ஞானம் சஞ்சிகையின் “ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்” அறிமுக விழா

gnanam book releaseன்று ஞானம் தனது 175 இதழாக வெளியிட்டிருந்த சிறப்பு இதழான 'ஈழத்துப்புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா 'டொராண்டோ'வில் நடைபெற்றது. கனடாத்தமிழ்ச்சங்க ஆதரவில் வைத்திய கலாநிதி லம்போதரனுக்குச்சொந்தமான 'டொராண்டோ' தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில். எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினையும், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் தலைமையுரையினையும் ஆற்ற அறிமுக உரையினைப் பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன் ஆற்றினார். அதன்பின்னர் நூல் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு விற்பனைக்கு விடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையினையும், இறுதியாக நன்றியுரையினை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் ஆற்றினார்கள்.

தனக்கென தனிப்பாதை வகுத்து துளிர் விடும் “தளிர்” சஞ்சிகை!

Thalir 1st year-1“தளிர்” ஆண்டு விழாவில் டாக்டர் போல் ஜோசெப்

“தளிர் சஞ்சிகை தனக்கென தனிப்பாதை வகுத்து, சவால்களை சாதனையாக்கி வெற்றிகரமாக வெளி வந்து ஓராண்டினை நிறைவு செய்துள்ளது. அதன் ஆசிரியர் சிவமோகனும், துணைவியார் நந்தினியும் நீ பாதி, நான் பாதியென சிவசக்தியாக ஒன்றிணைந்து செயலாற்றி வருவது பாராட்டுக்குரியதாகும். கலாநிதி பாலசுந்தரம், கதிர் ஒளி ஆசிரியர் திரு.போள் ராஜபாண்டியன், டாக்டர் கென் சந்திரா, வீடு விற் பனை முகவர் திரு.சங்கர் மாணிக்கம் ஆகியோரது பேராதரவினால் “தளிர்” மேலோங்கி வருகின்றது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா-2015

C-Tamil Witers-1கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கனடாவின் மூத்த தமிழ் இலக்கிய முன்னோடிகளான அமரர் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும் கவிஞர் திரு. வி. கந்தவனம் அவர்களுக்கும் வழங்கிக் கௌரவித்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை (14-03-2015) ஸ்காபரோ சிவிக்சென்ரர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அன்று நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.அவரது வரவேற்புரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.

வெகு விமரிசையாக இடம்பெற்ற கனடா உதயனின் 9 ஆவது சர்வதேச விருது வழங்கும் விழா

uthayan-2015கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்தும் 9 ஆவது சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று மாலை கனடா ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள மார்க்கம் கொன்வென்சன் மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. 

குறித்த விருது விழாவில் வழங்கப்பட்ட ஆறு விருதுகளில் இரண்டு வெளிநாடுகளில் வாழும் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது. 

கனா ஆறுமுகம் நடாத்திய “நினைவுகள் 2015”

Ninaivukal-2014கனா ஆறுமுகம் நடாத்திய 2015ம் ஆண்டுக்குரிய “நினைவுகள் 2015”

கனடாவில் நினைவுகள்.கொம் என்றால் நம் எல்லோர் மனங்களிலும் உடனே பதிவாகுவது அதன் அதிபர், ஸ்தாபகர் திரு.கனாவின் முகமே!!. இந்த நினைவுகள் அதிபர் திரு.கனா ஆறுமுகம் அவர்கள் நடாத்திய 2015ம் ஆண்டுக்குரிய “நினைவுகள் 2015” என்னும் அட்டகாசமான விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடக்கம் ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

