 மணியளவில் வந்தடைந்து கோவிலில் இருந்து சுருவில் வீதி வழியாக மங்கள வாத்தியங்களுடன் "ஸ்ரீ பொன் சாயி" ஊர்வலமாக கரம்பொன் சுருவில் வீதியில் அமைந்துள்ள கனிஷ்ட பாடசாலைக்கு (Karampon little flower convent) அருகிலுள்ள "கரம்பொன் சீரடி சாயி" இல்லத்தில் தனது இருப்பிடத்தில் வந்தமர்ந்து கொண்டார்.
உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!
அன்னையாய் வீற்றிருந்து அருள்புரியும் நயினாதீவு நாகபூசணி அம்பாள் – இன்று தேர்த் திருவிழா
மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டி நிற்கும் அன்னை நாகபூஷணியின் இவ் வாண்டுக்கான தேர்த் திருவிழா இன்று காலை 7 மணிக்கு நயினை அம்மன், பிள்ளையார், முருகன் ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்று, உள்வீதி உலா இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்று கடவுளரும் தேரில் ஏற்றப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் முத்தேர்களும் வடமிழுக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அபிஷா செல்வமோகனின் பரநாட்டிய நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை இங்கே காணலாம்
ஆடற் செல்வி அபிஷா செல்வமோகனின் முழுமையான கலையாற்றலைக் காண்போம் வாரீர்! -ஆர்.என். லோகேந்திரலிங்கம்
வடமொழியானது தனது செல்வாக்கை இந்த அற்புதக் கலை வடிவத்தின் மீது செலுத்திய வண்ணம் இருக்க, தமிழ்நாட்டிற்குரிய ஒருகலை வடிவமாகத் திகழ்ந்த பரதநாட்டியம் தற்போது உலகெங்கும் பரந்து விரிந்து தன் பாதங்களைப் பதித்தவண்ணம் அழகுமங்கையர்க்கு மேலும் அழகூட்டிவருகின்றது. ஆற்றல் நிறைந்தவரை அணைத்து தொடர்ந்து அழைத்துச் செல்லுகின்றது.இவ்வாறான அற்புதக் கலையை பயிலும் ஒரு நடனமங்கை அல்லது ஒரு ஆடவன் தனது பாதங்களை அடித்தளமாகக் கொண்டு ஒரு நடனத்தை பார்வையாளர்களுக்கு சமர்ப்பித்தாலும், தனது உடல் உறுப்புக்கள் மற்றும் உணர்வுகள் போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆடுதலே இந்த பரதநாட்டியத்தின் சிறப்பு என்று சொல்லலாம்.
பிறிமா டான்ஸ் நிறுவனம் நடாத்திய Prima Dance Night -2016
கனா ஆறுமுகம் அவர்களின் “நினைவுகள் 2016”
கனடாவில் நினைவுகள்.கொம் என்றால் நம் எல்லோர் மனங்களிலும் உடனே பதிவாகுவது அதன் அதிபர், ஸ்தாபகர் திரு.கனாவின் முகமே!!. இந்த நினைவுகள் அதிபர் திரு.கனா ஆறுமுகம் அவர்கள் நடாத்திய 2016ம் ஆண்டுக்குரிய “நினைவுகள் 2016” என்னும் அட்டகாசமான விழா கடந்த 20.02.2016 சனிக்கிழமை ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
கனடிய தமிழ் வல்லுநர் சங்கத்தின் “Black & White Affair 2015”
கனடிய தமிழ் வல்லுநர் சங்கத்தின் (Canadian Tamil Professionals Association) “Black & White Affair 2015” என்னும் நிகழ்வு இராப்போசனத்துடன் கடந்த மாதம் 27 ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கண்கவர் நடனங்கள், இசைப் போட்டிகள் என பல விதமான நிகழ்வுகள் நடைபெற்றது.
மார்க்கம் ஸ்ரீசத்ய சாயி நிலையத்தினர் கொண்டாடிய ஸ்ரீசத்ய சாயி பாபாவின் 90வது ஆண்டு ஜெயந்தி தினம்
நேற்றைய தினம் மாலை 5.30 மணியளவில் மார்க்கத்திலுள்ள Armadale Community Centre இல் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 90வது ஆண்டு ஜெயந்தி தினம் மார்க்கம் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தினரால் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் வயலின் இசை, ஆன்மீகவுரை, பஜனைகளுடன் ஊஞ்சல் மற்றும் மங்கள ஆரத்தியும் இடம்பெற்றன. இச் சாயி சேவா நிலையம் கடந்த 16 வருடங்களாக மாதம் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இளம் சிறார்களுக்காக சமய வகுப்புகளையும், முதியோர்களுக்காக பஜனைகளையும் தொடர்ந்து நடாத்தி சேவையாகச் செய்து வருகிறார்கள். அத்துடன் பகவான் சாயிபாபாவின் ஜெயந்தி தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ராஜகீதங்கள் -2015 இசை நிகழ்வில் தமிழில் பாடி அசத்திய சீன மொழி பேசும் கலைஞன்
இன்று மாலை 25 ஒக்டோபர் 2015 ஞாயிற்றுக்கிழமை Bur Oak உயர்தர பாடசாலையில் T.M.S VS தெய்வேந்திரன் பெருமையுடன் வழங்கிய “ராஜகீதங்கள் -2015" இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மலேசியாவிலிருந்து வருகை தந்த சீன மொழி பேசும் இசைக்கலைஞன் வில்லியம் தமிழ் பாடல்களை இனிமையாகப் பாடி அசத்தியதுடன் ஆடியும் சபையோரை மகிழ்வித்தார்.