ENERGY EXPO ஆதரவில் வெகு விமரிசையாக இடம்பெற்ற ‘பொன்மாலைப்பொழுது’

fuelonகனடாவில் புலம் பெயர்ந்து வாழும் தாயக தமிழர்களின் ரசனையே தனித்துவமானதாகும். என்ன தான் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணின் வாசனை புலம் பெயர்ந்த கனடாவிலும் மணம் வீசிட நுண்கலைகளில் கொண்டுள்ள மிகுந்த ஈடுபாடும், குறிப்பாக இசை, நடனம் மற்றும் வாத்ய கருவிகள் என அவர்களின்கலைப்பற்று அபரிதமாய் வளர்ச்சியுற்று எண்ணற்ற முன்னணிக் கலைஞர்களை உருவாக்கி இன்று தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்து வருவது ஒரு பக்கம் என்றால்,

தமிழ் மரபுத் திங்களை தேசிய ரீதியில் அங்கீகரிக்க செய்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

paraiதமிழ் மரபுத் திங்கள் பூர்த்தி விழா வைபவத்தில் நீதன் சான் வலியுறுத்தல்

“கனடா தமிழ் மரபு சபையின் மூலம் நாம் தமிழர் திருநாளான தைப் பொங்கல் தினத்தை தமிழ் மரபுத்  திங்களாகப் பிரகடனப்படுத்த 2010ம் ஆண்டு முதல் முயற்சி செய்து வந்தோம். திரு.லோகன் கணபதி யின் முயற்சியினால் மார்க்கம் மாநகர சபை முதன் முதலாக 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம்13ம் திகதி தமிழ் மரபுத் திங்களை பிரகடனப்படுத்தியது. அதனை தொடர்ந்து ஏஜக்ஸ், பிராம்டன், வுறொக், கிளாறி ங்டன், ஒட்டாவா,ஒஷாவா,பிக்கெறிங்,ரொறண்டோ,விற்வி ஆகிய நகர சபைகளும் தமிழ் மரபுத் திங்களை பிரகடன்படுத்தின. ஒன்ரihறியோ மாகாண அரசு 2014ம் ஆண்டு மார்ச் மாதம் அதனை அங்கீகரித்தது.

பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு அகவை நினைவுப் பரிசு வழங்கிய – முனைவர் மனோன்மனி சண்முகதாஸ்

japaniya24-01-2015 அன்று பெரிய சிவன் கோயில் மண்டபத்தில் ஒரு மாலைப்பொழுது நிகழ்வு நடைபெற்றது. இரண்டு ஊர்கள் ஒன்றாய்க் கூடி நின்றன. திருமலையம், தும்பளையும் சங்கமமாகிய ஒரு தம்பதியர் அந்த நிகழ்வின் பங்காளராக இருந்தனர். முனைவர் மனோன்மனி சண்முகதாஸ் ஜப்பானிய மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ஜப்பானியக் காதல் பாடல்கள் என்னும் நூலை வெளியிட்டு அதனைத் தனது கணவர் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாசின் அகவை 75ன் இனிய பரிசாக வழங்கினார்.புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் புதிய பண்பாட்டின் தொடக்கமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

“நகைச் சுவை பட்டி மன்றங்கள் மூலம் சர்வதேச புகழ் பெற்றவர் லியோனி!”

lionyபாராட்டு விழாவில் டாக்கடர் போள் ஜோசெப்

“நகைச் சுவை கலந்த பட்டி மன்றங்கள் மூலம் புரட்சிகள் பல செய்து இந்தியாவிலும், இலங்கையிலும் மாத்திரமல்ல அகில உலகெங்கும் புகழ் பெற்றவர் திரு.லியோனி அவர்கள். அதனால் தொலைக் காட்சி, இணையத்தளம், You Tube ஆகிய அனைத்திலும் இன்று அவரது நிகழ்ச்சிகளை பார்வையிடக் கூடியதாக இருக்கிறது. சேலத்தில் நான் பணியாற்றிய போது அங்கே ஐயாயிரம் பேரைக் கொள்ளக் கூடிய “மூவேந்தர் அரங்கம்” என்ற பெரிய மண்டபம் இருந்தது. அதில் 500 படுக்கைகள் போடப்பட்டு நோயாளிகள் தங்கி இருந்தனர். அங்கே அடிக்கடி திரு.லியோனி அவர்களின் பட்டி மன்ற சி.டி.யை போடுவார்கள்.

“ஈ குருவி”விழாவில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே! -பிரதம பேச்சாளர் கலாநிதி ஜெயந்தஸ்ரீ பரவசம்!

Biztha2 “ஈ குருவி”விழாவில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே!                                   

“ஆங்கில மொழி பேசப்படும் கனடா நாட்டில் எமது தமிழ் சிறுமிகள் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடியதைக் கேட்டதும் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே…” என பாரதியார் பாடியது போன்று என் செவிகளிலும் தேன் வந்து பாய்ந்தது. எமது மூதாதையர்களின் தியாகத்தால் நான் இன்று இங்கே உங்கள் முன் நிற்கின்றேன். எமது தாய் மொழியான தமிழ் எங்க ளுக்கும் உங்களுக்கும் இடையே உறவினை ஏற்படுத்துகின்றது.

“நந்தா” புகழ் பெற்ற நாயகன் நடிகமணி வி.வி.வைரமுத்து- மதியழகனின் நூல் வெளியீட்டு விழா

mohan with mathy1நாடகக் கலைஞரைப் பற்றிய ஊடக கலைஞரின் ஏடு – மதியழகனின் நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் கந்தவனம்

“தலை சிறந்த நாடக நடிகரான வி.வி.வைரமுத்துவைப் பற்றி பிரபல ஊடகக் கலைஞரான தம்பி மதிய ழகன் அருமையான ஏடு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அரைத்த மாவையே அரைக்காது புதிய நடையி ல் இதனை நாவல் போலவும், நாடகம் போலவும் வானொலி நடையில் படைத்துள்ளார். நாடகம் (நாடு +.அகம்) விரும்பும் இடம். ஊடகம் (ஊடு+அகம்) உள்ளகம் எனப் பொருள்படும். நந்தாப் புகழ்பெற்ற நடிகமணி வி.வி.வைரமுத்துவுக்கும் தனக்கும் இடையிலான தொடர்புகளை இந்நூலின் மூலம் தம்பி மதி யழகன் ஆவணமாக்கி உள்ளார்.

கனடாவில் சிறப்புற நடைபெற்ற கரம்பொனூர் ஒன்றுகூடல்

கரம்பொனூர் மக்களின் ஒன்றுகூடல் முதலாவது வைபவமாக இருந்த போதிலும் எதிர்பார்த்ததை விட வெகு சிறப்பாக  நடைபெற்றது. இதனால் இதனை ஏற்பாடு செய்த கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்தினர் மாத்திரமன்றி இதில் கலந்து கொண்ட அனைவருமே பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

பரதநாட்டியமும் குச்சுப்பிடியும் சங்கமிக்க அரங்கேற்றம் கண்டார் செல்வி சகானா மகேந்திரமோகன்

பாவம், தாளம், ராகத்தின் சங்கமமாக இடம்பெறும் பரதக்கலை பாரதநாட்டில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் மேடையேற்றப்படுகின்றது. தமிழ் நாட்டில் பரதநாட்டியம் எனவும், கேரளாவில் மோகினி ஆட்டம், அந்திராவில் குச்சுப்பிடி எனவும், ஒரிசாவில் ஓடிசி எனவும் வெவ்வேறு பெயர்களோடு இடம்பெறும் இந்திய நடன வகைகளில் தென்னகத்தில் பிரபலமானவை கதகளி, குச்சுப்பிடி, பரதம் என்பன என்பது பலரும் அறிந்தவிடயம். பரதக்கலையைப் பயனுறப் பயின்று மேடையேறுவது என்பது மிகவும் சிரமம் மிக்க ஒன்று. சகானாவின் பெற்றோரான தென்கரம்பனைச் சேர்ந்த மகேந்திரமோகன் தம்பதிகள் அவளுக்கு நடனத்தைக் கற்பிக்கவேண்டும் என்ற பேரவாக் கொண்டு இளமைக்காலம் முதலே பரதநாட்டியத்தைப் பயின்றுகொள்ள வாய்ப்புக்களை நல்கி வந்துள்ளனர். தொடர்ச்சியான முயற்சியின் பயனாக சகானா தனது அரங்கேற்றத்தை கடந்த 19.07.2009 அன்று மார்க்கம் கலையரங்கில் செய்து பாராட்டைப் பெற்றுக்கொண்டார்.