ஆனந்த விகடனின் “சந்திரஹாசம்” – கிராஃபிக் நாவல் வெளியீட்டு விழா
கடந்த திங்கட்கிழமை 10-12-2015 கனடா தமிழர் தகவல் சஞ்சிகையின் ஆதரவில் ஆனந்த விகடன் வெளியீட்டகத்தின் பிரசுரமான “சந்திரஹாசம்”; – நாவல் வெளியீட்டு விழா மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய சாகித்ய மண்டல பரிசு பெற்றவரும், “காவல் கோட்டம்” நாவலை எழுதியவருமான திரு.சு.வெங்கடேசன் அவர்களால் எழுதப்பெற்று, பிரபல ஓவியர் க.பாலசண்முகம் அவர்களின் ஓவியங்களோடு நவீன கிராஃபிக் தொழில் நுட்பத்தால்
யாழ் இந்துக் கல்லூரியின் கலையரசி – 2015
எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு ஜெயமோகன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார். அச்சமயம் அவருடனான ஓர் இலக்கிய கலந்துரையாடலை ரொறன்ரோ தமிழ் சங்கம் நடாத்தியிருந்தது.
பச்சிளம் பாலகியின் பரவசமான பரத நாட்டிய அரங்கேற்றம்! – வீரகேசரி மூர்த்தி
ஒன்பது வயதுச் சிறுமியான செல்வி அபிஷா செல்வமோகனின் பரத நாட்டிய அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு அண்மையிலே கிடைத்தது. பத்தோடு பதினோராவது அரங்கேற்றமாக இருக்குமென எண்ணிக் கொண்டு சென்ற எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனக்கு மாத்திரமல்ல ஏனைய அனைவருக்குமே ஆச்சரியமாகத் தான் இருந்தது என்பதனை அவர்களது பலத்த கரகோஷங்களின் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
யுனைரெட் விளையாட்டுக்கழகம் நடாத்திய – பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
ஓன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி United Tamil Sports Club நடாத்திய Badminton சுற்றுப் போட்டி கடந்த 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோவில் அமைந்துள்ள Malvern GYM இல் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் பெரியவர்களென பல பிரிவுகளில் போட்டி காலை 9.30 மணி தொடக்கம் இரவு 10.00மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன. வருடாவருடம் தவறாமல் யுனைரெட் விளையாட்டுக்கழகம் இப் பூப்பந்தாட்டப் போட்டியை நடாத்தி வருவது பாராட்டுதற்குரியது.
ரொறன்ரோவில் திருவையாறு-2015
தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டு ஒன்றியம் – கனடா
Tamil Cultural Progressive Organization – Canada (TCPO-CAN)
பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் 2011 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டுஒன்றியம் – கனடா என்ற அமைப்பு ரொறன்ரோவில்,தமிழர் பண்பாட்டு நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பான முறையில் நடத்திக் கொண்டு வருவதை வாசகர் அறிந்திருப்பார்கள். இவ்வமைப்பு ரொறன்ரோவில் முதன் முதலாக திருவையாறு நிகழ்ச்சியை மார்ச். 01, 2014 நடத்திச் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. அதன் தொடச்சியாக இவ்வாண்டும் இரண்டாம் முறையாக ரொறன்ரோவில் திருவையாறு நிகழ்ச்சியை 28.03.2015 ஸ்காபரோவிலுள்ள பெரிய சிவன் ஆலய கலாச்சார மண்டபத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நடத்தினர்.
ஞானம் சஞ்சிகையின் “ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்” அறிமுக விழா
இன்று ஞானம் தனது 175 இதழாக வெளியிட்டிருந்த சிறப்பு இதழான 'ஈழத்துப்புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா 'டொராண்டோ'வில் நடைபெற்றது. கனடாத்தமிழ்ச்சங்க ஆதரவில் வைத்திய கலாநிதி லம்போதரனுக்குச்சொந்தமான 'டொராண்டோ' தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில். எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினையும், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் தலைமையுரையினையும் ஆற்ற அறிமுக உரையினைப் பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன் ஆற்றினார். அதன்பின்னர் நூல் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு விற்பனைக்கு விடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையினையும், இறுதியாக நன்றியுரையினை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் ஆற்றினார்கள்.