அரங்கேற்றத்தின் மூலம் தமது ஆசிரியைக்கு பெருமையைத் தேடித்தந்த நாட்டியச் சகோதரிகள் செல்விகள் சரண்யா வரதராஜன், தீபிகா வரதராஜன்

செப்டம்பர் மாதம் 1ம் திகதியன்று Markham Theatre performing Arts  விழா மண்டபத்தில் இடம்பெற்ற சரண்யா, தீபிகா வரதராஜன் சகோதரிகளின் அரங்கேற்றத்தினைக் காணக்கிடைத்தது எமக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தெளிந்த நீரோடையில் குளித்தது போன்று மனதிற்குள் ஓர் ஆனந்தம். இந்த அனுபவம் கனடாவில் கிடைப்பது எமக்கு அரிதே.
இந்நிகழ்வு திருமதி. ரஜனி குலேந்திரனின் இண்டாவது அரங்கேற்றம். தாளத்தில் ஒரு பிடிப்பு, கம்பீரம், ஒரு பிசகல் வேண்டுமே, கிடையாது. பட்டு கத்தரித்தாற் போல அனைத்து தீர்மானங்களும், தீர்மானங்களாகவே இருந்தன. வழுவல், தழுவல் இல்லாமல் கடுமையான உழைப்பின் பலன் அன்று நாம் கண்டது.

செல்விகள் திவியா, நர்மிதா சகோதரிகளின் அரங்கேற்றம்

பிரபல இந்திய நடனவித்தகர்களின் நட்டுவாங்கத்தில் திவியா, நர்மிதா ஜெகமோகன் சகோதரிகளின் நடன அரங்கேற்றம் ஆடலுடன் பாடலைக் கேட்பதிலே ஒரு சுகம்.
4.08.2007 அன்று ஸ்காபுரோவில் உள்ள சீன கலாச்சார மண்டபத்தில் திருமதி நிர்மலா சுரேஷின் சலங்கோதய நாட்டியக் கலாமன்றத்தின் மாணவியரும் கரம்பனைச் சேர்ந்த திரு, திருமதி ஜெகமோகன் சாந்தினி தம்பதியினரின் புதல்வியருமான செல்விகள் திவியா, நர்மிதா சகோதரிகளின் அரங்கேற்றம் இடம்பெற்றது.

கரம்பனிலிருந்து கனடாவரை கலைப்பயணம் பண்பை வளர்த்து பாரம்பரியத்தை தரும் இசை ஜனுஷா ரவீந்திரமோகனின் கனிஷ்ட அரங்கேற்றம்

'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்' என்று பாடினான் பாரதி. அந்தப் பாரதியின் கனவை இன்று நனவாக்கி வருபர்கள் புலம்பெயர்ந்து பூமிப்பந்தின் பரப்பெங்கும் பரவி வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழர்கள் என்றால் அது மிகையல்ல.

ஓலிகளானவை மிகுந்த திருத்தமான உச்சரிப்பு உள்ளடக்கத்துடன் சேர்த்து உருவாக்கப்படும் போது அது மந்திரமாகிறது. அதுவே தாளம், இராகம், ஸ்வரம் என்று விரியும்போது சங்கீதமாகிறது. ஆய கலைகளுள் நுண் கலையான இந்தச் சங்கீதம் உலகப் பொது மொழி போன்றதாகும். இராகம், தாளம், ஸ்வரம் போன்வற்றின் அடிப்படையில் எழுந்த இந்த ஆதிக் கலை கீதம், வாத்தியம், நிருத்தியம் என்ற பிரிவுகளையுடையதென்பர். இதைவிட நாதம், ஜதி, ஸ்தாயி என சங்கீதம் விரிந்து பரந்து செல்கிறது. பிணிகளைக்கூட நீக்க வல்ல இக்கலையைக் கற்பதற்கும், ரசிப்பதற்கும் கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஆர்த்தி விஜயநாதனின் கனிஷ்ட அரங்கேற்றம்

ஒரு இனத்தினுடைய முகமும், முகவரியும் அந்த இனத்தினுடைய மொழியும், கலையும், கலாச்சாரமும் பண்பாடும் தான். நமது குழைந்தகளுக்கு நமது கலாச்சாரம் புரிய வேண்டும். பல்கலாச்சார சூழலில் அவர்கள் வாழ்ந்தாலும் பன்னெடுங்காலம் கொண்ட நமது அழியாத கலாச்சாரம் வாழவேண்டும் என்ற எண்ணத்தை நமது குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும்.

அந்தவகையில் கடந்த 03 செப்டம்பர் 2005 ஸ்காபரோ Armenian youth centre இல் நடைபெற்ற செல்வி ஆர்த்தி விஜயநாதன் அவர்களின் சங்கீத கனிஷ்ட அரங்கேற்ற நிகழ்வு நடந்தேறியது.

இந்நிகழ்வுபற்றிய கட்டுரையையும் நிழற்படங்களையும் இங்கே காணலாம்

சுகன்யா, ஷியாமளி, சுரபி சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

 திரு.பரநிருபசிங்கம், திருமதி.சாரதாம்பாள் அவர்களின் புதல்விகள் சுகன்யா, ஷியாமளி, சுரபி ஆகிய மூன்று சகோதரிகளுடைய நடனம் மிகவும் பாராட்டுதற்குரியது. இப்பெண்மணிகள் பரதக்கலை கற்பதில் காண்பித்த ஊக்கம், அடக்கம், பக்தி, பண்பு மிகச் சிறந்தது. கற்கும் சமயத்தில் குருவின் மனதை மகிழ்ச்சியாக வைப்பதில் காட்டிய ஆர்வம் அற்புதமானது.

இந்நிகழ்வுபற்றிய கட்டுரையையும் நிழற்படங்களையும் இங்கே காணலாம்

மெய்மறக்கச் செய்த சவிதாவின் புல்லாங்குழல் இசை அரங்கேற்றம்.

மேலைக் கரம்பனைச் சேர்ந்த ரோகினி, விஜயகுமார் தம்பதிகளின் செல்வப்புதல்வி சபிதாவின் புல்லாங்குழல் இசை அரங்கேற்றம் அனைவரும் பாராட்டத்தக்க முறையில் நவம்பர் 4ம் திகதி ஸ்காபரோவில் அமைந்துள்ள Chinese Cultural Centre இல் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் சவிதாவின் சகோதரனான சஜீவ் விஜயகுமார் மிருதங்கம் வாசித்து நிகழ்வை மேலும் மெருகூட்டினார். அரங்கேற்றத்தின் சில படங்களை இங்கே காணலாம்.

யா/கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கனடா பழைய மாணவர் ஒன்றியத்திற்கு பாராட்டு

சென்ற மார்ச் மாதம் 8ஆம் திகதி (03-08-08) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் முறையே மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, அணிநடை மரியாதை ஏற்றல், பாடசாலை, ஒலிம்பிக், இல்லக்கொடிகள் ஏற்றல், சத்தியப்பிரமாணம், மற்றும் பிரதம விருந்தினரின் ஆசியுரையுடன் போட்டிகள் ஆரம்பமாகின.